SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தள்ளி வைக்கப்பட்ட மறைமுக தேர்தலில் நடக்கும் குதிரை பேரத்தை சொல்கிறார்: wiki யானந்தா

2020-01-17@ 00:59:12

‘‘புதுச்சேரி கதர் கட்சியில என்ன பிரச்னை...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘எல்லாம் பதவி படுத்தும்பாடு தான்... தனக்கு பதவி கிடைக்கும் என்று நினைத்த கதர் கட்சி எம்எல்ஏ ஒருவர் ஏமாற்றம் அடைந்ததுதான் மிச்சம். தன்னை மாநில தலைமை ஒதுக்குகிறது என்று நினைத்த அவர் எடுத்த அதிரடி முடிவுதான் இப்போது புதுச்சேரியில் ஹாட் டாபிக்... ஏற்கனவே முதல்வருக்கும் துணை நிலை ஆளுநருக்கும் ஏழாம் பொருத்தம். இதுல தனக்கு பதவி கிடைக்காத கோபத்தில் முதல்வர் மீது ஊழல் பட்டியலை கொடுத்தாராம். அதனால அதிர்ச்சி அடைந்த முதல்வர் உடனடியாக டெல்லிக்கு போய்... பர்மிஷன் வாங்கிட்டாராம்... அதன் அடிப்படையில் கட்சியில் இருந்து தற்காலிகமாக தலைவலி கொடுத்த எம்எல்ஏவை நீக்கி இருக்காங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘அவ்வளவு தானா...’’
‘‘இருக்கே... தன்னை நீக்கியது செல்லாது என்று முரண்டு பிடிக்கும் அந்த எம்எல்ஏ... தனக்கு தெரிந்த பல விஷயங்களை ஓபனாக துணைநிலை ஆளுநரிடம் சொன்னாராம்... அவரும் நான் பார்த்துக்கிறேன்னு சொல்லிட்டாராம்... இந்த விஷயம் தன் காதுக்கு வந்ததும் கொதித்துபோன முதல்வர்... நான் ஊழல் செய்தேன்னு நிரூபித்தால் முதல்வர் பதவியில் இருந்து விலகுகிறேன்னு சவால்விட்டு இருக்காராம்... வழக்கம்போல துணை நிலை ஆளுநர் அமைதி காக்கிறார்... இந்த அமைதி எங்கே போய் முடியுமோ என்று கதர் கட்சியினர் பேசிக் கொண்டிருக்கின்றனர்...’’ என்றார் விக்கியானந்தா.

 ‘‘அதிகாரிகள் ஆசியுடன் கொடைக்கானல்ல தனி ராஜாங்கமே நடக்குதாமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘ஐகோர்ட் கிளை உத்தரவுப்படி, கொடைக்கானல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதியற்ற 310 வணிக நிறுவனங்களை மூடினாங்க. அதிகாரிகளும் சீல் எல்லாம் வச்சாங்க. ஆனா, மூடப்பட்டதில் 60 - 70 சதவீதம் தங்கும் விடுதிகள் தானாம். இதுக்கும் சீல் வைச்சு இருந்தாலும் இரவில் ரகசியமாக செயல்படுதாம். பொங்கல் தொடர் விடுமுறைகளில், குவிந்த சுற்றுலாப்பயணிகள், இங்கு தங்கினாங்களாம். அது மட்டுமல்ல... இதற்கு ‘சம்பந்தப்பட்ட துறை  அதிகாரிகள்’,  ஒரு பெருந்தொகையை ‘சம்திங்’ ஆக பெற்றுக்கொண்டு ஒத்துழைத்தார்களாம். நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்ய கிளம்பினால், விடுதி உரிமையாளர்களுக்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தரப்புல இருந்து தகவல் பறக்கிறதாம்.

சில அதிகாரிகள், விடுதி உரிமையாளர்களை மிரட்டி வசூலிப்பதாகவும், புகார் கிளம்புது. இப்படி மறைமுகமாக சட்டவிரோத நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மற்றும் உதவியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் வெளிப்படையாகவே பேசி வர்றாங்க... ஆனால் அதிகாரிகள் கவனம் கரன்சியில் இருப்பதால் யார் குரலும் அவர்கள் காதில் விழவில்லை. இது குறித்து லஞ்ச ஒழிப்பு துறைக்கு சிலர் ரகசிய தகவல்கள் கொடுத்து இருக்காங்க... அதனால பணத்தில் நனைந்த கருப்பு ஆடுகள் விரைவில் சிக்கும் என்ற நம்பிக்கையோடு சொல்கிறார்கள் நேர்மையான சில ஊழியர்கள்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ஏழைகளை புறக்கணித்து வசதியானவர்களுக்கு வீடு ஒதுக்குறாங்களாமே... அது எந்த மாவட்டத்துல...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘வறுமை கோட்டிற்கு கீழ் வசிக்கும் வீடு இல்லாத மக்களுக்கு சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டிக்கொடுத்து ஏழை மக்கள் பயன்படுத்தும் விதமாக இத்திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தில் ஆண்டுக்கு 60 ஆயிரம் வீடுகள் கட்டுவதற்கு ரூ.1,200 கோடி வரை ஒதுக்கி இருக்காங்களாம். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் வசிக்கும் ஏழை மக்களுக்கு இந்த திட்டத்தால் எந்த பயனும் இல்லையாம். ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் பசுமை வீடு திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு செய்வதில் முதலில் ஆளும் கட்சியினருக்கும் வசதி படைத்தவர்களுக்கும்தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்களாம். ஏழை மக்கள் புறக்கணிக்கிறார்களாம்.

அப்படி ஏழை மக்களுக்கு வீடு வேண்டுமென்றால், சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை சம்திங் கொடுக்க வேண்டுமாம். இப்படி ஜோலார்பேட்டை ஒன்றியம் முழுவதும் பசுமை வீடு திட்டத்தில் வசூல் வேட்டை நடத்து வருகிறதாம். ஜோலார்பேட்டை மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் இதே வசூல் வேட்டை தான் தொடர்கிறது என்று பசுமை வீடு பெற விண்ணப்பித்த மக்கள் புலம்பித்தீர்க்கின்றனர்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மறைமுக தேர்தல் தள்ளி வைக்கப்பட்ட பகுதிகளில் கவுன்சிலர்களின் நிலை எப்படி இருக்கு...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கோரத்தை காரணம் காட்டி அதிகாரிகள் மறைமுக தேர்தலை தள்ளி வைச்சாங்களாம்... சில இடங்களில் அதிகாரிகளே அரசியல்வாதிகளுக்கு குருவாக மாறி இதுபோன்ற ஐடியாக்களை அள்ளி வீசி... தங்கள் பாக்கெட்டை ரொப்பிக் கொண்டு போனாங்களாம்... இப்போதைக்கு மறைமுக தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ள இடங்களில் எதிர்கட்சியினரை வளைக்கும் பணியில் இலை தரப்பு இறங்கி இருக்காம்... திங்கள் கிழமைக்கு பிறகு மறைமுகத் தேர்தல் களைகட்டும் என்கிறார்கள் அரசியல்வாதிகள்... ஆனால் பிரச்னை எழுமோ என்ற அச்சத்தில் காக்கிகள் கூடுதல் பந்தோபஸ்த்து தர வேண்டும் என்று மாவட்ட கண்காணிப்பாளருக்கு தகவல் கொடுத்து இருக்காங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News Advertisement
Like Us on Facebook Dinkaran Daily News
 • haryana28

  மதம் மாற மறுத்த இளம்பெண்..பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்டு கொலை!: குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி பல இடங்களில் ஆர்ப்பாட்டம்..!!

 • water28

  தென் அமெரிக்காவில் 2,000 ஆண்டுக்களுக்கு முந்தைய மக்களான மயன் நாகரிகத்தினர் பயன்படுத்திய நீர் சுத்திகரிப்பு மையம் கண்டுபிடிப்பு: ஆச்சர்யத்தில் ஆய்வாளர்கள்..!!

 • biharele28

  கொரோனா பாதிப்புகளுக்கு இடையே பீகார் சட்டசபை தேர்தல் 2020: முதல் கட்டமாக 71 தொகுதிகளில் வாக்கு பதிவு தொடக்கம்..!!

 • pakistanbomb27

  பாகிஸ்தானில் மத பாடசாலையில் பயங்கர குண்டு வெடிப்பு!: சிறுவர்கள் உள்பட 7 பேர் பலி...70க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!!

 • bee27

  6 லட்சத்துக்கும் அதிகமான தேனீக்களை உடலில் சுமந்து சீன இளைஞர் கின்னஸ் சாதனை!: பேஸ்புக்கில் கலக்கும் வித்தியாசமான சாதனை முயற்சி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்