தாடியுடன் உமர் அப்துல்லா வீட்டுக்காவலில் பரிதாபம்: மம்தா வெளியிட்ட புகைப்படம்
2020-01-27@ 00:19:56

புதுடெல்லி: காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, நீண்ட தாடியுடன் அடையாளமே தெரியாத அளவுக்கு இருக்கும் புகைப்படத்தை மம்தா பானர்ஜி தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது பிரிவு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்யப்பட்டது. அப்போது அரசியல் தலைவர்கள் அனைவரும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெஹ்பூபா முப்தி ஆகியோரும் இதில் தப்பவில்லை.
இந்நிலையில், வீட்டுக்காவலில் இருக்கும் உமர் அப்துல்லா தாடி வளர்த்து ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி உள்ளார்.
பனி மூடிய பின்னணியில் நீண்ட தாடியையும் கம்பளித் தொப்பி அணிந்தபடி இருக்கும் உமர் அப்துல்லாவின் படத்தை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அது பெரும் வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட மம்தா பானர்ஜி, “உமர் அப்துல்லாவை என்னால் அடையாளம் காண முடியவில்லை. குடியரசு நாட்டில் தான் நாம் இருக்கிறோமா? இதெல்லாம் எப்போது முடிவுக்கு வரும்” என கேள்வி எழுப்பியுள்ளார்.ஒரு முன்னாள் முதல்வரின் நிலைமை இவ்வளவு மோசமானதாக மாறி உள்ளது, அரசியல் கட்சித் தலைவர்களை கவலை அடையச் செய்துள்ளது. வீட்டுக் காவலில் இருக்கும் உமர் அப்துல்லாவை, வெளியாட்கள் யாரும் தொடர்புக் கொள்ள முடியாத நிலையில் உள்ளார்.
மேலும் செய்திகள்
சிறையில் இருந்து வெளிவரும் சசிகலா தீவிர அரசியலில் குதிக்க முடிவு
மதிமுகவில் நிர்வாகிகள் நியமனம்: வைகோ அறிவிப்பு
புதுவையில் கூட்டணிக்கு வாய்ப்பு இல்லாத பட்சத்தில் தனித்து போட்டியிடவும் தயாராகவே இருக்கிறோம்: திருப்பூரில் கே.எஸ்.அழகிரி பேட்டி
தூய்மை பணியாளர்களுக்கு திமுக என்றும் துணை நிற்கும்: மா.சுப்பிரமணியன் பேட்டி
பாஜ ஒட்டிய பேனரை கிழித்த அதிமுக பிரமுகர்
சொல்லிட்டாங்க...
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!