துரைப்பாக்கத்தில் ஆவணம் இல்லாததால் 20 பைக்குகள் பறிமுதல்
2020-02-17@ 00:28:45

துரைப்பாக்கம்: சென்னை மற்றும் புறநகர் பகுதியில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடு போகின்றன. மேலும் திருட்டு பைக்குகளை வைத்துக்கொண்டு குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதாகவும், தொடர்ந்து கண்ணகிநகர் பகுதியில் முறையான ஆவணம் இல்லாமல் இருசக்கர வாகனங்களை வீடுகளில் பதுக்கி வைத்திருப்பதாகவும் கண்ணகிநகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து நீலாங்கரை உதவி ஆணையாளர் விஸ்வேஸ்வரய்யா தலைமையில் கண்ணகிநகர் இன்ஸ்பெக்டர் வீரக்குமார், செம்மஞ்சேரி இன்ஸ்பெக்டர் ஆகிய 30 பேர் கொண்ட போலீசார் நேற்று அதிகாலை கண்ணகிநகர் மற்றும் எழில்நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வீடுகளின் முன்பு நிறுத்தி வைத்திருந்த வாகனங்களின் பதிவு எண்ணை வைத்து வாகன உரிமையாளர்களை கண்டறியும் செயலி மூலம் வீட்டில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர். இந்த சோதனையில் முறையான ஆவணம் இல்லாமல் வீடுகளில் நிறுத்தி வைத்திருந்த 20 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘‘சென்னை துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், பெருங்குடி, செம்மஞ்சேரி, பெரும்பாக்கம், திருவான்மியூர், நீலாங்கரை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் தொடர்ந்து வாகனங்கள் திருடு போவதாகவும், திருட்டு பைக்குகளை வைத்து கொலை, கொள்ளை, வழிப்பறி, கஞ்சா கடத்தல் உள்ளிட்ட குற்றச்சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். மேலும் கண்ணகிநகர் பகுதியில் முறையான ஆவணம் இல்லாமல் இருசக்கர வாகனங்களை சிலர் பயன்படுத்தி வருவதாகவும் புகார்கள் வந்ததை தொடர்ந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டதாக தெரிவித்தனர். மேலும் இதுபோன்ற சோதனை இப்பகுதியில் தொடர்ந்து நடைபெறும்’’ என்றனர்.
மேலும் செய்திகள்
ஐபிஎஸ் அதிகாரிக்கே இந்த நிலை என்றால் சாதாரண பெண் காவலர்களின் நிலை என்ன? : டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது பாலியல் வழக்கில் நீதிபதிகள் கேள்வி!!
சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது பாலியல் புகார் கூறிய பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு அச்சுறுத்தல் அதிகரிப்பது வெட்கக்கேடானது : தமிழக எம்.பி.க்கள் ஆவேசம்!!
மத்திய அரசு உடனடியாக சமையல் எரிவாயு விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும்...! வைகோ வலியுறுத்தல்
மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா!: சென்னை அண்ணா சாலையில் உள்ள மாற்றுத் திறனாளி குழந்தைகள் பாடல் பாடி வாழ்த்து..!!
அரசு கல்வி நிறுவனங்களில் அனைத்து ஆவணங்களையும் தமிழ் மொழியில் மட்டுமே கையாள வேண்டும்...! உயர்கல்வித் துறை உத்தரவு
தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 5-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும்..! வானிலை ஆய்வு மையம் தகவல்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்