SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ட்வீட் கார்னர்...வசந்த் ராய்ஜி 100!

2020-01-27@ 00:17:02

முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி தற்போது வரை உயிரோடுள்ள இந்திய வீரர்களில் மிக மூத்தவரான வசந்த்  ராய்ஜி மும்பையில் நேற்று தனது 100வது பிறந்தநாளை உற்சாகமாகக் கொண்டாடினார். மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின்  டெண்டுல்கர், ஆஸி. அணி முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாஹ் இருவரும் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.  1940களில் மும்பை, பரோடா அணிகளுக்காக 9 முதல் தர போட்டிகளில் விளையாடி உள்ள வசந்த் ராய்ஜி மொத்தம் 277 ரன்  எடுத்துள்ளார் (அதிகம்: 68). இவர் லாலா அமர்நாத், விஜய் மெர்ச்சன்ட், சி.கே.நாயுடு, விஜய் ஹசாரே ஆகியோருடன்  இணைந்து விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது. சச்சின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட படமும் வாழ்த்து தகவலும்  ரசிகர்களிடையே வைரலாகி உள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 30-09-2020

    30-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • formars29

    வேளாண் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் வெடித்தது போராட்டம்!: இந்தியா கேட் அருகே டிராக்டரை தீயிட்டு எதிர்ப்பு..!!

  • coronadeath29

    கொரோனாவின் பிடியில் சிக்கி தவிக்கும் உலக நாடுகள்!: கொடிய தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியது..!!

  • thee29

    பற்றி எரியும் காட்டுத்தீயால் கண்ணீரில் தத்தளிக்கும் கலிபோர்னியா மாகாணம்!: பலி எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு..!!

  • vadothara29

    குஜராத் மாநிலம் வதோதராவில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 3 தொழிலாளர்கள் பலி!: 10 பேர் இடிபாடுகளில் சிக்கினர்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்