SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பீட்டர் மாமா: தூங்கா நகரத்துல உள்ள இரண்டு குட்டி விஐபிக்களின் தொல்லை கொசுவை விட அதிகமாக இருப்பதை சொல்கிறார் wiki யானந்தா

2020-01-26@ 00:21:07

‘‘லஞ்சம், முறைகேடு செய்வதில் கோயில்களும் தப்பவில்லையாமே, அப்படியா...’’ ்என்றார் பீட்டர் மாமா.‘‘லஞ்சம் வாங்கிவிட்டு அதையே கோயில் உண்டியலில் போட்டு தப்பும் கூட்டம் இருக்கும் வரை... கோயிலில் முறைகேடுகளை தடுக்கவே முடியாது. மாங்கனி சிட்டியில் அறநிலையத்துறை அதிகாரிகள் செய்யும் அலப்பறைக்கு அளவே  இல்லையாம். அனைத்து துறைகளிலும் முடிந்த வரை ‘சுரண்டல்’ என்பதை ஒரு பாலிசியாகவே வச்சிருக்கா. இதில் அறநிலையத்துறை அதிகாரிகள், கோயில் திருப்பணிகளில் ஆட்டைய போட்டது தான் தற்போதைய ஹாட் டாபிக். டவுனில்  பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோயிலில், திருப்பணிகள் இப்போது ஆமை வேகத்தில் நடக்குதாம். கோயில் நிதியில் இருந்து பணிகள் நடப்பதால், இதிலிருந்து சுடுவதில் எந்த தடங்கலும் இல்லையாம். சமீபத்தில் ஆன்மீக ஆர்வலர்  ஒருவர், எதேச்சையாக  கோயிலுக்கு வந்த போது,  நிலவறை கற்கள் தரம் படுமோசமாக இருந்ததை கண்டு அதிர்ந்து போனாராம்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘யாராவது ஒருவர் சாட்டையை கையில் எடுத்தால்தான் லஞ்சம் குறையும்... அதுசரி மதுரையில கொசு தொல்லை தாங்காம அதிகாரிகள் வேறு மாவட்டத்துக்கு டிரான்ஸ்பர் வாங்கிட்டு போகலாமானு யோசிக்கிறாங்களாமே, அப்டியா...’’  என்றார் பீட்டர் மாமா.
‘‘அதிகாரிகள் மட்டத்தில் அந்த ேபச்சு வேகமாக பரவி வருதாம். தூங்காநகரான மதுரையில தூங்க முடியாம, ஒரு முக்கிய அதிகாரி தவிக்கிறாராம். மதுரை மாவட்டத்துல பதவியில இருக்கிற 2 குட்டி விவிஐபிக்களின் தொல்லை தாங்க  முடியலையாம். அதுல ஒருத்தர் தொர்மோகோல்... இன்னொருவர் செருப்பு போடாமல் டிராமா ஆடியவர்.. மாவட்டத்தில் கடந்த 2019ம் ஆண்டு மட்டும் அவரது பதவியில் இருந்த 3 அதிகாரிகள் மாற்றம் செய்து பந்தாடப்பட்டாங்கப்பா...  

கடைசியாக கடந்த ஜூனில் ஒரு அதிகாரி நீண்ட லீவு போட்டு சென்றதும், ஒரு மாதமாக பதவி காலியாகவே இருந்துச்சு... ஜூலையில் பொறுப்பேற்ற புதிய அதிகாரி மீதும் 6 மாதத்திலேயே 2 குட்டி விஐபிக்களும் அடுத்தடுத்து அம்பு வீச  ஆரம்பித்து விட்டாங்க.  அது என்னன்னு விசாரிச்சா... நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தல்ல, மதுரை மாவட்டத்தில் இலை கட்சிக்கு ஏற்பட்ட தோல்விக்கு, அந்த அதிகாரி வளைந்து கொடுக்காதது தான் காரணம் என்று, பழியை தூக்கி அவர்  தலையில போட்டுட்டாங்களாம்... ஜல்லிக்கட்டுல குட்டி விஐபியின் காளைக்கு பரிசு தராம விட்டதுலேயும் முக்கிய அதிகாரியின் தலை உருளுதாம்... அடுத்ததாக, அரசு விழாக்களுக்கு ஒரு குட்டி விஐபியை அழைக்கும்போது, இன்னொருவருக்கு  அதிகாரி மீது அதிருப்தி அதிகரிக்கிறதாம்...

இப்படி நீ.....ண்ட புகார் பட்டியலை 2 குட்டி விஐபிக்களும் தமிழகத்தின் 2 விவிஐபிக்களின் கவனத்துக்கு கொண்டு போய் இருக்காங்களாம். இவரை மாற்றம் ெசய்து, தங்கள் சொல்றபடி  தலையாட்டுபவரை நியமிக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார்களாம்... மாவட்டத்தின் முக்கிய அதிகாரியை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருக்க முடியுமா என்று மேலிடம் தயக்கம் காட்டி வருவதாக அரசு அலுவலர்கள் மத்தியில் பரபரப்பாக  டாக் ஓடுது...’’ என்றார் விக்கியானந்தா.‘‘ மணல் கட்டியே கோட்டீஸ்வரர்கள் ஆன மாவட்டத்தை பற்றி சொல்லுங்களேன்...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘வேலூர் பாலாற்றில் மாட்டு வண்டிகள் மூலம் டோக்கன் கொடுத்து மணல் அள்ளிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பெருமுகை தொடங்கி பள்ளிகொண்டா வரை பாலாற்றில் மணல் கணக்கின்றி சுரண்டப்படுது.  இவ்வாறு  கணக்கின்றி பல முறை மணல் அள்ளி செல்வதற்காக ஒவ்வொரு இடத்திலும் மாட்டு வண்டி ஒன்றுக்கு ரேட் நிர்ணயிச்சு வசூலிக்கிறாங்களாம். இதில் காவல்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை மட்டுமின்றி பத்திரிகை நிருபர்கள் என்ற  பெயரில் டுபாக்கூர்களும் தங்களுக்கும் மாமூல் வெட்ட வேண்டும் என்று மல்லுக்கட்டுகிறார்களாம். அந்த வகையில் மட்டும் விரிஞ்சிபுரம், பொய்கை என இரண்டு இடங்களில் மட்டும் தாலுகா மற்றும் விரிஞ்சிபுரம் காவல் நிலையத்துக்கு மாதம்  ₹5 லட்சம் வரை வசூலாகிறதாம்.

இதில் வேடிக்கை என்னவென்றால் மணல் அள்ளப்படும் இடங்களில் பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் செல்லும் டுபாக்கூர்களுக்கு போலீசாரே சிபாரிசு செய்து மாமூல் வசூலித்து தருகிறார்களாம். இல்லையென்றால் ஆன்லைனில், வராத  பத்திரிகையில் பெயரை போட்டு அதே போலீசை வைத்தே உள்ளே தள்ளிவிடுவோம் என்று மிரட்டுகிறார்களாம்...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘பிளாக்மெயில் பத்திரிகையாளர்களை ஒழிக்கணும்னு நீதிமன்றமே நேரில் களமிறங்கி இருப்பதால... எத்தனை பேர் உள்ளே போகப்போறாங்களோ தெரியல... அது சரி... ெநல்லை அல்வாவுக்கு பேமஸ்... இப்போது மதுவுக்கும் பேமஸ் ஆகிடுச்சு  போல...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘ம். தென்காசி அருகேயுள்ள அச்சன்புதூர் நெடுவயலில் விவசாய நிலங்களுக்கு நடுவே கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக விவசாய பணிகளுக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு  இல்லை என்று ஒரு தரப்பு பெண்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். ஆனால் அதற்கு மறுநாளே அந்த பகுதியைச் சேர்ந்த 20க்கும் ேமற்பட்ட பெண்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மாவட்ட வருவாய் அலுவலர் கல்பனாவிடம் மனு  அளித்தனர். அந்த மனுவில், எங்கள் பகுதி ஆண்கள் அனைவரும் கூலி வேலைக்கு செல்லும் கூலித்தொழிலாளர்கள். உடம்பு அசதிக்காக தினமும் மதுபானம் அருந்துகின்றனர். இந்தக் கடையை எடுத்து விட்டால் மதுபானம் வாங்குவதற்கு  நாங்கள் 12 கி.மீ தூரம் பஸ் மற்றும் இரண்டு சக்கர வாகனங்களில் செல்ல வேண்டும். எனவே எங்கள் ஊரில் மதுபானக்கடை தொடர்ந்து செயல்படுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என கூறினர். அதிகாரிகளுக்கு இது போதாதா, மதுக்கடை  செயல்பட பச்சை கொடி காட்டி விட்டனர். எல்லாம் கலி காலம்டா சாமி என்கின்றனர் கலெக்டர் அலுவலக ஊழியர்கள். பெண்களின் இந்த செயலால் டாஸ்மாக்கும் தென்காசியில பேமஸ் ஆகிவிட்டது...’’ என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News Advertisement
Like Us on Facebook Dinkaran Daily News
 • haryana28

  மதம் மாற மறுத்த இளம்பெண்..பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்டு கொலை!: குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி பல இடங்களில் ஆர்ப்பாட்டம்..!!

 • water28

  தென் அமெரிக்காவில் 2,000 ஆண்டுக்களுக்கு முந்தைய மக்களான மயன் நாகரிகத்தினர் பயன்படுத்திய நீர் சுத்திகரிப்பு மையம் கண்டுபிடிப்பு: ஆச்சர்யத்தில் ஆய்வாளர்கள்..!!

 • biharele28

  கொரோனா பாதிப்புகளுக்கு இடையே பீகார் சட்டசபை தேர்தல் 2020: முதல் கட்டமாக 71 தொகுதிகளில் வாக்கு பதிவு தொடக்கம்..!!

 • pakistanbomb27

  பாகிஸ்தானில் மத பாடசாலையில் பயங்கர குண்டு வெடிப்பு!: சிறுவர்கள் உள்பட 7 பேர் பலி...70க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!!

 • bee27

  6 லட்சத்துக்கும் அதிகமான தேனீக்களை உடலில் சுமந்து சீன இளைஞர் கின்னஸ் சாதனை!: பேஸ்புக்கில் கலக்கும் வித்தியாசமான சாதனை முயற்சி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்