SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விளையாட்டு துளிகள்

2020-01-25@ 00:07:33

* இந்திய கிரிக்கெட் அணி தேர்வுக் குழு உறுப்பினராவதற்கு முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் அஜித் அகர்கர் விண்ணப்பித்துள்ளார். தேர்வுக் குழு தலைவராக அவர் நியமிக்கப்படும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக பிசிசிஐ தரப்பு தகவல் தெரிவிக்கிறது.
*  நாடு முழுவதும் காலியாக உள்ள சுமார் 1500 பயிற்சியாளர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். n வங்கதேச அணியுடன் லாகூரில் நேற்று நடந்த முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. வங்கதேசம் 20 ஓவரில் 141/5 (தமிம் இக்பால் 39, முகமது நயிம் 43). பாகிஸ்தான் 19.3 ஓவரில் 142/5 (அசான் அலி 36, சோயிப் மாலிக் 58*).
* இந்தியா ஏ அணியுடன் கிறைஸ்ட்சர்ச்சில் நேற்று நடந்த 2வது ஒருநாள் போட்டியில் (அதிகாரப்பூர்வமற்றது), நியூசிலாந்து ஏ அணி 29 ரன் வித்தியாசத்தில் வென்றது. நியூசி. ஏ 50 ஓவரில் 295/7 (ஜார்ஜ் வொர்க்கர் 135, நீஷம் 33*, கோல் மெக்கான்சி 56). இந்தியா ஏ 50 ஓவரில் 266/9 (அகர்வால் 37, இஷான் 44, விஜய் ஷங்கர் 41, குருணல் 51, அக்சர் 24).


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-02-2020

    17-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 16-02-2020

    16-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-02-2020

    15-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • attack20

    புல்வாமா தியாகிகளின் முதலாமாண்டு நினைவு தினம்: "இந்தியா ஒருபோதும் மறக்காது" பிரதமர் மோடி உருக்கம்.

  • puthudelhi20

    புது டெல்லியில் 20 வது 'ஹுனார் ஹாத்' திறப்பு விழா: மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி ஆகியோர் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்