மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை விடுத்த நிர்பயா குற்றவாளி முகேஷ்: பதிவாளரிடம் முறையிட நீதிபதி உத்தரவு
2020-01-27@ 13:11:43

புதுடெல்லி: கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்குமாறு நிர்பயா குற்றவாளி முகேஷ் குமார் சார்பில் கோரிக்கை முன் வைக்கப்பட்டது. 2012ம் ஆண்டு டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 1ம் தேதி காலை 6 மணிக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில் குற்றவாளிகள் 4 பேரும் மாறி மாறி சீராய்வு மனு, கருணை மனு ஆகியவற்றை தாக்கல் செய்து வந்தனர். இந்த மனுக்கள் அனைத்தும் அனைத்து நீதிமன்றம் மற்றும் ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டு விட்டது. ஜனாதிபதியால் கருணை மனு நிராகரிக்கப்பட்டு விட்டதால் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது உறுதி என்ற நிலை உருவாகி உள்ளது.
இந்நிலையில் குற்றவாளிகளில் ஒருவனான முகேஷ் குமார் என்பவன், ஜனாதிபதி தனது கருணை மனுவை நிராகரித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளான். அதுமட்டுமல்லாது, முகேஷ் குமார் சார்பில் தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி இன்று உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. அந்த முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே, ஒருவர் தூக்கிலிடப்பட உள்ளார் என்றால், அதை விட அவசர வழக்கு வேறு எதுவும் இல்லை. தூக்கிலிடப்படும் குற்றவாளிகளின் மனுக்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படும். எனவே வழக்கை பட்டியலிடுவது தொடர்பாக பதிவாளரிடம் சென்று முறையிடுமாறு வழக்கறிஞருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் செய்திகள்
நகர உள்ளாட்சி ஊழியர்களுக்கும் ஜோதி சஞ்சீவினி திட்டம் விஸ்திரிக்க வேண்டும்: அமைச்சர் ஆலோசனை
ஒசகோட்டை தொகுதி சுயேச்சை எம்எல்ஏ சரத் பச்சேகவுடா காங்கிரசில் ஐக்கியம்?
மேக் இன் இந்தியா திட்டத்தில் உள்நாட்டில் தயாரிக்கும் பொருட்கள் போலீஸ் கேன்டீனில் வழங்கப்படும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தகவல்
வீட்டு தோட்டம் அமைக்கும் பயிற்சி
கொரோனா விழிப்புணர்வுக்கு பதில் தடுப்பூசியை பிரபலப்படுத்த புது காலர் டியூன்
அரசை ஆதரித்தவர்களிடம் எப்படி பேச முடியும்? வேளாண் சட்ட நிபுணர் குழு உறுப்பினர்களை மாற்றுங்கள்: உச்ச நீதிமன்றத்தில் விவசாயிகள் மனு
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்