SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாளை பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் விற்பனை களைகட்டியது: மார்க்கெட்டுகளில் கூட்டம் அலைமோதுகிறது

2020-01-14@ 20:31:13

நெல்லை: தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் சந்தைகளில் காய்கறி விற்பனை இன்று களைக்கட்டியது. பொங்கல் திருவிழாவுக்கான கரும்புகள், மஞ்சள்குலை, பனங்கிழங்கு உள்ளிட்ட பொருட்கள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகை நாளை 15ம்தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கலை முன்னிட்டு கடந்த ஒரு வாரமாக மார்க்கெட்டுகளில் பொங்கல் பொருட்கள் விற்பனை நடந்து வருகிறது. திருமணம் ஆன தம்பதிகளுக்கு பொங்கல் படி கொடுக்க பொருட்களை அள்ளிக்கொண்டு பலர் வேன்களிலும், கார்களிலும் சென்று தங்கள் தாய்வீட்டு சீதனத்தை அளித்து வருகின்றனர். இந்நிலையில் பொங்கலுக்கு முந்தைய தினமான இன்று மார்க்கெட்டுகளில் காய்கறிகள், கரும்பு, மஞ்சள், பனை ஓலை, பனங்கிழங்கு, அடுப்புக்கட்டி மற்றும் மண்பாண்ட பொருட்களின் விற்பனை களைக்கட்டி வருகிறது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட நகர்புற பகுதிகளில் ஏராளமான புதிய தற்காலிக கடைகள் மார்க்கெட்டுகள் அருகேயும், முக்கிய சாலைகளிலும் உருவாக்கப்பட்டு விற்பனையில் சக்கை போடு போட்டு வருகின்றன.

நெல்லை நயினார்குளம் மொத்த மார்க்கெட், பாளை காந்தி மார்க்கெட், டவுன் போஸ் மார்கெட், தச்சை மொத்த காய்கனி சந்தை,  பாளை மகராஜநகர், மேலப்பாளையம், டவுன் கண்டியப்பேரி உழவர் சந்தைகள் மற்றும் ஆலங்குளம், பாவூர்சத்திரம் காய்கறி சந்தைகள் மற்றும் தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட நகரங்களில் மட்டுமின்றி கிராமங்களில் உள்ள காய்கறி கடைகளிலும் மூடைமூடையாக காய்கறிகள் வந்து இறங்கிய வேகத்தில் விற்பனையாகி வருகின்றன. மொத்த சந்தைகளில் பொங்கலையொட்டி காய்கறிகள் கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.அனைத்து சந்தைகளின் வெளிப்பகுதிகளிலும் கரும்பு மற்றும் காய்கறிகளை குவித்து வைத்து விற்பனை செய்து வருகின்றனர். கடந்த இரு தினங்களாக சில காய்களின் விலை படிப்படியாக உயர்ந்தும் வருகிறது. முருங்கைகாய்க்கு சீசன் இல்லை என்பதால் அதன் விலை உச்சத்தில் உள்ளது. முருங்கைக்காய் கிலோ ரூ.200க்கு விற்பனையாவதால் அதை பெயருக்கு சிலர் வாங்கி செல்கின்றனர். கத்தரி ஒரு கிலோ ரூ.125, பல்லாரி ரூ.65, சின்ன வெங்காயம் ரூ.125, அவரை ரூ.65, பாகற்காய் ரூ.50, மாங்காய் ரூ.130, இஞ்சி ரூ.74, உருளை கிழங்கு ரூ.36 என பல்வேறு காய்கறிகளின் விலை உயர்ந்தே காணப்படுகிறது.

மற்ற காய்கறிகளின் விலை விபரம்:(கிலோ கணக்கில்) பூசணி மற்றும் புடலை ரூ.20, பீர்க்ககாய் ரூ.40, வெண்டை ரூ.35, சவ்சவ் ரூ.18, பீட்ரூட் ரூ.40, காலிபிளவர் ரூ.40, சேனை, சேம்பு, கருணை, சிறுகிழங்கு உள்ளிட்ட கிழங்கு வகைகள் ரூ.50, முள்ளங்கி ரூ.20 என காணப்பட்டது. நெல்லை மார்க்ெகட்டுகளில் மஞ்சள் குலை விலை சிறியது ரூ.20க்கும், பெரியது ரூ.50க்கும் விற்கப்பட்டு வருகின்றன.இவ்வாண்டு கரும்பு கட்டுகள் விலை இயல்பாக காணப்படுகிறது. கடந்தாண்டு ஒரு கட்டு கரும்பு (15 எண்ணம் கொண்டது) ரூ.450 முதல் ரூ.500 வரை விற்பனையானது. இவ்வாண்டு 10 எண்ணம் கொண்ட கரும்பு கட்டுக்கள் ரூ.300க்கும், 15 எண்ணம் என்றால் ரூ.400க்கும் விற்கப்பட்டு வருகிறது. 25 பனங்கிழங்குகள் அடங்கிய கட்டு ரூ.100 விற்கப்படுகிறது. 5 எண்ணம் என்றால் ரூ.20க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கதலி, நாட்டு பழங்கள் ஒரு சீப்பு ரூ.30 முதல் 40 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. பூக்கள், கலர் கோலப்ெபாடிகள் விற்பனையும் மார்க்கெட்டுகளில் களைக்கட்டியது. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் சந்தைகளில் வியாபாரம் சூடு பிடித்ததையடுத்து கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

தூத்துக்குடி நிலவரம்:
பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் பொங்கலுக்கு தேவையான கரும்பு, வாழைத்தார், மஞ்சள்குலை, காய்கறிகளின் விற்பனை தூத்துக்குடி மாவட்டத்தில் களை கட்டியுள்ளது. தூத்துக்குடி காய்கறி மார்க்கெட்டில் பல்வேறு விதமான காய்கனிகள், வாழைத்தார், கரும்பு, மஞ்சள்குலைகளின் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது.தூத்துக்குடி மார்க்கெட்டிற்கு சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், வல்லநாடு, ஓட்டப்பிடாரம், குரும்பூர், நாசரேத், திருச்செந்தூர், தென்திருப்பேரை, ஆழ்வார்திருநகரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் வெளியூர்களில் இருந்தும் வாழைத்தார்கள் லட்சக்கணக்கில் விற்பனைக்காக வந்து குவிந்துள்ளன. வாழைத்தார்களின் வரத்து அதிகமாக இருந்தபோதும் அவற்றின் விலையும் அதிகமாக இருக்கிறது.இதுபோன்று காய்கறிகளின் வரத்து அதிகமாக இருந்தபோதும் விலையும் அதிகமாகவே உள்ளது. காய்கறிகளின் விலை இன்றும் உயர வாய்ப்புள்ளது. குறிப்பாக வாழைத்தார்கள் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் கொண்டு வரப்பட்டு ஏலமிடப்பட்டு, இங்கிருந்து திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், தாராபுரம், நிலக்கோட்டை, வத்தலகுண்டு, உசிலம்பட்டி, திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

மதுரை, ஒட்டன்சத்திரம், தேனி, பெரியகுளம், மேலூர் பகுதிகளில் இருந்து லாரிகளில் கரும்பு கட்டுகள் வந்து விற்பனைக்காக குவிந்துள்ளன. தற்போது 15 கரும்புகள் கொண்ட கட்டு ஒன்று ரூ.450க்கு விற்பனையாகிறது.மேலும் பொங்கலை முன்னிட்டு உடன்குடி பனங்கிழங்குகள் விற்பனை சூடுபிடித்துள்ளது 25 பனங்கிழங்குகள் கொண்ட ஒரு கட்டு 120 ரூபாய்க்கும் பிற பகுதி கிழங்குகள் கட்டு ஒன்று ரூ.100க்கும் விற்பனையாகிறது.பொங்கல் பூ எனப்படும் கன்னுப்பிள்ளை பூ விற்பனையும் பரபரப்பாக நடந்து வருகிறது. புத்தாடைகள், பொங்கல்படி பொருட்கள், உள்ளிட்ட அனைத்து பொருட்களை வாங்கியும் வருகின்றனர். இதனால் காய்கறி மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனால் மாநகரின் முக்கிய பகுதிகளில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக காய்கனி மார்க்கெட், பாளை ரோடு, தேவர்புரம்ரோடு, பாலவிநாயகர் கோயில் தெரு, பழைய பஸ் நிலையம், ஜின்பாக்டரி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் பொங்கல் பொருட்களை விற்பனை செய்யும் பிளாட்பார கடைகள், கரும்பு கடைகள் துவக்கப்பட்டுள்ளன. மேலும் இவற்றை வாங்கி செல்ல வரும் ஆட்டோக்கள், வேன்கள், லோடு ஆட்டோக்கள், டூவீலர்கள் உள்ளிட்டவை எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் குறுக்கும் நெடுக்குமாக நிறுத்தப்பட்டுள்ளன. இவற்றால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்ட வண்ணம் உள்ளது. உடனடியாக போக்குவரத்து போலீசார் தலையிட்டு போக்குவரத்தில் கடந்த ஆண்டு போல இந்த ஆண்டும் மாற்றம் செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • ramukudi

  குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!

 • autoooo_maaa

  சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!

 • vilaaaa_neeemm

  அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!

 • 26-01-2021

  26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • sun-dong25

  அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்