தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் அகழாய்வு நடத்தவுள்ள இடத்தில் புடைப்பு சிற்பங்கள் கண்டுபிடிப்பு
2020-02-17@ 00:40:11

ஏரல்: சிவகளையில் அகழாய்வு நடத்தப்படவுள்ள இடத்தில் புடைப்பு சிற்பங்கள் மற்றும் கல்வட்டங்களை வரலாற்று ஆசிரியர் மாணிக்கம் புதிதாக கண்டறிந்துள்ளார்.தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே சிவகளை வரலாற்று ஆசிரியர் மாணிக்கம், அப்பகுதியில் தொல்லியல் களத்தை கண்டுபிடித்தார். இதனை இந்திய மற்றும் தமிழக தொல்லியல் துறையினருக்கு தெரிவித்ததின் பேரில் தமிழக மற்றும் இந்திய தொல்லியல் துறையினர் சிவகளை பகுதியில் வந்து ஆய்வு செய்தனர். இதன் தொடர்ச் சியாக சிவகளையில் அகழாய்வு நடத்தவுள்ள இடத்தில் அவர்கள் 3 அகழாய்வு குழிகளை அமைத்துள்ளனர்.
இதில் சிவகளை பரம்பு பகுதியில் 2 குழிகளும், சிவகளை வெள்ளத்திரடு பகுதியில் ஒரு குழியும் அமைப்பதற்கான நடவடிக்கையை கடந்த வாரத்தில் அதிகாரிகள் மேற்கொண்டனர். அடுத்த வாரம் சிவகளையில் அகழாய்வு தொடங்கப்படவுள்ளது. இந்நிலையில் சிவகளை வரலாற்று ஆசிரியர் மாணிக்கம் அப்பகுதியில் புடைப்பு சிற்பம் மற்றும் கல்வட்டங்களை புதிதாக கண்டறிந்துள்ளார். இந்த புடைப்பு சிற்பம் 11 செ.மீ நீளமும், 9 செ.மீ அகலமும் உள்ளது. இது வரலாற்று ஆய்வாளர்களிடையே முக்கியமானதாக கருதப்படுகிறது.
மேலும் செய்திகள்
சமயபுரம் கோயிலில் தைப்பூச திருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது
நாகர்கோவிலில் மாநகராட்சி பணியாளர்களுக்கு இன்று கொரோனா தடுப்பூசி: அச்சத்தை போக்க விழிப்புணர்வு பிரசாரம்
நாகர்கோவில் மாநகர பகுதியில் குப்பைகள் தரம்பிரித்து வழங்கப்படுகிறதா?..மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு
கொடைக்கானல் மலைப்பகுதியில் ஆயுதப்பயிற்சி மேற்கொண்ட வழக்கில் 7 மாவோயிஸ்டுகள் விடுதலை..!!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிப்ரவரி 19ம்தேதி ரதசப்தமி உற்சவம் : ஒரே நாளில் 7 ரதங்களில் சுவாமி உலா
சமயபுரம் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!
கொரோனா வைரஸ் தாக்குதலால் ஸ்தம்பிக்கும் உலக நாடுகள்!: பலியானோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..!!
தமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..!!
3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்!!
19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்