ஊராட்சி தலைவர் கொலை வழக்கில் போலீஸ் ஏட்டு கைது
2020-02-14@ 00:04:24

அந்தியூர்: ஈரோடு மாவட்டம் அந்தியூர், சங்கராப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சின்னத்தங்கம் என்ற ராதாகிருஷ்ணன். இவர், கடந்த 3ம் தேதி கூலிப்படையால் நடுரோட்டில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கொலை வழக்கில் கைதான முக்கிய நபர் அரவிந்த் என்பவரை போலீசார் கடந்த 3 நாட்களுக்கு முன்பு காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது அவரது தாய் மாமனும், சத்தியமங்கலம் போலீஸ் ஏட்டுமான அந்தியூர் மூலக்கடை பகுதியை சேர்ந்த பிரபாகரனுக்கும் (42) கொலை வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் சென்னிமலை கோயில் தேரோட்ட பாதுகாப்பு பணிக்குச் சென்றிருந்த ஏட்டு பிரபாகரனை வெள்ளித்திருப்பூர் போலீசார் கைது செய்து, பவானி ஜேஎம்2 கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகள்
குற்றவாளிகளுடன் கூட்டு சேர்ந்து தொழிலதிபரிடம் 28 லட்சம் பறித்த பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
சென்னை காரம்பாக்கத்தில் பதுங்கி இருந்த சர்வதேச போதைபொருள் கடத்தல் தலைவன் கூட்டாளியுடன் கைது
பாஜ பிரமுகர் மீது தாக்குதல் அதிமுக பிரமுகர் மீது 4 பிரிவுகளில் வழக்கு
சினிமா நடன கலைஞர்கள் இருவருக்கு கத்திக்குத்து
சென்னையில் திருடுபோன 2 வேன் பாளையில் மீட்பு: போலீசில் சிக்காமல் இருக்க டோல்கேட்களை கடக்காமல் மாற்று வழியில் தப்பியவர் கைது
40 சவரன் கொள்ளை வழக்கில் திருப்பம்: நகைக்கு ஆசைப்பட்டு உரிமையாளர் பொய் புகார் கொடுத்தது அம்பலம்
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!