சிஏஏ, என்ஆர்சி விவகாரத்தில் தமிழகத்தில் எந்த சிறுபான்மை மக்களும் அச்சப்பட வேண்டியதில்லை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி
2020-01-14@ 16:27:58

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை பேட்டி அளித்த முதல்வர் பழனிசாமி, இதனை தெரிவித்தார். மேலும் உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முறையாக நடைபெற்றது என்று குறிப்பிட்ட அவர், குறிப்பாக சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் எந்தத் தவறும் நடைபெறவில்லை என்று கூறினார். உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முறையாக நடைபெற்றது என கூறினார். தொடர்ந்து பேசிய அவர், தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது, ஆனால் தமிழகத்தில் அமைதியை சீர்குலைக்க சிலர் முயற்சிக்கிறார்கள் என்று கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது,'சிஏஏ, என்ஆர்சி விவகாரத்தில் தமிழகத்தில் எந்த சிறுபான்மை மக்களும் அச்சப்பட வேண்டியதில்லை என கூறினார். குறிப்பாக இஸ்லாமிய மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என தெரிவித்தார்ஆட்சி மொழிக்குழு ஆய்வு செய்ய வருவதாக எந்த தகவலும் வரவில்லை என கூறினார். கூட்டணியை பொறுத்தவரை சில இடங்களில் விட்டுத்தர வேண்டிய சூழ்நிலை உருவாகிறது என தெரிவித்தார். எங்களைப் பொறுத்தவரை மக்கள் தான் எஜமானர்கள், நீதிபதிகள்; அவர்கள் எண்ணப்படி ஆட்சி நடைபெறும் என கூறினார்.
மேலும் செய்திகள்
பேரறிவாளன் விவகாரத்தில் நடப்பது என்ன?.. உச்சநீதிமன்றத்தில் விளக்கம் கேட்கிறாரா தமிழக ஆளுநர்?
நன்றி கொன்ற இருவர் நடத்தும் நாடகம்: ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழா குறித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை.!!!
தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 523 பேர் பாதிப்பு: 595 பேர் குணம்; 5 பேர் பலி...சுகாதாரத்துறை அறிக்கை..!
குடியரசு நாளில் விவசாயிகள் மீது தாக்குதலா? : திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கண்டனம்
டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் காவல்துறையே கலவரத்தை உண்டாக்கத் திட்டமிட்டது : வைகோ பாய்ச்சல்
ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகளை அவிழ்க்காமல் அவருக்கு நினைவிடம் திறப்பது ஏமாற்று வேலை : கே.எஸ்.அழகிரி பாய்ச்சல்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!
26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!