பிரம்பு உடைந்து குத்தியதில் மாணவிக்கு பார்வை பாதிப்பு: ஆசிரியர் மீது வழக்கு
2020-02-14@ 00:04:27

ராதாபுரம்: கூடங்குளம் தனியார் பள்ளியில் பிரம்பு ஒடிந்து 5ம் வகுப்பு மாணவியின் கண்ணில் குத்தியதில் பார்வை பாதிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 5ம் வகுப்பில் பாடம் நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு பணியில் இருந்த ஆசிரியர் ஆதிநாராயணன் என்பவர், மாணவி ஒருவரின் கையில் பிரம்பால் அடித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது பிரம்பின் ஒரு பகுதி உடைந்து அருகேயிருந்த மாணவி முத்தரசி கண்ணில் குத்தியுள்ளது. இதனால் கண்ணில் வலியால் துடித்த மாணவி முத்தரசியை தலைமையாசிரியை துணையுடன் நெல்லை தனியார் கண் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் மாணவிக்கு பார்வை குறைபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து மாணவியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பள்ளி முன்பு திரண்டு முற்றுகை போராட்டம் நடத்தினர். இதையடுத்து புகாரின் பேரில் கூடங்குளம் போலீசார், ஆசிரியர் ஆதிநாராயணன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
பாம்பனில் விசைப்படகு திடீரென தீப்பிடித்து எரிந்ததால் மீனவர்கள் மத்தியில் பரபரப்பு
முதுகு, காது பகுதியில் தீக்காயத்துடன் இறந்த காட்டு யானை மீது தீப்பந்தம் வீசிய ரிசார்ட் உரிமையாளர்கள் 2 பேர் கைது: சமூக வலைத்தளத்தில் வைரலான வீடியோவால் அதிர்ச்சி
4 மீனவர்கள் சாவுக்கு நீதி கேட்டு காலவரையற்ற உண்ணாவிரதம்
அரோகரா கோஷங்கள் முழங்க கொடியேற்றம் தைப்பூசத் திருவிழா பழநியில் துவங்கியது
சட்டம்-ஒழுங்கு போலீசாரை தனிப்படைக்கு அனுப்புவதா? டிஜிபி பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
5ம் வகுப்பு மாணவனுக்கு கொரோனா காரைக்காலில் அரசு பள்ளி மூடல்
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!