SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நவீன கொசு வலை

2020-01-27@ 17:11:00

நன்றி குங்குமம் முத்தாரம்

பெரும்பாலான நாடுகளின் முக்கிய பிரச்னை கொசுக்கடி. குறிப்பாக இந்தியாவின் மாநகரங்கள் கொசுவின் பிடியில் சிக்கித் தவிக்கின்றன. ஒரு நூற்றாண்டுக்கு முன்பே கொசுக்கடியிலிருந்து தப்பிக்க உதவும் கொசு வலையைக் கண்டுபிடித்துவிட்டனர். இன்று அதில் புதிய நுட்பத்தை சேர்த்து நவீனப் படுத்தலாம் என்கின்றனர் பிரிட்டனைச் சேர்ந்த லிவர்பூல் மருத்துவக் கல்லுாரி விஞ்ஞானிகள்.

இந்த நவீன தொழில்நுட்பத்தின் மூலம், கொசுக்களை மட்டுமல்ல, இரவில் தொந்தரவு செய்யும் பூச்சிகளையும் கொல்ல முடியும் என்பதை சோதனைகளில் அவர்கள் கண்டறிந்துள்ளனர்.கொசு வலைகளை கொசுக்கள் எப்படி அணுகுகின்றன என்பதை, ‘வீடியோ கேமரா’க்களை வைத்து, பல மணி நேரம் லிவர்பூல் விஞ்ஞானிகள ஆராய்ந்தனர். அதில் தெரிய வந்த ஆச்சரியமான உண்மை என்ன தெரியுமா? உள்ளே உறங்கும் மனிதர்களைக் கடிக்க, வலையின் பக்கவாட்டில் முட்டி மோதும் கொசுக்கள், வலையின் மேற்புறத்தில் அமர்வதும், பின் அங்கும் இங்கும் பறப்பதும் வழக்கமாகக் கொண்டிருந்தன.

இதனால், வலையின் மேற்பரப்பில் பூச்சிக்கொல்லி பூசப்பட்ட குறுக்கு வலை ஒன்றை கட்டினால், பெரும்பாலான கொசுக்களை மட்டுமல்ல, பூச்சிகளையும் கொல்லலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.இந்த குறுக்கு வலை, மனிதர்களின் கைகள் அடிக்கடி படாத வலை யின் மேற்பகுதியில் கட்டியிருப்பதால், பூச்சிக்கொல்லி மருந்தின் நச்சு பாதிப்பிலிருந்து பயனாளிகள் தப்பிக்கலாம். அதே நேரம், குறுக்கும் மறுக்குமாக பறக்கும் கொசுக்கள், நிச்சயமாக குறுக்கு வலையில் சிக்கி, நச்சு மருந்தால் கொல்லப்படும்.

பூச்சிகளும் கொல்லப்படுவது போனஸ்!ஆதலினாலே, விரைவில் கொசு வலை விற்போர், சற்று கூடுதல் கட்டணத்திற்கு, பூச்சிக்கொல்லி மருந்து பூசப்பட்ட குறுக்கு வலையையும் சேர்த்து விற்பார்கள். இது கொசுவை அகற்றுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

க.கதிரவன்


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • accident20

    அவிநாசி அருகே கண்டெய்னர் லாரியும், அரசு பேருதும் மோதி விபத்து: 20 பேர் உயிரிழப்பு....23 பேர் படுகாயம்

  • 20-02-2020

    20-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • poraattam20

    சென்னையில் சட்டசபையை நோக்கி முற்றுகைப் போராட்டம் நடத்துவதற்காக இஸ்லாமிய அமைப்பினர் திரண்டதால் பரபரப்பு

  • aadi20

    மகாராஷ்டிரா பிஎம்சி வொர்லி சீஃபேஸ் பள்ளியில் நோய்த்தடுப்பு முக்கியத்துவம் பற்றி ஆதித்யா தாக்கரே விளக்கம்

  • iyanman2020

    துபாயில் அயர்ன் மேன் உடையணிந்து 6,000 அடி உயரத்தில் விண்ணில் பறந்த சாகசக்காரர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்