தொடர்ந்து சரிந்து வந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்தது தங்கத்தின் விலை: சென்னையில் சவரனுக்கு ரூ.200 அதிகரிப்பு!
2020-02-06@ 16:37:58

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப உள்நாட்டில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் உண்டாகிறது. தங்கம் விலை பிப்ரவரி 1ம் தேதி ரூ.31,376 ஆக அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டது. இதுவே அதிகபட்ச விலையாக இருந்தது. இதனால் நகை வாங்குவோர் அதிர்ச்சி அடைந்தனர்.
தங்கம் விலை அதன்பிறகு ஏறுவது கொஞ்சம் இறங்குவது என மாறி மாறி இருந்தது. இந்நிலையில் இன்று(பிப்ரவரி 6ம் தேதி) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.30,896க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.25 உயர்ந்து ரூ.3862-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 40 காசுகள் அதிகரித்து ரூ.49.80க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, சென்னையில் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.49,800 ஆக உள்ளது. தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர்.
மேலும் செய்திகள்
சற்றே அதிகரித்த தங்கம் விலை : சவரனுக்கு ரூ.72 உயர்ந்து, ரூ.36,976-க்கு விற்பனை!!
தமிழகத்தில் பெட்ரோல் விலை 88ஐ எட்டியது: நாடு முழுவதும் தொடர்ந்து அதிகரிப்பு: வாகன ஓட்டிகள் கடும் அவதி
இனி அதிகாலையில் விலை நிர்ணயம்; நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசு உயர்வு: என்இசிசி அறிவிப்பு
இனி தங்க வேட்டை: 37,000-க்கு கீழ் சென்றது தங்கத்தின் விலை: சவரனுக்கு ரூ.48 குறைந்து ரூ.36,816-க்கு விற்பனை
தங்கம் சவரன் 37,000க்கும் கீழ் குறைந்தது
27,000 முதல் 44,000 வரை மாருதி கார் விலை சலுகை பெற இன்றே கடைசி நாள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!
கொரோனா வைரஸ் தாக்குதலால் ஸ்தம்பிக்கும் உலக நாடுகள்!: பலியானோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..!!
தமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..!!
3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்!!
19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்