5 நாட்கள் கூட்டு பயிற்சி சென்னை வந்தது ஜப்பான் ரோந்துகப்பல்: அதிகாரிகள், பள்ளி மாணவர்கள் உற்சாக வரவேற்பு
2020-01-14@ 01:06:02

சென்னை: இந்தியா-ஜப்பான் கடலோரகாவல் படையினர் கூட்டு பயிற்சி 5 நாட்கள் சென்னை கடற்பகுதியில் நடைபெறுகிறது. இதற்காக சென்னை துறைமுகத்துக்கு வந்த ஜப்பான் ரோந்துகப்பலுக்கு இந்திய கடலோர காவல்படை சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.இந்திய கடலோர காவல்படை மற்றும் ஜப்பான் கடலோர காவல்படை இணைந்து ஒவ்வொரு ஆண்டும் கூட்டுப்பயிற்சி மேற்கொள்வதென்று 2006ம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. இதுவரை 18 கூட்டுப் பயிற்சிகள் நடந்துள்ளன. கடந்த ஆண்டு இந்த கூட்டுப் பயிற்சி ஜப்பானில் நடைபெற்றதை தொடர்ந்து இந்த ஆண்டு சென்னையில் நடைபெறுகிறது.இதற்காக ஜப்பான் கடலோர காவல் படைக்கு சொந்தமான ‘ஏசிக்கோ’ என்ற கப்பல் நேற்று சென்னை துறைமுகத்தை வந்தடைந்தது. அப்போது இந்திய கடலோர காவல் படை கிழக்கு பிராந்தியத்தை சேர்ந்த உயர் அதிகாரிகள் சார்பில் ஜப்பான் கப்பலுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த கப்பலின் கேப்டன் கொய்சோ கர்டா தலைமையில் 60 பேர் கொண்ட குழு இந்த கூட்டு பயிற்சியில் ஈடுபட உள்ளது.
13ம்தேதி முதல் 17ம்தேதி வரை நடைபெறும் இந்த கூட்டுப்பயிற்சியில் கடலோர பாதுகாப்பு, எல்லை பாதுகாப்பு மற்றும் இருநாட்டு ராணுவங்களின் ஒத்துழைப்பு தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இருநாட்டு கப்பல்களும் இணைந்து 16ம்தேதி ‘சாயோக் கஜின்’ என்ற பெயரில் நடுக்கடலில் கூட்டுப் பயிற்சி மேற்கொள்ள உள்ளனர். இந்த கூட்டுப் பயிற்சிக்காக வருகை தந்த கேப்டன் ெகாய்சோ கர்டா கூறுகையில், ‘‘இந்திய கடலோர காவல் படை எங்களை பாதுகாப்பாக அழைத்து வந்தனர். கடலோர காவல் படையினர் மற்றும் குழந்தைகள் இணைந்து உற்சாக வரவேற்பளித்தனர். அது மனத்துக்கு மகிழ்ச்சியாக இருந்தது. 5 நாட்கள் நடைபெறும் கூட்டுப் பயிற்சியில் கடல் கொள்ளையை தடுப்பது, கடல்சார் சட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட முக்கியமானவைகள் குறித்து இருநாட்டு வீரர்களும் இணைந்து பயிற்சி மேற்கொள்ள உள்ளனர்” என்றார். இந்நிகழ்ச்சியில், ஜப்பான் துணை தூதர் கொஜ்ரோ உச்சி மாயா, கொஜ்ேரா மோடி, இந்தியா மற்றும் கடலோர காவல் படைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
பேரறிவாளன் விவகாரத்தில் நடப்பது என்ன?.. உச்சநீதிமன்றத்தில் விளக்கம் கேட்கிறாரா தமிழக ஆளுநர்?
நன்றி கொன்ற இருவர் நடத்தும் நாடகம்: ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழா குறித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை.!!!
தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 523 பேர் பாதிப்பு: 595 பேர் குணம்; 5 பேர் பலி...சுகாதாரத்துறை அறிக்கை..!
குடியரசு நாளில் விவசாயிகள் மீது தாக்குதலா? : திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கண்டனம்
டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் காவல்துறையே கலவரத்தை உண்டாக்கத் திட்டமிட்டது : வைகோ பாய்ச்சல்
ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகளை அவிழ்க்காமல் அவருக்கு நினைவிடம் திறப்பது ஏமாற்று வேலை : கே.எஸ்.அழகிரி பாய்ச்சல்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!
26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!