SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிப்ட் தலைவருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் நிர்வாகிகளை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2020-02-11@ 00:17:25

‘‘கிப்ட் தரப்பும் அதிரடியில இறங்கிட்டாங்க போல...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கிப்ட் கட்சியில இருந்தா அரசியல் எதிர்காலம் இருண்டுவிடும் என்பதால் பலரும் வேறு கட்சிக்கு தாவிட்டு வர்றாங்க... அந்த இடத்த நிரப்ப தான் புது ஆட்களை நியமிக்கிறாங்க... மற்றபடி அதிரடி எல்லாம் இல்லை. கட்சிக்காரங்க கொடுத்த அதிர்ச்சி வைத்தியத்தால கட்சியை காப்பாற்றும் முயற்சியில கிப்ட் இறங்கி இருப்பதாக அவங்க கட்சி தொண்டர்களே சொல்றாங்க...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘புதுச்சேரி தனமானவர் பதவியை காப்பாற்றிக் கொள்ள எங்கே சரணடைந்து இருக்காரு...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கதர் அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள தனமானவர் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க நோட்டீஸ் அனுப்பி இருக்காங்க. இதற்கிடையே 12ம் தேதி நடைபெறவுள்ள சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் தனமானவர் கலந்து கொள்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அவர் அதில் கலந்து கொண்டால், ஆட்சிக்கு எதிராக அவையில் பேசிவிட்டால் என்ன ஆவது என யோசிக்கிறார்களாம். முன்கூட்டியே நடவடிக்கை எடுப்பதில் கோட்டை விட்டு விட்டதாக முக்கிய நிர்வாகிகள் பேசி வருகின்றனர். அப்படியே தனமானவர் கலந்து கொண்டு ஏதாவது பிரச்னை செய்தால், கூட்டத்தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்ய திட்டமிட்டுள்ளார்களாம்.

ஆனால் இதைப்பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாத தனமானவர் சபைக்கு வருவேன் என அதிரடி காட்டுகிறாராம். அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்காமல் அப்படியே விட்டுவிட்டால், அமைதியாக போய்விடுவதாகவும், தகுதி நீக்கம் போன்ற நடவடிக்கை ஏதேனும் எடுத்தால், நீதிமன்றத்துக்கு சென்று, ஊழல் புகார் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுமாறு மனு செய்ய இருக்கிறாராம். இதையெல்லாம் கூறி தனமானவர் தன் பதவியை காப்பாற்றி கொள்ள முயல்கிறார். புகார் கொடுத்து அடுத்த நிமிடம் ஆதாரம் இருந்து இருந்தால் இந்நேரம் சர்வ அதிகாரம் படைத்த புதுச்சேரியின் பெண், இவ்வளவு நேரம் சும்மா இருப்பாரா... தோண்டி துருவி இருக்க மாட்டார். ஆதாரம் இல்லாததால் இவர் சும்மா கூவிக் கொண்டு இருக்கிறார் என கதர் கட்சியில் இருந்து எதிர்குரல் எழுகிறது...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி என்று கதர் புலம்புறது கேட்கிறதா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘காவல்துறை உங்கள் நண்பன் என்று சொல்லுறாங்க. ஆனால் காவல் துறையில் பணியாற்றிய எனது புகாரை, 11 வருஷமாகியும் கண்டுக்காம இருக்காங்க என்று மூதாட்டி வடித்த கண்ணீர் சர்ச்சையா மாறி இருக்காம். தர்மபுரி மாவட்ட எஸ்பி ஆபீசில் அமைச்சு பணியாளராக பணியாற்றிய அந்த மூதாட்டி 4வருஷத்திற்கு முன்னாடி ரிட்டையர்டு ஆனாராம். அவருக்கு சொந்தமான 14 பவுன் நகை 11 வருஷங்களுக்கு முன்னாடி காணாம போச்சாம். அதை மீட்டுத்தர வேண்டும் என்று தொப்பூர் போலீசில் புகார் கொடுத்தாரம். பலனில்லை என்று எஸ்பி ஆபீசுக்கு போக ஆரம்பிச்சாராம். இதன்படி எஸ்பி ஆபீசில் மட்டும் 160 தடவை மனு கொடுத்தாராம். ஆனால் எந்த பலனும் இல்லையாம். அப்புறம் தான், கலெக்டர் ஆபீசில் மனு கொடுக்க ஆரம்பிச்சாராம். இங்கும் 50 மனுக்களுக்கு மேல் கொடுத்தது தான் மிச்சமாம். இதனால் விரக்தியடைந்து தான், மேற்கண்டவாறு கண்ணீர் விட்டாராம் மூதாட்டி...என்று அவரது வேதனையுடன் தெரிவித்தார் விக்கியானந்தா.

‘‘ஸ்மார்ட் சிட்டி திட்டம்... நிதிகளை சுருட்டும் திட்டமாக மாறி வருவதை கவனிச்சீங்களா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோட்டை ஊர் மாநகராட்சியும் தேர்வு செய்யப்பட்டு, முதற்கட்டமாக ரூ.400 கோடிக்கான பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், ஒவ்வொரு பணிக்கும் கான்ட்ராக்டர்களிடமிருந்து கோட்டையில் கோலோச்சும் புள்ளிகளுக்கு 14 பர்சென்ட் கமிஷனாக போய்விடுகிறதாம். இதனாலதான் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளில் தாமதம் ஏற்படுவதற்கு இதுதான் காரணமாம். இந்த கமிஷன் தொகையை வசூலித்து கொடுப்பதற்காக, வீரமான அமைச்சரின் உதவியாளரான புகழான புலவரின் பெயரை கொண்டவரும், சாமி என்று முடியும் பெயரை கொண்ட இலை கட்சி பகுதி செயலாளர் ஒருவரும்தான் கைகோர்த்து செயல்படுகின்றனராம்.

இந்நிலையில், வசூலித்த கமிஷன் தொகையில் 2 சதவீதம் தமிழ் கடவுளின் பெயரை கொண்ட எம்எல்ஏ ஒருவருக்கு கொடுத்ததாக கூறி கடந்த 4 ஆண்டுகளில் பல கோடிகளை சுருட்டிவிட்டார்களாம். சமீபத்தில்தான் இந்த விஷயம் எம்எல்ஏவின் காதுக்கு எட்டியது. இதைக் கேட்டு அதிர்ந்து போன எம்எல்ஏ, வீரமான அமைச்சருக்கு வேண்டிய கான்ட்ராக்டர் ஒருவரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, ‘கான்ட்ராக்ட் விஷயத்தில் எனக்கு சல்லி பைசா கூட வந்ததில்லை. நான் அந்த விஷயத்தில் தலையிட்டதே கிடையாது’ என்ற உண்மையை போட்டு உடைத்தார்.

இதுகுறித்து வீரமான அமைச்சருக்கு தகவல் சென்றவுடன், ‘4 ஆண்டுகளாக நம்பிக்கை துரோகிகள் நம்மிடம் இருந்துள்ளனர். இனி அவர்களிடம் எந்த பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டாம்’ என்று அதிமுகவில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் கான்ட்ராக்டர்களிடம், கமிஷன் தொகை வசூலிக்க நம்பிக்கையான வேறு ஒருவரை நியமித்துவிட்டாராம். அதோடு, இந்த விவகாரம் சேலம்காரரின் காதுக்கு எட்டாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளிலும் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளனர். இதுதான் கோட்டை மாவட்ட இலை வட்டாரத்தில் தற்போதைய பரபரப்பான பேச்சாக உள்ளது. மத்திய அரசின் நிதியில் கமிஷன் பார்த்தவர்கள் எப்போது வேண்டுமானாலும் ரெய்டில் சிக்க வாய்ப்புள்ளதால், நமக்கு எதற்கு வம்பு என்று சம்பந்தப்பட்ட நபர்களிடமிருந்து விலகி இருக்கவும் பலர் முடிவு செய்துள்ளார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • asusiiiee_dravviii1

  ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!

 • korona-death19

  கொரோனா வைரஸ் தாக்குதலால் ஸ்தம்பிக்கும் உலக நாடுகள்!: பலியானோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..!!

 • tn-school19

  தமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..!!

 • jesee_chrrr1

  3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்!!

 • 19-01-2021

  19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்