SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டெல்லியின் புல் பிரஹலத்பூர் பகுதியில் போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் இரண்டு குற்றவாளிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை!

2020-02-17@ 10:29:53

புதுடெல்லி: டெல்லியின் புல் பிரஹலத்பூர் பகுதியில் போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் இரண்டு குற்றவாளிகள் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். டெல்லியில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகளை பிடிக்க, காவல்துறையின் சிறப்புக் படைவினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில், புல் பிரஹலத்பூரில் இன்று அதிகாலையில் சிறப்பு படை போலீசார், குற்றவாளிகளை பிடிக்க முற்பட்டபோது, அவர்கள் துப்பாக்கியால் சுட்டு தப்ப முயன்றனர். அப்போது, போலீசார் இருவர் மீது குண்டு பாய்ந்துள்ளது. ஆனால், அவர்கள் குண்டு துளைக்காத ஜாக்கெட் அணிந்திருந்ததால் அவர்களுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து போலீசார் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 2 பேர் பலத்த காயமடைந்து விழுந்தனர்.

இதையடுத்து, போலீசார் அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவர்கள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், என்கவுண்டரில் கொல்லப்பட்டவர்கள் ராஜா குரேஷி, ரமேஷ் பகதூர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சமீபத்தில் நடந்த காரவால் நகர் கொலை உள்ளிட்ட பல்வேறு பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் இவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த என்கவுண்டரால் டெல்லியில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் ஐதராபாத்தில் பெண் டாக்டரை கொலை செய்த நால்வர் என்கவுண்டரில் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • twins22

    தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

  • mumbaitrain22

    7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

  • dinosauregg22

    பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

  • locusts22

    எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

  • rainbowtree22

    உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்