ஜம்மு-காஷ்மீரில் ஏறத்தாழ இயல்புநிலை திரும்பிவிட்டது..: சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெளிநாட்டு தூதர்கள் கருத்து
2020-02-14@ 12:41:55

புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீரில் ஏறத்தாழ இயல்புநிலை திரும்பிவிட்டதாக அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெளிநாட்டு தூதர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனையடுத்து, அங்குள்ள நிலைமையை ஆய்வு செய்வதற்காக கடந்த மாதம் அங்கு சென்ற 15 பேர் கொண்ட வெளிநாட்டு தூதர்கள் குழு பார்வையிட்டது. இந்நிலையில், 2-வது கட்டமாக ஐரோப்பிய நாடுகள், தென் அமெரிக்க நாடுகள் உள்ளிட்ட 25 நாடுகளின் தூதர்கள் கடந்த 2 நாட்களாக காஷ்மீரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். இந்த குழுவில் ஜெர்மனி, கனடா, பிரான்ஸ், நியூசிலாந்து, மெக்சிகோ, இத்தாலி, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரியா, உஸ்பெகிஸ்தான், போலந்து உள்ளிட்ட நாடுகளின் தூதர்கள் இடம்பெற்றிருந்தனர்.
அவர்களை சந்தித்த ராணுவ அதிகாரிகள், பாதுகாப்பு நிலவரங்களை எடுத்துரைத்தனர். பின்னர் அந்தக் குழு ஜம்மு பகுதியையும் பார்வையிட்டது. நேற்று மாலை டெல்லி திரும்பிய தூதர்கள், காஷ்மீரில் தற்போதைய நிலைமை குறித்து செய்தியாளர்களிடம் பேசினர். காஷ்மீரில் அதிகாரிகள், ராணுவத்தினரை சந்தித்ததாகவும் தற்போது கிட்டத்தட்ட இயல்புநிலை திரும்பிவிட்டதாக பெரும்பாலான தூதர்கள் பதிலளித்துள்ளனர். முன்னதாக, இந்த குழுவில் பங்கேற்குமாறு மத்திய அரசு விடுத்த அழைப்பை ஏற்க ரஷ்யா மறுத்துவிட்டது. இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்பதால், ஆய்வு மேற்கொள்ள விரும்பவில்லை என்றும் அந்நாடு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தமிழக ஆளுநர் ஒரு வாரத்தில் முடிவெடுக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
காடிசன்- சிங்கர் சிக்கலை தீர்த்த இந்திய கணக்கு புலி ஸ்ரீவத்சாவுக்கு விருது: பல ஆண்டு பிரச்னையை தீர்த்து சாதனை
டாலர் கடத்தல் வழக்கில் கேரள ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் மீண்டும் கைது: சுங்க இலாகா அதிரடி
ஆட்டம் காண்கிறது திரிணாமுல் காங்கிரஸ் மேற்கு வங்கத்தில் மேலும் ஒரு அமைச்சர் ராஜினாமா: விரைவில் பாஜ.வில் இணைய வாய்ப்பு
2020ல் எழுத முடியாதவர்களுக்காக சிவில் சர்வீஸ் தேர்வை மீண்டும் நடத்த முடியாது: உச்ச நீதிமன்றத்தில் அரசு உறுதி
தனியார் மருத்துவமனையில் சசிகலாவுக்கு சிகிச்சை அளிக்க கோரிக்கை: பெங்களூரு சிறை நிர்வாகம் ஏற்க மறுப்பு
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!