தடம் மாறலாமா?
2020-01-12@ 01:07:01

இந்தியாவில் நீண்ட தூர பயணங்களுக்கு மக்கள் அதிகம் பயன்படுத்துவது ரயில்கள் தான். ஆண்டு ஒன்றுக்கு ரயில்கள் மூலம் சுமார் 500 கோடிக்கும் அதிகமான மக்கள் பயணிக்கின்றனர். சரக்கு ரயில்கள் மூலம் 350 மில்லியன் டன்கள் சரக்கு அனுப்பப்படுகின்றன. இவ்வளவு நீண்ட பாரம்பரியம் உள்ள ரயில்வேயின் அடையாளத்தை சிதைக்கும் முயற்சிதான் தனியார் மயமாக்கல் திட்டம் என்று நாட்டு பற்று மிக்க சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.குறைந்த கட்டணத்தில் நீண்டதூர போக்குவரத்திற்கும் வேலைவாய்ப்பிற்கும் அடித்தளமாக உள்ள ரயில்வேக்கு தற்போது சோதனைக் காலம் என்றே கூறலாம்.
அதை தனியார் மயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. அதன் முதல்படி, ரயில்வேக்கு என்று தனியாக போடப்பட்ட பட்ஜெட் முறையை ஒழித்தது. அதன் பின்னர் அதை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபடாமல் அதை தனியார்மயமாக்கும் நடவடிக்கைதான் நடக்கிறது. தமிழகத்தில் 11 வழித்தடங்கள் உட்பட 150 வழித்தடங்களில் தனியார் ரயில்களை இயக்குவதற்கான திட்டத்துக்கு வரைவு அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.அடுத்த 5 ஆண்டுக்குள் 150 தனியார் ரயில்களை இயக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்திருந்தது. தனியார் ரயில் தொடர்பாக வரைவு அறிக்கையை நிதி ஆயோக் வெளியிட்டுள்ளது. இது ஒருபுறம் என்றால் மற்றொரு புறம், ரயில்வே சேவை பிரிவுகள் இணைப்புக்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
ரயில் சேவைகள் இணைப்பு ஒருதலைப்பட்சமான முடிவு என்றும், இதனால் பாதுகாப்பான ரயில் சேவையில் எதிர்மறையான விளைவு ஏற்படும் என்றும் 13 ரயில்வே மண்டலங்கள் மற்றும் 60 டிவிசன்களைச் சேர்ந்த சிவில் சர்வீஸ் அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சீர்திருத்தம் என்ற பெயரில், கணக்கு துறை, பணியாளர் துறை உள்ளிட்ட 8 துறைகளை இணைப்பதாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் கடந்த வாரம் அறிவித்தார். இதற்கு பெரும்பாலான அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். மக்கள் அதிகம் பயன்படுத்தும் ரயில் போக்குவரத்தை சிதைக்கும் முயற்சியை கைவிட்டு அதை மேம்படுத்துவதே அரசின் சிறந்த நடவடிக்கையாக இருக்கும். நாட்டுடைமை ஆக்கப்பட்ட ஒரு துறையை தனியார் மயம் ஆக்குவது, வெகுஜன மக்கள் பயன் அடையும் நோக்கத்தையே சிதைத்து விடும்.
Tags:
தலையங்கம்மேலும் செய்திகள்
நல்ல துவக்கம்
காத்திருக்கும் சவால்
உயிர்துளியை உணர்வார்களா?
ஆபத்தை தரும் செயலிகள்
பொங்கல் பரிசு
அதிக சுமை
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!