SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உள்ளாட்சி தேர்தலில் உள்குத்தில் ஈடுபட்டதால் இலை மீது கூட்டணி தலைவர்கள் செம கடுப்பில் இருப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2020-01-14@ 00:06:19

‘‘உள்ளாட்சி தேர்தலில் ஏற்பட்ட மனகசப்பு இலை தரப்பில் இன்னும் போகவில்லை போல இருக்கே...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘உண்மை தான். உள்ளாட்சி தேர்தலில் தில்லுமுல்லு செய்து எதிர்கட்சியினரை மட்டும் தோற்கடிக்கவில்லை. சொந்த கூட்டணியில் உள்ள முரசு, மாம்பழம், பழைய சைக்கிள் தரப்பையும் திட்டமிட்டு தோற்கடித்துவிட்டார்களாம். அதனால் தான் மறைமுக தேர்தல் நடந்து இலை தரப்பு கணிசமான வெற்றி பெற்றபோதும் கூட்டணி கட்சிகள் மருந்துக்கு கூட இலை தலைமைக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லையாம். அவர்கள் தற்போது வரை அதிருப்தியில் தான் இருக்காங்களாம்... மாம்பழத்துக்கு ஒதுக்கிய இடத்தில் இலை வெற்றி பெற்றதாம். பழைய சைக்கிளை உள்ளாட்சி தேர்தலில் பார்ட் பார்ட்டாக கழற்றிவிட்டார்களாம்... முரசு நிலை அதைவிட மிகவும் மோசமாக போய்விட்டதாம்... அதனால் தான் கூட்டணி தலைவர்கள் யாரும் ராயப்பேட்டைக்கு வரவில்லையாம். வாழ்த்தும் சொல்லவில்லையாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘அதுக்கு இரட்டையர்களின் ரியாக்‌ஷன் என்ன...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘உள்ளாட்சி தேர்தல் விவகாரங்களை பொதுக்குழு, செயற்குழுவில் பேசிய படி கட்சியின் மேலிடமே பேசி தீர்க்கும்... மாவட்ட அளவில் இலை கட்சியினர் டீலிங் பேசி குழப்பதை ஏற்படுத்த வேண்டாம்... தேர்தலில் நிற்பதையும், ஜெயிப்பதையும் மட்டுமே பாருங்கள்... கூட்டணி இடையே குழப்பதை ஏற்படுத்த வேண்டாம் என்ற ரீதியில் அறிக்கை விட்டு கூட்டணி தலைவர்களை சமாதானப்படுத்த முயற்சித்து இருக்கிறார்கள்... ஆனால் அவர்கள் சமாதானம் ஆகவில்லையாம்... இதையடுத்து கார்ப்பரேஷன் மேயர், நகராட்சி தலைவர்கள் பதவியை கூடுதலாக தருகிறோம் என்று தங்கள் தூதர் மூலம் கூட்டணி கட்சியின் தலைவர்களுக்கு தகவல் அனுப்பி இருக்கிறார்களாம்... அதை அப்போது பார்க்கலாம். இப்போதைக்கு நாங்கள் இழந்த பதவிக்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள் என்று கேள்வி கேட்டார்களாம். அதற்கு பதில் சொல்ல முடியாமல் கட்சியின் தூதுவர்கள் திரும்பி வந்துவிட்டார்கள்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ராமநாதபுரத்துல என்ன நடந்தது...’’
‘‘ராமநாதபுரம் மாவட்ட பகுதிகளில் வெளியூர், வெளிநாட்டில் இருப்பவர்கள் என்றால் அந்த ரேஷன் கார்டை கொண்டு வந்து உறவினர் காட்டினால், ‘பாதிக்குப்பாதி’ டீலிங்கில் கடைக்காரர்களே பேசி பணம் வசூல் நடத்தி இருக்கின்றனராம்... பல ஊர்களில் ‘விநியோகச் செலவு’ எனக்கூறி, கொடுத்த பணத்தில் ரூ.100ஐ ரேஷன் கடை வாசலிலேயே வசூல் செய்த கொடுமையும் அரங்கேறியிருக்கிறதாம்... ஒரு சில இடங்களில் தொகையை மட்டுமே கொடுத்து விட்டு, பொருட்களில் அரிசியை மட்டுமே கொடுத்து அனுப்பி வைத்ததும் நடந்துள்ளதாம்... முன்பு பொங்கல் தொகுப்பு சீனி கார்டு வைத்திருப்போர் உட்பட அனைவருக்கும் வழங்கப்பட்டது. அதன்பின்னர் அரசு அறிவிப்பை தொடர்ந்து, பாதிக்கும் மேற்பட்டோர் சீனி கார்டை, அரிசி கார்டாக மாற்றி விட்டனராம்... இவர்களுக்கு மட்டும் தற்போது பொங்கல் தொகுப்பு, பணம் வழங்கப்பட்டு வருவதால், மாற்றாமல் உள்ள சீனி கார்டுதாரர்கள் கடும் டென்ஷனில் இருக்கிறார்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘கூட்டணி போருக்கு முரசு தயாராகிவிட்டதாமே, அப்படியா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மாங்கனி மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட பஞ்சாயத்து சேர்மன் பதவி, இலையின் கூட்டணியில் 4 வார்டுகளில் மட்டுமே ஜெயித்த மாம்பழத்திற்கு தான் என்று ஏற்கனவே சொல்லியிருந்தோம். அதுபடியே நடந்துருச்சு. அதேபோல் ஒன்றியக்குழு சேர்மன் போஸ்டிங்கும், மாம்பழத்திற்கு அதிகமாகவே கொடுத்திருக்காங்களாம். இதனால் இலையின் கூட்டணியில் இருக்கும் முரசு, ரொம்பவே சூடாக இருக்குதாம். அவங்களை கூல் படுத்துவதற்கு புதிய அஸ்திரத்தை இலை வீசியிருக்காம். அடுத்து கார்ப்பரேஷன், முனிசிபாலிடி, டவுன் பஞ்சாயத்து எலக்‌ஷன் அறிவிப்பு உடனடியாக வந்துரும். அதுல நீங்களே எதிர்பார்க்காத இன்ப அதிர்ச்சி காத்துக்கிட்டிருக்கு. அப்புறம் மாங்கனி கார்ப்பரேஷன் டெபுடி மேயரே நீங்கதான் தெரியுமா? என்று வாத்தியம் வாசிச்சிருக்காங்களாம். சூடான முரசு கட்சிக்காரங்க, இதை நம்பி கூலாயிட்டாங்களாம்.

‘‘திருப்பத்தூர் மாவட்டத்துல கல்லா கட்டுவது சூப்பராக நடக்குது போல...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘ஆம்பூர் அருகே உள்ள எல்.மாங்குப்பத்தில் ஆம்பூர் கூட்டுறவு வேளாண்மை உற்பத்தி சங்கம் இருக்கு. அறுபது ஆண்டுகள் கடந்த இந்த சங்கத்தில் ஆயிரக்கணக்கானோர் உறுப்பினர்களாக உள்ளனர்.தற்போது இந்த சங்கத்தின் செயலாளராக இருந்து வருபவர் நடத்தும் வசூல் வேட்டையால் ரேஷன் கடை விற்பனையாளர்கள் பெட்ரோல் பங்க் பணியாளர்கள் உட்பட தற்போது பொதுமக்களும் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இந்த கடன் சங்கத்தின் கீழ் இயங்கிவரும் ரேஷன் கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர்கள் மாதம் ஒரு தொகையை இவருக்கு செலுத்த வேண்டுமாம். பெட்ரோல் பங்கில் பணிபுரிந்து வரும் பணியாளர்கள் பலர் ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் பணிபுரிந்து வருவதால் நுகர்வோரிடம் இருந்து விற்கப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் அளவில் குறைந்தது லிட்டருக்கு ஒரு சில மி.லி. அடித்து விடுகின்றனராம்.

இதன் மூலமாக பெரும் லாபம் பார்க்கும் இரண்டு விற்பனையாளர்கள் ஒவ்வொரு மாதமும் தலா 20 ஆயிரம் ரூபாய் செயலாளருக்கு கப்பம் கட்ட வேண்டுமாம். இதைக்கொண்டு இவர் வேலூர் அருகே உள்ள ஒரு மெட்ரிக் பள்ளியில் பல கோடி முதலீடு செய்து உள்ளாராம். இவரிடம் சிக்கிக்கொண்டு இந்த சங்கம் பல ஆண்டுகளாக எவ்வித முன்னேற்றமும் அடையாமல் இருப்பதாக அப்பகுதியினர் புலம்புகின்றனர். வருமானத்திற்கு அதிகமாக இவரிடம் சொத்து எப்படி சேர்ந்தது என அவர் பதவி வகித்து வரும் வேளாண்மை கடன் சங்கத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் சங்க இயக்குனர்களே தங்களுக்கு தாங்களே கேள்வி கேட்டுக்கொண்டு வேதனையில் புலம்பி வருகின்றனர்...’’ என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News Advertisement
Like Us on Facebook Dinkaran Daily News
 • haryana28

  மதம் மாற மறுத்த இளம்பெண்..பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்டு கொலை!: குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி பல இடங்களில் ஆர்ப்பாட்டம்..!!

 • water28

  தென் அமெரிக்காவில் 2,000 ஆண்டுக்களுக்கு முந்தைய மக்களான மயன் நாகரிகத்தினர் பயன்படுத்திய நீர் சுத்திகரிப்பு மையம் கண்டுபிடிப்பு: ஆச்சர்யத்தில் ஆய்வாளர்கள்..!!

 • biharele28

  கொரோனா பாதிப்புகளுக்கு இடையே பீகார் சட்டசபை தேர்தல் 2020: முதல் கட்டமாக 71 தொகுதிகளில் வாக்கு பதிவு தொடக்கம்..!!

 • pakistanbomb27

  பாகிஸ்தானில் மத பாடசாலையில் பயங்கர குண்டு வெடிப்பு!: சிறுவர்கள் உள்பட 7 பேர் பலி...70க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!!

 • bee27

  6 லட்சத்துக்கும் அதிகமான தேனீக்களை உடலில் சுமந்து சீன இளைஞர் கின்னஸ் சாதனை!: பேஸ்புக்கில் கலக்கும் வித்தியாசமான சாதனை முயற்சி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்