ஆஸ்திரேலியாவில் ஒட்டகம்; ஆப்பிரிக்காவில் யானை: போட்ஸ்வானாவில் யானைகளை வேட்டையாட சட்டப்பூர்வ அனுமதி
2020-02-12@ 17:36:28

போட்ஸ்வானா: அதிகளவில் தண்ணீர் குடிக்கிறது என 10 ஆயிரம் ஒட்டகங்களை சுட்டுக்கொன்ற ஆஸ்திரேலியா அரசை தொடர்ந்து, ஆப்பிரிக்காவில் யானைகளை வேட்டையாட சட்டப்பூர்வ அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடுமையான வறட்சி காலங்களில் மனிதர்கள் குடியிருப்பு பகுதிக்கு வந்து தண்ணீரை ஒட்டகங்கள் குடித்துவிடுவதாகவும், வீட்டு வேலிகளை தட்டுவதுடன், ஏ.சியில் வழியும் நீரை குடிப்பதற்காக வீடுகளை சுற்றிச் சுற்றிவந்து இடையூறு செய்வதாகவும் புகார் எழுந்தது. தெற்கு ஆஸ்திரேலியாவில் அதிகம் காணப்படும் ஃபெரல் வகை ஒட்டகங்கள், மிக அதிகளவில் தண்ணீர் குடித்து மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதால் அவற்றை சுட்டுக்கொல்லும் முடிவை அந்நாட்டு அரசு எடுத்தது. அதன்படி, சுமார் 10 ஆயிரம் ஃபெரல் ஒட்டகங்களை சுட்டுக்கொன்றனர்.
இந்நிலையில், ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில் அதிகரித்து வந்த யானைகளின் எண்ணிக்கையால் யானைகளை வேட்டையாட சட்டப்பூர்வ அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மனித - விலங்கு மோதலை குறைக்கும் முயற்சியாக 70 யானைகளை வேட்டையாடுவதற்கு போட்ஸ்வானா நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக யானைகளை வேட்டையாடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அந்நாட்டு அதிபர் சமீபத்தில் நீக்கினார். இதனிடையே அதிகரித்து வந்த யானைகளின் எண்ணிக்கையால் விளைநிலங்கள் வீணாவதாகவும், மனித - விலங்கு மோதல் அதிகரித்திருப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம்சாட்டி வந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதற்காக ஏலம் மூலம் லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
3 மாதங்களுக்கு பிறகு பொது வெளியில் தோன்றினார் அலிபாபா நிறுவனர் ஜாக் மா
வழியனுப்பும் விழாவில் டிரம்ப் பிரார்த்தனை; கொரோனாவால் பலியான 4 லட்சம் அமெரிக்கர்களுக்கு அஞ்சலி: இன்றிரவு அதிபராக பதவியேற்கும் முன் ஜோ பிடன் உருக்கம்
அமெரிக்க சுகாதாரத்துறை துணை செயலாளராக டாக்டர் ரேச்சல் லெவின் என்ற திருநங்கையை நியமனம் செய்தார் ஜோ பைடன்
கொரோனா வைரசுக்கு எதிரான 100% திறன் கொண்ட இரண்டாவது தடுப்பூசியை கண்டுபிடித்ததாக ரஷியா அறிவிப்பு : உலக நாடுகள் ஆச்சரியம்
வரும் காலங்களில் இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவு மேலும் வலுவாகும்!: அமெரிக்க வெளியுறவு அமைச்சராக உள்ள பிளிங்கன் நம்பிக்கை..!!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..!
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!