SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆறு லட்சத்தை கொடுத்துட்டு சாம்பார் வைக்க தெரியுமான்னு கேட்ட அதிகாரிகளை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2020-01-28@ 00:04:00

‘‘சமையல் வேலைக்கு லகர லகரமா பணத்தை பிடுங்குறாங்களாமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘வேலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகள் மற்றும் உண்டு உறைவிடப் பள்ளிகளுக்கு 112 சமையலர் பணியிடங்கள், 26 தொகுப்பூதிய துப்புரவு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் சொன்னாங்க. அவ்வளவுதான் இடைத்தரகர்கள், இலைக்கட்சிக்காரங்களுக்கு குஷியாகிவிட்டது. அவர்கள் கல்லா கட்ட தயாராகிட்டாங்க.. இந்த பணிக்கு குறைந்தபட்சம் எழுத படிக்க தெரிந்திருந்தால் போதும் என்றும், அதிகபட்சம் 10ம் வகுப்பு தோல்வி அடைந்திருக்க வேண்டும் என்றும் கல்வித்தகுதி நிர்ணயிக்கப்பட்டது. இதனால், 10ம் வகுப்பு தோல்வி அடைந்த விரக்தியில் இருந்தவர்கள், பாஸ் பண்ணாமல் விட்டது நல்லதா போச்சுனு மகிழ்ச்சியில் விண்ணப்பித்தனர். இது இடைத்தரகர்களுக்கு சாதகமாக போய்விட்டது. இதற்கான எழுத்துத்தேர்வு கடந்த 2 நாட்களுக்கு முன்பு முடிந்தது. இதை எழுதியவர்கள் முடிவுகளுக்காக காத்திருக்கின்றனர். ஆனால், மகிழ்ச்சியில் இருந்தவர்கள் ‘கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விட்டதே’ என்று புலம்ப தொடங்கிவிட்டனர்.

காரணம் சமையலர் பணியிடங்களுக்கு புரோக்கர்கள் மூலம் ரூ.6 லட்சம் விலைபேசி பணத்தையும் வசூலித்து வருகிறார்களாம். துப்புரவு பணியாளர்களுக்கு தொகுப்பூதியம் ரூ.3000ம், சமையலர்களுக்கு மாதம் ரூ.15,700 முதல் ரூ.50 ஆயிரம் வரை ஊதியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ரூ.6 லட்சத்தை எப்படியும் எடுத்துவிடலாம் என்ற நம்பிக்கையில் பலர் பணம் கொடுக்க தொடங்கிவிட்டார்களாம். இதில் வேடிக்கை என்னவென்றால் முதலில் கொடுப்பவர்களுக்கு முன்னுரிமை என்ற நிலையில் ‘கிராக்கி’ ஏற்பட்டிருக்கிறதாம்.

விண்ணப்பம் வழங்கும்போது நன்றாக சமைக்க தெரிந்திருப்பவர்களுக்கே வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. எழுத்து தேர்விலும் சாம்பார் வைப்பது எப்படி என்பது போன்ற கேள்விகளே கேட்கப்பட்டது. தற்போது வாய்க்கு ருசியாக சமைக்க தெரிந்திருக்கிறதோ, இல்லையோ? கையில் ரூ.6 லட்சம் ரொக்கம் இருந்தால் போதும் என்றாகிவிட்டதே என்று அந்த துறையை சேர்ந்த நேர்மையான அதிகாரிகளே வேதனை தெரிவிக்கிறார்களாம். அதோடு பணம் கொடுத்து சமையலர் பணி நியமனம் பெறுபவர்கள் மூலம் விடுதிகளில் தங்கியிருப்பவர்களுக்கு ருசியான சாப்பாடு கிடைக்குமா? என்பதும் சந்தேகமாகி விட்டது. இதுதான் வேலூரில் தற்போது அந்த துறையில் ஹாட் டாப்பிக்காக பேசப்படுகிறது.’’ என்றார் விக்கியானந்தா.  

‘‘ஆளுங்கட்சிக்கு ஜால்ரா அடித்தால் பரிசு கிடைக்கும்போல...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘ராமநாதபுரத்துல இந்த ஆண்டு உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகளின் சிபாரிசுகளால் ஏகப்பட்ட பேருக்கு இப்படி விருது, பதக்கம், பாராட்டுச் சான்றுகள் வாரி இறைச்சாங்களாம். தகுதியானவர்களுக்கு கொடுக்கவில்லையாம். காரணத்தை விசாரிச்சா, அரசு ஆதரவாளர் என்ற ஒற்றைத் தகுதி மட்டுமே பார்க்கப்பட்டு, ஊழல் புகாரில் சிக்கியவர்களுக்கும் கூட இந்த ஆண்டு விருது, பாராட்டுச் சான்று மற்றும் முதலமைச்சரின் பதக்கம் வரையிலும் வழங்கி இருக்காங்களாம். இதுல ‘உள்ளாட்சி’ துறையின் அதிகாரி ஒருவர், உள்ளாட்சித் தேர்தலின்போது, ஒன்றிய கவுன்சிலருக்கான வாக்கு எண்ணிக்கை மையப்பொறுப்பாளராக இருந்தாராம். இலை கட்சிக்கு சாதகமாக செயல்பட்டதுடன், மற்ற கட்சிகள் வென்ற இடத்தையும் கூட, காலதாமதமாக அறிவித்தாராம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘புதுச்சேரியில பழைய சங்கதி ஏதாவது இருக்கா...’’ என்றார் பீட்டர்.
‘‘புதுவையில் எம்எல்ஏ ஒருவருக்கு அக்காகுமார், சீட்டு குமார் என பல பட்ட பெயர்கள் உண்டு. இவர் ரூ.20 லட்சம், ரூ.50 லட்சம், ஒரு கோடி என பலவகையான ஏலச்சீட்டுகளை நடத்துகிறார். இவரிடம் புதுவை மாநிலத்தை சேர்ந்த முக்கிய காவல்துறை அதிகாரிகள் சீட்டு போட்டுள்ளனர். காரணம் சம்பளம் இல்லாமல் கிம்பளம் வாங்கினால் மட்டுமே ரூ.50 லட்சம் சீட்டில் சேர முடியும். சமீபத்தில் வரம் கொடுக்கும் ராஜனுக்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பொறுப்பில் இருந்து ஒன்றும் இல்லாத துறைக்கு மாற்றல் ஆகியது. உடனே இன்ஸ்பெக்டர், முழம்குமாரிடம் எனக்கு போக்குவரத்து துறையில் இருந்தால் தான் சீட்டு கட்ட முடியும். இடமாற்றத்தை ரத்து செய்ய வேண்டும் என கண்ணீர் விட்டுள்ளார்.

உடனே முழம்குமார், சி.எம்மிடம் கூறி மீண்டும் அதே போஸ்டிங் கொண்டு வருவேன் என கொக்கரித்துள்ளார். பல லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு முழம்குமார் போலீஸ் மந்திரி போன்று செயல்படுகிறார். இதுமட்டுமின்றி காவல்துறையில் முக்கிய இலாகா வேண்டும் என்றால் முழம்குமாரை தான் அதிகாரிகள் பார்ப்பார்கள். இதற்காக முழம்குமார், சில லகரங்களை கறந்துவிட்டு காரியத்தை கச்சிதமாக முடித்துவிடுவார். இதனால் கட்சியில் முழம்குமாருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இவரால் தான் கட்சிக்கு கெட்ட பெயர் வருகிறது என்று கதர் கட்சிகள் புலம்பறாங்க...’’ என்றார் விக்கியானந்தா.  

‘‘பணம் பத்தும் செய்யுமா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கோவையில பணம் ஆயிரம் செய்யும். கோவையில் கள்ளநோட்டு பிரச்னையில், குற்றவாளிகள் யாரும் கடந்த பல வாரங்களாக சிக்கவில்லை. குற்றவாளிகளுக்கு மதுக்கரை, வடவள்ளி ஆய்வாளர்கள், முன்ஜாமீன் வாங்கற வரைக்கும் உதவிசெய்து விட்டார்களாம். இதை அறிந்த விஐபி., தூயமானவரை அழைத்து, லெப்ட்... ரைட்... வாங்கிவிட்டாராம். தூய்மையான நகரத்திலே தூயமானவரும், மணியானவ௫ம், மானத்தை இப்படி காற்றில் பறக்க விட்டு விட்டார்களே என போலீசார் புலம்புகின்றனர். இந்த விஷயத்தில் அந்த அளவுக்கு விட்டமின், பாய்ந்துவிட்டதாம்...’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 27-02-2020

  27-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • thodar vanmurai20

  கலவர பூமியாக மாறிய தலைநகர்: வன்முறையில் பலியானவர்களின் எண்ணிக்கை 23ஆக அதிகரிப்பு...தொடர்ந்து 4வது நாளாக பதற்றம் நீடிப்பு!

 • brezil20

  பிரேசில் கார்னிவல் 2020: ஆடம்பரமான ஆடைகளில் ஆடல் பாடலுடன் மக்கள் கொண்டாட்டம்!

 • vimaanam20

  பாலகோட் ஏர் ஸ்ட்ரைக் நினைவு நாள்: சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் 2.0 க்கு பயன்படுத்தப்படும் மிராஜ் -2000 போர் ஜெட் விமானங்கள் காட்சிக்கு வைப்பு!

 • indonesiya vellam20

  வெள்ளக்காடாக காட்சியளிக்கும் இந்தோனேசியா..!கனமழையால் பொதுமக்கள் அவதி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்