SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து கிராம சபையில் கையெழுத்து போட்ட அதிமுக எம்எல்ஏ பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2020-01-29@ 01:06:39

‘‘குடியுரிமை திருத்த மசோதாவுக்கு இலை கட்சி எம்எல்ஏ எதிர்ப்பு தெரிவித்த விஷயம் தெரியுமா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘சிவகங்கை மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று நடந்த ஒரு கிராமசபைக் கூட்டத்திற்கு இந்த மாவட்டத்தைச் சேர்ந்த ஆளுங்கட்சி எம்எல்ஏ போனாரு... அங்கு நடந்த கிராம சபை கூட்டத்துல குடியுரிமை சட்டத்தை அமல்படுத்திய மத்திய அரசை கண்டித்தும், சட்டத்தை வாபஸ் பெறக்கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்ததாம்... அதில் எம்எல்ஏ கையெழுத்திட்டதாக பரபரப்பாக பேசிக்கிறாங்கப்பா... ஆளுங்கட்சி எம்எல்ஏ மத்திய பாஜ அரசை எதிர்த்து குடியுரிமை சட்டத்தை வாபஸ் பெறக்கோரி போடப்பட்ட தீர்மானத்தில், கையெழுத்திட்டிருப்பது குறித்து சிலர் எம்எல்ஏவிடம் கேட்டிருக்காங்க... பதறிப்போன அவர், குடியுரிமை சட்டம் தொடர்பாக போடப்பட்ட தீர்மான மினிட் புத்தகத்துல, உடனடியாக கையெழுத்திட்ட பக்கத்தை கிழித்துப் போடுமாறு ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கூறினாங்களாம்... அதற்கு மினிட் புத்தகத்தின் பக்கங்கள் அனைத்திலும் கிராமத்தினர் கையெழுத்திட்டுள்ளனராம்... நாளை இந்த பக்கம் குறித்து யாராவது கோர்ட்டில் வழக்கு தொடுத்தால் எங்களுக்கு சிக்கல் ஆகிவிடும் என்று மறுத்து விட்டனராம்... ஒருவழியாக குடியுரிமை சட்டம் தொடர்பான தீர்மானத்தை அழித்து விட்டு, அந்த இடத்தில் குடிமராமத்து பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று மாற்றி எழுத வைப்பதற்காக, ஊராட்சி அதிகாரிகளை போனில் கெஞ்சியபடியே இருந்தாராம்... கடைசியில எம்எல்ஏ சொன்னபடியே தீர்மானத்தை திருத்தி எழுதிட்டாங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கோவையில என்ன விசேஷம்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கோவை மாநகர எல்லைக்குள் உள்ள ரேஸ்கோர்ஸ் காவல் நிலையம் தமிழ்நாட்டின் சிறந்த காவல் நிலையத்திற்கான விருதை கடந்த குடியரசு தினத்தன்று பெற்றது. காவல் நிலையம் புதுப்பிக்கப்பட்ட சமயத்தில் ‘தெய்வ’மான அதிகாரி ஆய்வாளராக இருந்தார். அப்போது காவல் நிலைய வளர்ச்சி பணிக்காக பாடுபட்டார். கடந்த சில மாதங்களுக்கு முன் மாநகர எல்லைக்குள் ஆய்வாளர்கள் மாற்றப்பட்டபோது தெய்வ அதிகாரியும் மாற்றப்பட்டார். தற்போது ‘சக்தி’யான அதிகாரி ஆய்வாளராக உள்ளார். இவர் ஸ்டேசனுக்கு வந்த சில மாதங்களில் தன்னால்தான் விருது கிடைத்தது என கூறி வருவதாக பேச்சுகள் உலா வருகின்றன. இந்நிலையில் கடந்த வாரம் விருது வாங்கியதற்காக மாநகர கமிஷனர் ரேஸ்கோர்ஸ் ஸ்டேசனில் பணியாற்றும் அனைத்து போலீசாரையும் அழைத்து பாராட்டினார். ஆனால் விருது குழுவினர் ஆய்வு செய்தபோது பாடுபட்ட தெய்வமான அதிகாரியை அழைக்காததால் சக காக்கிகள் அப்செட் ஆகியுள்ளனர்.’’ என்றார் விக்கியானந்தா.
‘‘அரசு துறையில் இது வழக்கமாக ஒன்றுதானே.. ேவறு என்ன மேட்டர் இருக்கு...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘இலைக்கும், மாம்பழத்திற்கும் கூட்டணியில் தொடர்ந்து விரிசல் விழுந்து கிட்டே இருக்காம். அதுவும் விவிஐபி மாவட்டத்தை முன்வைத்து இதற்கான அச்சாரங்கள் இடப்படுவது இலைகட்சியினரை கடும் கொந்தளிப்பில் ஆழ்த்தி இருக்காம். ஐந்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மாம்பழ கட்சியின் கிளை அமைப்பான மாணவர் சங்கம், மாங்கனி மாவட்டத்தில் பிரமாண்ட ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செஞ்சாங்களாம். இதுக்காக நோட்டீஸ் எல்லாம் அச்சடிச்சு, ஊடகங்களுக்கும் அனுப்பிட்டாங்களாம். இது தமிழக விவிஐபிக்கும், சம்பந்தப்பட்ட மினிஸ்டருக்கும் கடும் கோபத்தை உண்டாக்கிருச்சாம். அப்புறம் சம்பந்தப்பட்ட மினிஸ்டரு, மாம்பழத்தின் மேல்மட்ட நிர்வாகிகளை கூப்பிட்டு, இந்த விவகாரத்தில் தெளிவான விளக்கம் குடுத்துட்டோம். இதுக்கு மேலயும் உங்க ஆளுங்க பண்ற ஆர்ப்பாட்டம், கூட்டணியில் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தும் என்று வருத்தப்பட்டாராம். அப்புறம் என்ன பாவ்லா காட்டிய மாம்பழம், போராட்டம் இப்போதைக்கு இல்லை என்று உறுதி கொடுத்திருக்காங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘செம்மரக்கட்டை கடத்தல் விவகாரத்தில் வேலூரில் சில குறிப்பிட்ட  கார்களுக்கு தொடர்பு இருக்காமே....’’ என்றார் பீட்டர்  மாமா.
‘‘ஆந்திர மாநிலம் சேஷாசலம் வனப்பகுதியில் உள்ள செம்மரக்கட்டைகளை மர்ம ஆசாமிகள் வெட்டி வெளிநாடுகளுக்கும், வெளிமாநிலங்களுக்கும் கடத்தி வர்றது தெரிந்த விஷயம் தானே; செம்மரக்கடத்தல் சம்பவங்களில் வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு வர்றாங்க. வேலூர் சத்துவாச்சாரியில் செம்மரக்கடத்தல் வழக்கில் தொடர்புடைய டிஎஸ்பி மற்றும் ரங்காபுரத்தை சேர்ந்த பெண் உள்ளிட்ட 4 பேரை போலீசார் ஏற்கனவே அரெஸ்ட் பண்ணிட்டாங்க...
இப்போ இதுல புதிய விஷயம் கிடைச்சிருக்கு; செம்மரக்கடத்தல் தொடர்புள்ள பழைய குற்றவாளிகள் 3 பேர் மீண்டும் செம்மரக்கடத்தலில் ஈடுபட்டு வர்றதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திராவில் இருந்து செம்மரங்களை கடத்தி வர வேலூரில் இருந்து கொண்டு வந்த திருட்டு வாகனங்கள பயன்படுத்தறாங்களாம்;. கடத்தல் கும்பல் போலீசாரிடம் சிக்கினால் வாகனத்தை அப்படியே நிறுத்திவிட்டு தப்பிக்க இந்த திருட்டு கார்களை பயன்படுத்தறாங்களாம்.
திருப்பதிக்கு சென்று காரில் செம்மரங்களை தமிழகத்திற்கு கடத்தி வந்து கைமாற்றி விட்டால் அதிக பணம் கிடைக்குதாம்;  செம்மரக்கட்டைகளை கடத்த பயன்படுத்தப்படும் கார்கள் வேலூர் அலமேலுமங்காபுரத்தில் உள்ள மெக்கானிக் ஷாப்பில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஆந்திர போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் கடந்த 3 நாட்களாக ஆந்திர போலீசார் சத்துவாச்சாரியில் முகாமிட்டு செம்மரக்கட்டை கடத்தலில் ஈடுபட்டு வந்த பழைய குற்றவாளிகளின் நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணித்து வர்றாங்க.
 இது மட்டுமில்லே...வேலூர், சத்துவாச்சாரி, ரங்காபுரம், அலமேலுமங்காபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் பழைய கார் விற்பனை நிலையங்கள், மெக்கானிக் ஷெட்கள், நீண்ட காலமாக பூட்டிய நிலையில் உள்ள குடோன்களில் ரகசிய சோதனையில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கு... அதற்கேற்ப மெக்கானிக் ஷெட்களின் உரிமையாளர் பெயர், முகவரி, இன்சூரன்ஸ் உள்ளிட்ட விவரங்கள் இல்லாமல் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை பறிமுதல் செய்யும் வகையில் அதிரடி சோதனைக்கு தயாராகி வருகிறார்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.        

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • nailssss_SSS

  உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!

 • gujrat-acc20

  குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!

 • odisaa_satueesss

  ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!

 • 20-01-2021

  20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • asusiiiee_dravviii1

  ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்