இரண்டு செல்ஃபி கேமரா போன்
2020-01-21@ 16:30:17

நன்றி குங்குமம் முத்தாரம்
உலகளவிலான சிறந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களின் பட்டியலில் தனது பெயரை பெரியதாக பதிவு செய்துவிட்ட நிறுவனம் ரியல்மி. விலையில் மட்டுமல்ல, தரம், டிசைன், லேட்டஸ்ட் டெக்னாலஜி என அனைத்து வகை யிலும் தனி முத்திரை பதித்துவருகிற ரியல்மி, வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்துவருகிறது. இந்தியா இதனுடைய முக்கிய சந்தையாக இருப்பதால் இந்தியர்கள் விரும்பும் விதமாக போனை வடிவமைத்து ஆச்சர்யப்படுத்துகிறது ரியல்மி.
சீனாவில் ஜனவரி 7-ம் தேதி அன்று ‘எக்ஸ்50 5ஜி’ என்ற புது மாடலை அறிமுகம் செய்துள்ளது ரியல் மி. இன்னும் இந்த போன் இந்தியாவில் விற்பனைக்கு வரவில்லை. ஆனாலும் இதன் டீசர் இணையத்தில் வைரலாகிவிட்டது. தவிர, போனின் முன்புற போஸ்டர் நம்மை கவர்ந்திழுக்கிறது. ஸ்நாப்டிராகன் 765ஜி சிப்செட் மற்றும் 30W VOOC 4.0 ஃபாஸ்ட் சார்ஜிங் சிஸ்டத்துடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது இந்த போன்.
டேப்லெட்டுக்கு சவால் விடும் விதமாக 6.67 இன்ச்சில் மெகா சைஸில் ஃபுல் ஹெச்.டி டிஸ்பிளே, இணையத்தைப் பயன்படுத்தினாலும் ஒரு நாள் முழுக்க சார்ஜ் நிற்க 4500 mAh பேட்டரி திறன், இரண்டு செல்ஃபி கேமராக்கள், குவாட் செட் அப்பில் 64 எம்பியில் முதன்மை பின்புற கேமரா, மூன்று வகையான ரேம் மற்றும் ஸ்டோரேஜ்கள். இதில் அதிகபட்சமாக 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் என அசத்துகிறது இந்த போன். விலை ரூ.28,000.
மேலும் செய்திகள்
அதிக திறன் கொண்ட இன்டல் சிபியுக்கள்
சான்டிஸ்க் எக்ஸ்ட்ரீம் புரோ போர்ட்டபிள் ஹார்ட்டிஸ்க்குகள் (விலை சுமார் ரூ.49,800 முதல்)
சோனி பிளே ஸ்டேஷன் 5 (விலை சுமார் ரூ.39,990 முதல்)
முகக்கவச ஏர் பியூரிபையர்(விலை சுமார் ரூ.1,600)
ரோபோட் வேக்குவம் கிளீனர் (விலை சுமார் ரூ.24,999)
கடந்த ஆண்டை போலவே பாடத்திட்டம்!: நீட், ஜே.இ.இ நுழைவுத் தேர்வில் எந்த மாற்றமும் இல்லை...தேசிய தேர்வு முகமை..!!
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!