SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சொத்து விஷயத்தில் கிப்ட் தரப்பு அதிர்ச்சியில் இருப்பதை சொல்கிறார்: wiki யானந்தா

2020-01-12@ 01:29:42

‘‘உள்ளாட்சி தேர்தலில் அதிகாரிகள் விலை போயிட்டாங்கனு மக்கள் பேசிக்கிறாங்களே, உண்மையா...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘வாக்குப்பதிவின்போதே பல அதிகாரிகள் விலை போயிட்டாங்கன்னு ஒரு பேச்சு இருந்தது. இப்போது அது உண்மை என்றே தெரியவந்துள்ளது. எதிர்க்கட்சிகளை வளைக்க முடியாது என்பது இலை தரப்புக்கு தெரிந்துவிட்டது. இதனால பல ஊராட்சி ஒன்றியங்கள், கிராம பஞ்சாயத்துகளில் இலை தரப்பு அதிகாரிகளை தங்கள் வலைக்குள் விழ வைக்கும் ஆயுதத்தை கையில் எடுத்துவிட்டார்கள்... பணம், பதவி, டிரான்ஸ்பர், துறை ரீதியிலான தண்டனை ரத்து என்று பலவிதமான ஆயுதங்களை பயன்படுத்தினாங்க... பலர் இந்த மார்ச், மே மாதத்துக்குள் ஓய்வு பெறப் போகிறார்களாம். அவர்கள் விட்டால் போதும் என்று மேலிடம் சொன்னதற்கு ஒத்துக் கொண்டார்களாம்.

இதனால்தான் பல இடங்களில் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம்... அறிவித்த முடிவும் ஏற்றுக் கொள்ளும்படி இல்லையாம்... பாதிக்கப்பட்ட கவுன்சிலர்கள் கோர்ட் படியேற முடிவு செய்து இருக்கிறார்களாம்....’’ என்றார் விக்கியானந்தா.
‘‘சிறைப்பறவை எப்டி இருக்காங்க... இந்த பொங்கலும் சிறையில்தானே...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘சிறைப்பறவைக்கு என்ன குறைச்சல்... சகல வசதியோடுதான் இன்னும் சிறைக்குள் இருக்கிறார். வீட்டில் கிடைக்கும் அனைத்து வசதிகளும் சிறையில் கிடைக்கிறது. இந்த நிலையில்தான் தன் விசுவாசிகளை விரட்டி விட்டு தன் சொத்துகளை கிப்ட்டும் அவரது மனைவியும் சுருட்ட நினைக்கிறார்கள் என்ற விஷயத்தை கேள்விப்பட்டு மிரண்டு போய்விட்டாராம். அதனாலதான் சமீபத்தில் எல்லா சொத்தும் எனக்கு சொந்தம் என்று அதிகாரப்பூர்வமாக எழுதி கொடுத்து இருக்காங்க...

மேலும் தன்னை காத்துக்கொள்ள சிறைக்கு தன்னை சந்திக்க வரும்போது ெகாண்டு வரும் பொருட்களை கூட சக கைதிகளுக்கு கொடுத்து தாராளமாக சாப்பிட சொல்கிறாராம். அப்புறம் சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு தனக்கு ரொம்ப விசுவாசமாக இருக்கும் இடத்தில் பலத்த பாதுகாப்புடன் தங்க இருக்கிறாராம். இந்த விஷயங்களை கேள்விப்பட்ட கிப்ட் தரப்பு அதிர்ச்சியில இருக்காம்... பல்லாயிரம் கோடி தனக்கு கிடைக்காமல் போய்விடுமோ என்று யோசிக்க தொடங்கி இருக்கிறாராம்... அப்புறம் உள்ளாட்சி முடிவுகளை எப்படியோ தெரிந்து கொண்ட சிறைப்பறவை இனி கிப்ட் தேவையில்லை... நான் வெளியே வந்த பிறகு என்னை நம்பி ஒரு கூட்டம் காத்திருக்கு... அவர்களை வைத்து நான் அரசியல் செய்து கொள்கிறேன் என்று தன்னுடன் இருப்பவரிடம் கூறி இருக்கிறாராம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘சிலர் மேலிடம்... மேலிடம் என்று சொல்றாங்களே... அப்டி என்றால் என்ன...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘திண்டுக்கல் மாநகராட்சியில பொது சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, பொறியியல் துறை, நகர அமைப்பு, பொதுப்பிரிவு என 5 துறைகள் இருக்கு... ஒவ்வொரு துறைகளிலும், அந்த துறையின் ‘வருமானத்தை’ பொறுத்து சுமார் ரூ.1 லட்சம் வரை, ‘மேலிடத்துக்கு தீபாவளிக்கு வழங்கிய பரிசுப்பொருட்களுக்கான செலவுத்தொகை’ எனக்கூறி அலுவலர்களிடம் வசூல் வேட்டை தீவிரமடைந்துள்ளதாம்... இந்தப் பணத்தை வாய்மொழி உத்தரவாக, ‘மேலிடத்திற்கு’ கொடுக்க வேண்டும் என்று கூறி மட்டும் வசூலிக்கின்றனராம்... மேலிடம் என்றால் மாவட்ட நிர்வாகமா, எம்எல்ஏவா, எம்பியா, அமைச்சரா என எதுவுமே தெரியாமல் கீழ்மட்ட ஊழியர்கள் குழம்பிப்போய் இருக்கின்றனராம்...

மாநகராட்சியில் நடந்துள்ள இந்த வசூலைத் தொடர்ந்து, துறை அலுவலர்கள் போட்டி போட்டுக்கொண்டு தாங்கள் கொடுத்ததை விட கூடுதல் தொகையை, பல்வேறு சான்றுகள் பெற வரும் பொதுமக்களிடம் வசூலிக்கின்றனராம்...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘அந்த மேலிடத்தை பற்றி சொல்லவே இல்லை...’’ ‘‘மேலிடம் என்றால் மேலிடம் தான்... அது தெரியாமல் என் கிட்ட அரசியல் பேசற...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘அப்போ மேலிடம்...’’ ‘‘எனக்கு தெரியலைனு தானே ஜாங்கிரி மாதிரி சுத்தி சுத்தி வர்றேன்... வேறு ேமட்டர் சொல்றேன் கேளு... ஞானமான ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களின் வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணிக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார். இதற்காக காலையில் தூத்துக்குடி, மாலையில் நெல்லை என கூட்டம் நடத்தி முடித்திருக்கிறார் அந்த அதிகாரி. அடுத்து அவர் நடத்திய கூட்டம்தான் விசேஷம்.

அதாவது மதுரை, சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்கள் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டுக்கு பெயர் போனவை. அந்தத் துறையின் உயரதிகாரியான இவர் நெல்லைக்கு வந்ததால் அத்தனை மாவட்ட அதிகாரிகளையும் தான் இருக்கும் இடத்திற்கு வரவழைத்து கூட்டம் போட்டு அறிவுரை சொன்னாராம். இத்தனைக்கும் நெல்லை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டியே கிடையாது என்பதுதான் ஹைலைட். இது தெரியாமல் ஒரு அதிகாரி மக்கள் வரிப்பணத்தை வேஸ்ட் செய்துட்டாரே என்று சொல்லி சிரிக்கின்றனர். வழக்கம்போல அவருக்கும் அல்வா பாக்கெட் கொடுத்து அனுப்பிட்டாங்க... நல்லா ருசியா இருக்கு என்று இதில கமென்ட் வேற அடித்தாராம்...’’ என்றார் விக்கியானந்தா.    

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News Advertisement
Like Us on Facebook Dinkaran Daily News
 • molave28

  வியட்நாமில் கோரத்தாண்டவம் ஆடிய molave புயல்!: 13 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம்..!!

 • haryana28

  மதம் மாற மறுத்த இளம்பெண்..பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்டு கொலை!: குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி பல இடங்களில் ஆர்ப்பாட்டம்..!!

 • water28

  தென் அமெரிக்காவில் 2,000 ஆண்டுக்களுக்கு முந்தைய மக்களான மயன் நாகரிகத்தினர் பயன்படுத்திய நீர் சுத்திகரிப்பு மையம் கண்டுபிடிப்பு: ஆச்சர்யத்தில் ஆய்வாளர்கள்..!!

 • biharele28

  கொரோனா பாதிப்புகளுக்கு இடையே பீகார் சட்டசபை தேர்தல் 2020: முதல் கட்டமாக 71 தொகுதிகளில் வாக்கு பதிவு தொடக்கம்..!!

 • pakistanbomb27

  பாகிஸ்தானில் மத பாடசாலையில் பயங்கர குண்டு வெடிப்பு!: சிறுவர்கள் உள்பட 7 பேர் பலி...70க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்