நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த 10வது பட்ஜெட் யாருக்கும் 'பத்தாத பட்ஜெட்': திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து
2020-02-14@ 14:03:43

சென்னை: நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த 10வது பட்ஜெட் யாருக்கும் 'பத்தாத பட்ஜெட்' என திமுக தலைவர் மு.க .ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பாக சபாநாயகர் நல்ல முடிவு எடுப்பார் என நம்புகிறேன் எனவும் தெரிவித்தார். தமிழக அரசின், 2020 - 21ம் ஆண்டிற்கான பட்ஜெட், இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. துணை முதல்வர் பன்னீர்செல்வம், காலை, 10:00 மணிக்கு, பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் பல முக்கிய அம்சங்கள் இடம்பெற்றன. அதிமுக அரசின் கடைசி முழு பட்ஜெட் என்பதால் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
தமிழகத்தின் பன்முக பொருளாதாரம் போன்ற காரணங்களால், கடந்த 2018 - 19 நிதி ஆண்டில் தமிழக மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 8.17 சதவிகிதம் அடைவதை உறுதி செய்து இருக்கிறதாம். அதே போல 2019 - 20 நடப்பு நிதி ஆண்டிலும் 7.27 சதவிகிதம் வளர வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பட்ஜெட் குறித்து கூறியதாவது; அதிமுக அரசின் மொத்த கடன் ரூ.4,56,660 கோடியாக உயர்ந்துள்ளது. தமிழக மக்கள் ஒவ்வொருவர் தலையிலும் தலா ரூ.57,000 கடன் சுமை ஏற்றப்பட்டுள்ளது.
உள்ளாட்சித்துறை, மின்சாரத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கியத்தில் மர்மம் உள்ளது. தமிழக அரசு கடனிலும், மோசடியிலும் மூழ்கியுள்ளது. தலைமை செயலகம் முதல் கிராம நிர்வாகம் வரை கடனில் மூழ்கியுள்ளது. மத்திய அரசை தமிழக அரசு பின்பற்றுவதற்கு இந்த பட்ஜெட் உரையே சாட்சியாக உள்ளது. திமுக ஆட்சியில் இருந்து விலகிய போது கடன்சுமை ரூ.1 லட்சம் கோடியாக இருந்தது. அதிமுக ஆட்சியில் 3 மடங்கு உயர்ந்துள்ளது. டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற வேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு. தமிழக பட்ஜெட்டில் தொலைநோக்கு திட்டமும் இல்லை, வளர்ச்சி திட்டங்களும் இல்லை.
மேலும் செய்திகள்
நன்றி கொன்ற இருவர் நடத்தும் நாடகம்: ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழா குறித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை.!!!
தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 523 பேர் பாதிப்பு: 595 பேர் குணம்; 5 பேர் பலி...சுகாதாரத்துறை அறிக்கை..!
குடியரசு நாளில் விவசாயிகள் மீது தாக்குதலா? : திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கண்டனம்
டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் காவல்துறையே கலவரத்தை உண்டாக்கத் திட்டமிட்டது : வைகோ பாய்ச்சல்
ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகளை அவிழ்க்காமல் அவருக்கு நினைவிடம் திறப்பது ஏமாற்று வேலை : கே.எஸ்.அழகிரி பாய்ச்சல்
பூமித்தாய் பாப்பம்மாள் அவர்களுக்கு பத்மஶ்ரீ விருது..! கழகத்திற்கு கிடைத்திருக்கும் பெருமை: மு.க.ஸ்டாலின் வாழ்த்து
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!
26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!