SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாஜி தலைமை செயலாளரை பார்த்து தலைதெறிக்க ஓடிய அமைச்சர்களை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2020-02-09@ 00:52:13

‘‘பயம் இருக்கலாம்... தலைமறைவாகும் அளவுக்கு அமைச்சர்கள் ஓடியது பற்றி சொல்லுங்களேன்...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘திருமலை நாயக்கரின் 437வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. அப்போது  மன்னரின் அரண்மனையான திருமலை நாயக்கர் மகாலில் தமிழக அரசு சார்பில் விழா நடத்த திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. விழாவில் பங்கேற்க அமைச்சர்களுக்கு ஒரு சங்கத்தினர் அழைப்பு விடுத்தாங்க. அதற்கு ஒப்புதல் கொடுத்ததால் அழைப்பிதழில் 5 அமைச்சர்களின் பெயர்கள் இடம் பெற்று இருந்தன. ஏற்பாடுகளும் தடபுடலாக செய்யப்பட்டது. விழாவில் சிறப்பு விருந்தினராக தற்போது ஆந்திராவில் வசிக்கும் தமிழக அரசின் மாஜி தலைமை செயலாளர் அழைக்கப்பட்டு இருந்தார். அந்த பெயரை பார்த்ததும், 5 அமைச்சர்களில் 2 பேர் அந்த பக்கமே தலைகாட்டவில்லையாம். தூங்காநகர் மாவட்ட அமைச்சர்கள் 2 பேரும், செய்தித்துறை அமைச்சரும் வந்தனர். அவர்களை அந்த சங்கத்தினர் மேளதாளம் முழங்க பட்டாசு வெடித்து வரவேற்றனர்.

அவர்கள் அரசு சார்பில் அங்குள்ள சிலைக்கு மாலை அணிவித்து விழா மேடை ஏறினர். அவர்களிடம் மாஜி தலைமை செயலாளர் வந்து கொண்டு இருப்பதாக சொல்லப்பட்டதாம். இதை கேட்டதும் அமைச்சர்கள் விழா மேடையில் இருந்து அவசரமாக இறங்கி, காரில் ஏறி தலைதெறிக்க ஓடிவிட்டார்களாம்... ஏற்கெனவே மத்திய அரசின் உளவுப்பார்வையில் இருப்பவருடன் இருப்பது தெரிந்தால் தாமரையால் பிரச்னை... சிறைபறவைக்கு வேண்டியவர் என்பதால் தங்கள் பதவி பறிபோய்விடுமோ என்ற அச்சமும் ஒரு காரணமாம். தப்பியோடியவர்கள் சொன்ன காரணம் என்ன தெரியுமா... நாங்க அரசு சார்பில் சிலைக்கு மாலை அணிவிக்க தான் வந்தோம். விழாவுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை’ என்று எஸ்கேப் ஆகிவிட்டார்களாம். சிறிதுநேரத்தில் அங்கு வந்த மாஜி தலைமை செயலாளர், ‘நான் என்ன செய்தேன்.

எதற்காக அமைச்சர்கள் ஓடுகிறார்கள்? ஒன்றும் புரியவில்லையே?’ என்று அந்த விழாவில் பங்கேற்ற பிரமுகர்களிடம் கேள்வி எழுப்பினாராம். அவர்களும் எங்களுக்கும் புரியல என்று தலையை சொறிந்தார்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘அல்வா மாவட்டத்து அதிகாரி டீச்சராக மாறிய கதையை சொல்லுங்களேன்...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘ நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வட்டார அளவிலான கூட்டம் எனக்கூறி கொண்டு, தினசரி 2 ஒன்றிய பணியாளர்களை அழைத்து கூட்டம் நடத்தி வருகிறார். ஆனால் ஊழியர்களிடம் திட்ட பணிகள் குறித்து கேள்வி கேட்பதை விட, பொது அறிவை சோதிக்கிறேன் என விதவிதமான கேள்விகளை எடுத்து வைப்பது வழக்கமாம். சிலப்பதிகாரத்தை, பெரிய புராணத்தை இயற்றியது யார்? என்பது மாதிரி கேள்விகளையும், திருக்குறளில் முதல் வரியை கூறி, முழு திருக்குறளையும் சொல்லுங்கள் எனவும் ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்களை உசுப்பேற்றுகிறார்.

பிடிஓக்கள் தொடங்கி, கீழ்நிலை பணியாளர்கள் வரை அவர்கள் படித்த படிப்புக்கேற்ப கேள்வி கேட்டு திணறடிக்கிறாராம். வாத்தியாரா போக வேண்டியவரு அதிகாரியா வந்துட்டாரு...’’ என்று அதிகாரிகள் புலம்பறாங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘பொதுப்பணித்துறை முதல்வரிடம் இருக்கும்ேபாது அதே துறை அதிகாரி மீது கிண்டிக்காரரிடம் புகார் கொடுத்து இருக்காங்களாமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘மாங்கனி மாவட்ட பொதுப்பணித்துறை அதிகாரி குறித்து, கிண்டிக்கு பறந்துள்ள புகார் பைல் பரபரப்பை உண்டாக்கியிருக்காம். அல்வா மாவட்டத்தை சொந்தமாக கொண்ட அந்த அதிகாரி, 6 மாசத்துக்கு முன்னாடி தான் கட்டிடம் பிரிவுக்கு இங்கு வந்தாராம். வந்தவுடன் தினக்கூலி பணியாளர்கள் நியமனத்துக்கான ஒப்புதல் வந்ததாம். இதை வைத்து 25 பேரிடம் தலா ₹3லட்சம் லபக்கி விட்டார். ரூ250 கோடி மதிப்பிலான 60 டெண்டர்களை நடத்தினார்.

அதில் அங்கீகாரம் இல்லாத போலி கட்டுமான நிறுவனங்களுக்கே அனுமதி வழங்கினார். திடீரென ரூ5 கோடியில் புதிய வீடு கட்டினார் என்று புகார்கள், சங்கிலித் தொடராய் நீண்டு கொண்டே போகுதாம். கிண்டிக்கும், கிரீன்வேஸ் ரோட்டுக்கும் ஆதாரங்களுடன் புகார் பட்டியல் அனுப்பியாச்சு. அடுத்து நடக்கப்போவது அவர்கள் கையில் என்று குமுறுகின்றனர் கான்டிராக்டர்கள்...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கன்னியாகுமரி பக்கம் தங்கள் கண்களை திருப்பிய முக்கிய புள்ளிகள் பற்றி சொல்லுங்களேன்...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘அதிமுகவை சேர்ந்த பல விஐபிக்களின் பார்வை, இப்போது கன்னியாகுமரி பக்கம் திரும்பி உள்ளது. அடிக்கடி கன்னியாகுமரிக்கு விசிட் அடிக்கும் முக்கிய புள்ளிகள் சிலர், இங்கு லாட்ஜ் அமைக்க திட்டமிட்டு இடம் பார்த்து வருகிறார்கள். கடற்கரை சாலை, திருப்பதி கோயில் அமைந்துள்ள பகுதியில் இடம் பார்க்கும் வேலைகள் நடக்கிறது.

பழைய லாட்ஜூகளை வாங்கி புதுப்பித்துக் கொள்ளலாமா? என்ற ஆலோசனையும் ஒரு பக்கம் நடந்து வருகிறது. ஜெயலலிதா இருந்தபோது அமைச்சர்கள், அதிமுக வி.ஐ.பி.க்கள் வருகையை உளவு பிரிவு போலீசார் ரகசியமாக கண்காணித்து என்னென்ன பேசுகிறார்கள். யார், யாரை சந்திக்கிறார்கள் என்பது பற்றியெல்லாம் தகவல் கொடுப்பார்கள். ஏதாவது ஏடாகூட வேலைகள் பார்ப்பது தெரிந்தால், அந்த வி.ஐ.பி.யின் பதவி மட்டுமல்ல, அவரை அழைத்து செல்லும் மாவட்ட நிர்வாகிகளின் பதவியும் காலியாகும். ஆனால் இப்போது நிலைமை அப்படி இல்லாததால், தங்கள் விருப்பத்துக்கேற்ப பல வேலைகளை ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் செய்கிறார்கள். அந்த வகையில் விரைவில் அதிமுக முக்கிய புள்ளிகளின் பினாமிகளின் பெயர்களில் புதிய லாட்ஜூகள் கன்னியாகுமரியில் ெஜாலிப்பதை பார்க்கலாம் என உள்ளூர் அதிமுகவாசிகள் பேசிக் கொள்கிறார்கள்...’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • madurai

  கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

 • kurosiya

  கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

 • medition2020

  சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

 • in22222

  கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

 • india2020

  கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்