SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேர்தல் வரை அமைச்சர்களின் அதிபுத்திசாலித்தன பேச்சுக்கு தடை விதித்த சேலம்காரர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2020-02-07@ 00:15:24

‘‘இலை கட்சி மேலிடம் கடும் அதிருப்தியில இருக்காமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘இலையின் இரண்டாம் கட்ட தலைகள் வாய்க்கு வந்தபடி பேசி வம்புல மாட்டினது தொடருது... தொடக்க, நடுநிலை வகுப்புக்கு பொதுத்தேர்வு உண்டு என்று கல்வித்துறை அமைச்சர் சொல்லிக் கொண்டிருந்தார். கடைசியில் அதுவும் டிராப்... இதனால இனி கல்வி துறைக்கு வாய்ஸ் இருக்காது என்றே கட்சி தொண்டர்கள் சொல்றாங்க... அதனால கோட்டையான அமைச்சரும் அப்செட்... சிஏஏ பற்றி பேசிய மில்க் மினிஸ்டர்... மாணவனை செருப்பை எடுக்க சொன்ன அமைச்சர்... இஷ்டத்துக்கு உளறி கொட்டும் மைக் அமைச்சர் என்று ஏகப்பட்ட சம்பவங்களால் கட்சி மேலிடம் அந்த நபர்கள் மீது கடும் அதிருப்தியில இருக்காம்... அவர்களை மாற்ற முடியாது... கேள்வியும் கேட்க முடியாது என்பதால் சேலம் விவிஐபி தேர்தல் வரை அதிபுத்திசாலித்தனமாக பேசி சிக்கலை ஏற்படுத்தாதீங்கனு கேட்டுக்கிட்டாராம்... அவர்களும் தலையாட்டிவிட்டு வெளிேய வந்துட்டாங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘அடித்தவரை விட்டு அடிவாங்கியவருக்கு நேர்ந்த கதியை பற்றி கேள்வி பட்டீங்களா..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘நாகர்கோவிலில் நடந்த உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக கருத்து கூறிய அகில இந்திய மீனவர் கதர் கட்சி மண்டை உடைக்கப்பட்டது. மருத்துவமனையில் அட்மிட் ஆகி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். இதில் போலீசுக்கு புகார் ஏதும் அளிக்க வேண்டாம்... அது நமக்கே நாம் வைத்துக் கொள்ளும் ஆப்பு என்று கதர் தலைவர்கள் சொன்னாங்களாம். உங்களை தாக்கியவர்களை சஸ்பெண்ட் செய்வோம்னு உறுதி கொடுத்தாங்களாம். ஆனால் மேலிட முடிவு உள்டா ஆகி... மண்டை உடைந்தவர்தான் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இது அவரது ஆதரவாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளதாம். இதனால் அவரும், அவரது ஆதரவாளர்களும் போலீசில் புகார் அளித்துவிட்டு... கட்சி தாவும் முடிவில் இருக்கிறார்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘சீருடை கட்டபஞ்சாயத்து பற்றி சொல்லுங்களேன்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கோவை கிழக்கு, கோவை மேற்கு, கோவை சென்ட்ரல் மற்றும் போத்தனூர், துடியலூர் பகுதிகளில் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் இயங்குகின்றன. இங்க வரும் புகார் வாங்கி வைப்பதுடன் சரி... வழக்கு நிலவரம் கேட்டு வரும் மனுதாரரிடம் கட்டபஞ்சாயத்து பேசி பெரிய தொகையை கறந்துவிடுகிறார்கள் என்று பாதிக்கப்பட்டவர்கள் புலம்புறாங்க. இதன்மூலம், இருதரப்பிலும் கரன்சி பார்க்கின்றனர். சம்திங் கொடுக்க மறுத்தால், வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ரிமாண்ட் வரை சென்றுவிடுகிறது. பணம் பிடுங்கும் பெண் ஆய்வாளர்களை கண்டு பயந்துபோன பலர், புகார் மனு கொடுக்க காவல் நிலையங்களுக்கு செல்வதில்லை. குறிப்பாக, கோவை கிழக்கு, கோவை மேற்கு, துடியலூர் காவல் நிலைய பெண் ஆய்வாளர்கள் ஆட்டம் ரொம்பவே ஜாஸ்தியாக உள்ளது. இதேபோல்தான், குற்றப்பிரிவிலும் கூத்து நடக்கிறது. ‘மேட்டர் தேறாது' என தெரிந்துவிட்டால், மனுவை கிடப்பில் போட்டு விடுகிறார்களாம். திருட்டு, கொள்ளை, வழிப்பறி, பணம் மோசடி போன்ற பல வழக்குகள் இப்படி நிலுவையில் கிடக்கிறதாம்... பாவம் ெபாதுமக்கள் என்று நேர்மையான போலீசார் மரத்தடியில் நின்று புலம்பிவிட்டு செல்கிறார்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘வேலூர்ல பனி அதிகம் இருக்காமே... தலையே காட்ட முடியலையாமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘அதிமுகவில் புதிய மாவட்டங்களுக்கு தனியாக மாவட்ட செயலாளர்களையும் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்தது. இந்நிலையில் அதிகமுவில் மாவட்டங்கள் பிரிக்கப்பட்ட கணக்குபடி பார்த்தால், கிழக்கு மாவட்ட செயலாளர் ரவி ராணிப்பேட்டை மாவட்ட செயலாளராகிவிடுகிறார். மேற்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் வீரமணி திருப்பத்தூர் மாவட்ட செயலாளராகிவிடுகிறார். ஆனால் வேலூர் மாவட்ட அதிமுக தலையில்லாமல் உள்ளது. நேற்று வந்த அமமுகவில் 4 ஆக பிரித்து மா.செக்கள் நியமிக்கப்பட்டுவிட்டனர். ஆனால் அதிமுகவில் வேலூர் மாவட்டத்திற்கு தனியாக மா.செ நியமிக்காதது ரத்தங்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது... யாரிடம் கட்சி மேட்டரை எடுத்துச் செல்வது என்று அதிருப்தியில் உள்ளனர்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘சொர்க்க வாழ்க்கை அப்பார்ட்மென்ட் பற்றி சொல்லுங்களேன்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘ கோவை தொண்டாமுத்தூர் செல்லும் வழியில் ஒரு அப்பார்ட்மென்ட் உள்ளது. இங்கு, அடிக்கடி அரசுத்துறை கார்கள் சென்று வருகின்றன. குறிப்பாக, தூயமான ஒரு காவல் அதிகாரியின் கார் இங்கேயே இருக்காம். மதுரை, சிவகங்கையில் இருந்து கொள்ளையர்கள் அடிக்கடி இந்த அப்பார்ட்மெண்ட்டுக்கு அழைத்து வரப்படுவதாகவும், அவர்களிடம் டீலிங் பேசப்படுவதாகவும் தகவல் கசிந்துள்ளது. யூனிபார்ம் போட்டு கொள்ளையடிக்க முடியாது, அதனால் நீ அடிக்கிற மாதிரி அடிச்சு கொண்டு வா... நான் புடிக்கிற மாதிரி புடிச்சி பறிமுதல் செய்து விடுகிறேன்...' என வாய்மொழி ஒப்பந்தம் போட்டு, இந்த டீலிங் நீண்ட நாட்களாக ஓடிக்கொண்டிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலதிகாரிகள் ஏதாச்சும் ஸ்பெஷல் டியூட்டி போட்டால், இந்த அப்பார்ட்மென்ட்டிலேயே முகாமிட்டுக்கொண்டு, ‘இதோ புடுச்சிடுறோம் சார்... என பாவலா காட்டிக்கொண்டு, காய் நகர்த்துகிறார்களாம். சுருங்க சொன்னால், இங்கு ஒரு பெரிய வியாபாரமே நடக்கிறது. இங்கு டீலிங் பேசும் அதிகாரிகள், புதுசு,புதுசா சொகுசு கார் வாங்கி, வலம் வருகிறார்களாம். காவல்துறை அதிகாரிகளே இப்படி நடந்துகொண்டால் திருட்டு, கொள்ளை வழக்கில் எப்படி துப்பு துலக்குவது? குற்றவாளிகளை எப்படி பிடிப்பது? ஒரே தர்பார்தான்... போங்க... என நியாயமான போலீசார் புலம்புகின்றனர்...’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • madurai

  கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

 • kurosiya

  கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

 • medition2020

  சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

 • in22222

  கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

 • india2020

  கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்