SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வசூல் வேட்டையில் தீவிரமாக இறங்கியிருக்கும் தணிக்கை பிரிவின் தலைமை அதிகாரியை பற்றி கூறுகிறார்: wiki யானந்தா

2020-02-10@ 01:05:58

‘‘கோவை மாநகராட்சியில் திடக்கழிவு திட்டத்தில் தில்லாலங்கடி வேலை உச்சகட்டத்தை எட்டிவிட்டதாமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.  ‘‘உண்மைதான். நுண்ணுயிர் உரம் தயாரிக்க 40 கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலவு செய்தும் மக்கும் குப்பையில் உரம் தயாரிக்கும் வேலை நடக்கவில்லை. பல இடங்களில் கூடம் அமைத்து, உரம் தயாரிக்காமல் அப்படியே விட்டு விட்டனர். வார்டு வாரியாக குப்பைகளை சேகரிக்க, தரம் பிரிக்க, வாகனங்களில் கொண்டு செல்ல, வெள்ளலூர் கிடங்கில் குவிக்க, பூச்சிகளை அழிக்க என பல்வேறு பணிகளின் பெயர்களில் திட்டம் போட்டு சுருட்டல் நடக்கிறது. மாநகராட்சிக்கு தேவையான தளவாட பொருட்கள் வாங்கிய ரசீதுகளிலும் மோசடி. ‘குப்பை அதிகாரி’ மீது பல ஆண்டாக பல்வேறு புகார் குவிந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இவர்களை தட்டி கேட்க, கொட்டத்தை அடக்க யாருமில்லையே என மாநகராட்சியில் நேர்மையான சில அலுவலர்கள் வெதும்பி கூறுகின்றனர்’’ என்றார் விக்கியானந்தா.

 ‘‘ஜரூர் வசூலில் ஈடுபடுதாமே ஊராட்சிகள் தணிக்கை அலுவலகம்..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.

 ‘‘வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்பட்ட நிலையில், கலெக்டர், எஸ்பி, டிஆர்ஓக்கள் மட்டும் உடனடியாக நியமிக்கப்பட்டனர். அதேநேரத்தில் பல துறைகளுக்கு இன்னும் அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை. தற்போதுதான் ஒவ்வொரு துறைக்கும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அதேபோல் ஊரக வளர்ச்சித்துறையிலும் புதிய மாவட்டங்களுக்கு திட்ட இயக்குனர், உதவி இயக்குனர் ஊராட்சிகள், தணிக்கை என பல அலுவலர்கள் நியமிக்கப்படுவதற்கான பணிகள் நடந்து வருகிறது. அதற்குள் புதிய மாவட்டங்களில் கல்லா கட்டி விட வேண்டும் என்று இங்குள்ள ஊராட்சிகள் தணிக்கை பிரிவில் உள்ள தலைமை அதிகாரி மும்முரம் காட்டி வருகிறாராம். அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் 7 ஊராட்சி ஒன்றியங்களிலும் பதிவேடுகளை தணிக்கை செய்வதாக கூறி ஒவ்வொரு ஊராட்சியின் சார்பிலும் அந்த ஊராட்சியின் வருவாய்க்கு ஏற்ப ₹10 ஆயிரம் முதல் ₹25 ஆயிரம் வரை வசூலித்து விடுகிறாராம்’’ என்றார் விக்கியானந்தா.
 ‘‘கும்பகோணம் பகுதியில் மிகப்பெரிய ஹோட்டல் ஒன்றை பினாமி பெயரில் வாங்கியும், பெருவணிகர்களுக்கு பல லட்சங்களை வட்டிக்கு விட்டும் வருகிறாராமே ஆளும் கட்சி முக்கிய புள்ளியின் மகன் ஒருவர். அது என்ன விவகாரம்..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.

 ‘‘அந்த மகன் இந்த வகையிலேயே பல கோடி சொத்து சேர்த்துவிட்டாராம். இதுமட்டுமல்லாமல் இப்பகுதி ஒன்றியத்திலுள்ள ஒரு ஊராட்சி மன்ற தலைவரோடு சேர்ந்து வலம் வருகிறாராம். அவர் மாற்று கட்சி. பல வழக்குகளும் அவர் மேல் உள்ளதாம். போகிறபோக்கைப் பார்த்தால் இவர்களின் அராஜகம் அதிகமாவது மட்டுமல்லாமல் இப் பகுதியில் கட்சியே இல்லாமல் ஆக்கி விடுவார்கள் போலிருக்கிறது என அடிமட்ட தொண்டர்கள் நொந்துபோய் உள்ளனராம்’’ என்றார் விக்கியானந்தா.‘‘விவிஐபி பேசும்போது குறட்டை விட்டாங்களாமே அமைச்சர்கள்..’’ ‘‘மாங்கனி மாவட்டத்தில் கால்நடை ஆராய்ச்சி பூங்கா அடிக்கல் நாட்டு விழா நடந்துச்சு. இந்த விழாவில், தமிழக விவிஐபி ஒரு மணி நேரம் பேசினார். அதுவும் சொந்த ஊர் என்பதால், சாதனைகளை சொல்லி, எம்ஜிஆர் பாடலையும் பாடி அசத்தினார். இப்படி ஆவேசமாக விவிஐபி பேசிக்கொண்டிருக்கும்போது, மேடையில் இருந்த முக்கிய அமைச்சர்கள் எல்லாம் குறட்டை விட்டாங்களாம். அதிலும், சமீபத்தில் காலணி சர்ச்சையில் சிக்கிய அமைச்சரின் குறட்டை காதை கிழிச்சதாம். விவிஐபி பேசி முடிக்கும் வரை அயர்ந்த தூக்கத்தில் இருந்தாங்களாம்’’ என்றார் விக்கியானந்தா.

 ‘‘டாஸ்மாக் அலுவலகங்களில் இளநிலை உதவியாளராக நியமிக்கப்பட்டவங்க புலம்புறாங்களாமே..’’ ‘‘தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மண்டல மற்றும் மேலாளர் அலுவலகங்களில் இளநிலை உதவியாளராக பணியாற்ற, சில மாதங்களுக்கு முன்பு தேர்வு நடைபெற்று, 500 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான பணிநியமன உத்தரவு, கடந்த ஜனவரி மாதம் 6ம் தேதி, சென்னையில் முதல்வரால் வழங்கப்பட்டது. இவர்களில் 8 பேர் வராததால், 492 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. அந்த உத்தரவில், ஜனவரி 7ம் தேதி முதல் 9ம் தேதிக்குள் பதவியேற்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.இதுகுறித்து இளநிலை உதவியாளர்களிடம் கேட்டபோது, ‘‘இளநிலை உதவியாளர் பணிநியமனம், அந்தந்த மாவட்டத்திற்குள் போடப்படவில்லை. மாறாக, மண்டலம் விட்டு, மண்டலம் மாற்றி உள்ளனர். குழந்தைகள் படிப்பதால், குடும்பத்தை உடனடியாக அழைத்து வர முடியாத அவல நிலையில், பணிக்கு வந்து சேர்ந்தோம். சம்பளம் ₹24 ஆயிரத்து 495 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிடித்தம் போக 22 ஆயிரம் கிடைக்கும். இந்த சம்பளம் நகரம், கிராமம் என வீட்டு வாடகைப்படியை பொறுத்து மாறுபடும். கடையில் சூபர்வைசராக வேலை பார்த்தபோது, சம்பளம் போக, கூடுதல் வருமானம் கிடைக்கும். இப்போது சம்பளத்திற்குள் குடும்பத்தை நடத்த முடியுமா என்பது கேள்விக்குறியே. அந்தந்த மாவட்டத்திற்குள் பணியாற்றும் இடம் போட்டிருந்தால் கூட குடும்பச் செலவை ஓரளவு சமாளிக்க முடியும் என புலம்புகின்றனர்’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • madurai

  கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

 • kurosiya

  கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

 • medition2020

  சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

 • in22222

  கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

 • india2020

  கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்