SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கல்லா கட்டி வந்த அதிகாரிகளுக்கு ஆன்லைன் வைத்த ஆப்பை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2020-02-14@ 04:05:28

‘‘பட்ெஜட் எப்டி இருக்கும்...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘எல்லா தரப்பையும் ஈர்க்கும் வகையிலா இருக்கப்போகுது. சுத்தமா அப்படி இருக்காது. காரணம் நிதி நிலை அந்த லட்சணத்துல இருக்கு. பட்ஜெட் பற்றாக்குறையும் அதிகமாக இருக்கும் நிலையில் புது திட்டங்களால் உடனடி பயன் எதுவும் இருக்காது. தேர்தலை குறிவைத்தே பட்ஜெட் தயாரிக்கப்பட்டு இருக்காம். அதனால் பல திட்டங்கள் மத்திய அரசின் நிதி, உலக வங்கி நிதியை எதிர்பார்த்தே பட்ஜெட் அறிவிப்புகள் இருக்குமாம்... ஆனால் பட்ஜெட்டில் நிதிபற்றாக்குறை பல லட்சங்களை தாண்டுமாம்... அதற்காக சில துறைகளில் இலவச சேவை கட்டண சேவையாக மாறும் என்கிறார்கள்... சில துறைகளில் கட்டணத்தை உயர்த்தி பட்ஜெட்டை சரி செய்யலாம் என்றும் அதிகாரிகள் மட்டத்தில் பேச்சு ஓடுகிறது...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘அப்புறம்...’’
‘‘கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை... மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சைக்கிள், லேப்டாப் போன்றவற்றில் கட்டுப்பாடு ஏற்படுத்தி அலையவிட்டது... வேலைக்கு செல்லும் பெண்களுக்கு சலுகை விலையில் ஸ்கூட்டர்.. டிஎன்பிஎஸ்சி மோசடி... ஹைட்ரோ கார்பன் திட்டம், எட்டுவழிச்சாலை போன்றவற்றை மறக்கடிக்க முயலும் பட்ஜெட்டாக கொண்டு வர முயற்சி இருக்காம்... அதற்காக சலுகையும் இருக்காம்... ஆனால் மக்கள் இப்போது விழித்து கொண்டு விட்டதால் சலுகை பெரிதாக எடுபடாது என்று அதிகாரிகள் மட்டத்திலேயே பேச்சு ஓடுது...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தாமரை கட்சி தேர்தல்ல தில்லுமுல்லாமே... அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘நாகை வடக்கு மாவட்ட தாமரை கட்சியின் மாவட்ட தேர்தல் வைத்தீஸ்வரன் கோயிலில் நடந்தது. தலைவர் பொறுப்பிற்கு திருக்கடையூரை சேர்ந்த ஒருவர், மயிலாடுதுறையை சேர்ந்த மூத்த உறுப்பினர் ஒருவர், ஏற்கனவே தலைவராக இருந்தவர் என மும்முனை போட்டி நிலவியது. தலைமையிலிருந்து அனுப்பப்பட்டவர் தேர்தல் அதிகாரியாக செயல்பட்டார்.
மாநில பொறுப்பில் உள்ள கருப்பும், மண்டல பொறுப்பில் உள்ள சிவப்பும் சேர்ந்து தேர்தலை வழி நடத்தினர். 81 பேர் வாக்களித்ததில், திருக்கடையூர்காரர் 66 வாக்குகளும், மயிலாடுதுறைகாரர் 9 வாக்குகளும், தலைவராக இருந்தவர் 6 வாக்குகளும் பெற்றதாக கூறப்பட்டது. ஆனால் அதிக வாக்குகள் வெற்றிபெற்ற திருக்கடையூர்காரரை தலைவராக அறிவிக்காமல் தற்போது தலைவராக உள்ளவர் வெறும் 6 வாக்குகள் மட்டும் வாங்கியவரை தலைவராக அறிவித்து விட்டார்களாம்.
தொண்டர்களிடம் செல்வாக்கு உள்ள திருக்கடையூர்காரரை தலைவர் ஆக்கினால் தங்களுடைய அரசியல் வளர்ச்சி பாதிக்கப்படும் என்று நினைத்து கருப்பும், சிவப்பும் சேர்ந்து செய்த உள்குத்து வேலை என அறிந்து கொண்ட தொண்டர்கள் கருப்பையும், சிவப்பையும் தேர்தல் நடந்த இடத்திலேயே திட்டி தீர்த்து கேள்விக்கணைகளால் இருவரையும் பாடாய்படுத்திவிட்டார்களாம். நொந்து போன கருப்பும், சிவப்பும் தொண்டர்களின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தலைகுனிந்து எந்த ரியாக்சனும் காட்டாமல் நின்றார்களாம்... இப்படியே போனால் நாகை வடக்கு மாவட்டத்தில் தாமரை என்ற கட்சியே இருக்காமல் போய்விடும் என்று தொண்டர்கள் புலம்புறாங்க...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பட்டா மாறுதல் விஷயத்துல கோவை வருவாய் துறைக்கு பெரிய அடி போல இருக்கே...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘பட்டா மாறுதலில் பெரிய அளவில் வருவாய் துறையினர் கல்லா கட்டி வந்தனர். அதிலும் கோவையில் எக்கசக்கம். கோவையில் தாசில்தார் அலுவலகங்களில் சர்வே எண், சப்-டிவிசன் எண் என பல்வேறு குளறுபடிகளை கூறி, கரன்சி நோட்டுகளை எதிர்பார்த்து, இழுத்தடிக்கின்றனர்.  இதில், கோவை வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் சமாச்சாரம் ரொம்பவே அதிகம். இங்குள்ள சர்வேயர்கள், கரன்சியை கையில் வாங்காமல் அசைந்து கொடுப்பதில்லை. தலைமை சர்வேயர், துணை தாசில்தார் என யாரும் விதி விலக்கல்ல. கரன்சி இல்லாமல் பைல் நகர்வதே இல்லை. இப்போது ஆன்லைனில் ஆட்டோமேட்டிக்காக நடப்பதால் தலையில் இடி விழுந்தமாதிரி கோவையில் உள்ள சில வருவாய் துறையினர் உட்கார்ந்து இருக்காங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘இன்னொரு வருவாய் துறை மேட்டர் இருக்குனு சொல்ல வந்தீங்களே...’’ என்று இழுத்தார் பீட்டர் மாமா.
‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர் தாலுகாவுக்கு உட்பட்ட பாலூரில் கிராம நிர்வாக அலுவலர் தினமும் மதியம் 12 மணிக்கு மேல்தான் அலுவலகம் வருகிறாராம். இவரிடம் ஒரு சான்று பெறுவதற்கே நாள் கணக்கில் அலைய வேண்டுமாம். அதோடு கிராம நிர்வாக அலுவலகத்தில் சிப்பந்தியே நியமிக்கப்படவில்லையாம். அதனால் இவரே ஒருவரை சிப்பந்தி என்று அமர்த்தி அவர் மூலம் முதியோர் உதவித்தொகை உட்பட அரசு நலத்திட்ட உதவிகளுக்கு ₹5 ஆயிரம் வரை வசூலிக்கிறாராம். பள்ளி மாணவர்களுக்கு சான்று என்றால் 500 முதல் 1,000ம் வரை வசூலித்து வருகிறாராம். நிலத்தை அளக்க வேண்டும் என்று கேட்டால் அதற்கு தனியாக 10,000 முதல் 15,000 வரை வசூலித்து விடுகிறாராம். இதில் மற்றொரு வேடிக்கையும் நடத்துகிறாராம்.
கிராம நிர்வாக அலுவலரால் நியமிக்கப்பட்டுள்ள போலி சிப்பந்தி. தேர்தல் காலங்களில் அரசின் மாதாந்திர உதவித்தொகை பெறுவோரிடம் சென்று, அடுத்த மாதம் உங்களுக்கு உதவித்தொகை வராது. நிறுத்தப்பட்டுவிடும். அதற்கு 5,000ம் வரை தர வேண்டும் என்று வசூலித்து விடுகிறாராம்.
அதோடு பாலூரில் டிராக்டர்கள் வைத்துள்ள குண்டானவர் தாராளமாக மணல் ஓட்டிக் கொள்ளவும், நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான புளிய மரங்களில் கிளைகளை வெட்டி விறகாக விற்றுக் கொள்ளவும் அனுமதித்து அதிலும் கணிசமாக பணத்தை பங்காக பெற்று விடுகிறாராம்... பாவம் மக்கள் மனதில் வேதனையோடு விஷயத்தை தங்களுக்குள் பேசிக் கொள்வதை தவிர வேறு வழி இல்லை என்கின்றனர்...’’ என்றார் விக்கியானந்தா.மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • madurai

  கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

 • kurosiya

  கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

 • medition2020

  சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

 • in22222

  கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

 • india2020

  கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்