மாநகராட்சி வார்டு மறு சீரமைப்பை ரத்து செய்ய திமுக எம்எல்ஏ வழக்கு : தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
2020-01-10@ 00:22:21

மதுரை: மாநகராட்சி வார்டு மறு சீரமைப்பை ரத்து செய்யக்கோரி திமுக எம்எல்ஏ தொடர்ந்த வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மத்திய தொகுதி திமுக எம்எல்ஏ பி.டி.ஆர்.பி.பழனிவேல் தியாகராஜன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதைத்தொடர்ந்து மாநகராட்சி மற்றும் நகராட்சி அமைப்புகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் மதுரை இரண்டாவது பெரிய மாநகராட்சி. இங்கு தற்போது 4 மண்டலங்களில் 100 வார்டுகள் உள்ளன. மாநகராட்சி வார்டுகள் தற்போது மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. இதில், அதிகளவு குளறுபடிகள் உள்ளன. எனவே, தற்போது வெளியிடப்பட்ட வார்டு சீரமைப்பை ரத்து செய்ய வேண்டும். விதிகளை பின்பற்றி முறையாக வார்டு மறுசீரமைப்பு செய்யவும், அதன் பிறகே மாநகராட்சி தேர்தலை நடத்த வேண்டுமெனவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.துரைச்சுவாமி, டி.ரவீந்திரன் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்தவக்கீல் என்.ஆர்.இளங்கோ, வக்கீல் திலக்குமார் ஆகியோர் ஆஜராகி, ‘‘ஆளுங்கட்சியினருக்கு சாதகமான முறையில், அவர்களின் விருப்பத்திற்கேற்ப வார்டு சீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. எந்த விதிகளையும் பின்பற்றாமல் மனம் போன போக்கில் செய்துள்ளனர். எனவே, இதை ரத்து செய்து, மீண்டும் புதிதாக வார்டு மறுவரையறை செய்ய வேண்டியது அவசியம்’’ என்றனர். இதையடுத்து நகராட்சி நிர்வாக செயலர், உள்ளாட்சிகளுக்கான வார்டு மறு வரையறை குழு தலைவர், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலர், மதுரை மாநகராட்சி கமிஷனர், மதுரை கலெக்டர் ஆகியோர் தரப்பில் விரிவான பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜன. 29க்கு தள்ளி வைத்தனர்.
மேலும் செய்திகள்
கலைஞர் அறக்கட்டளை சார்பில் 8 பேருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி: மு.க.ஸ்டாலின் வழங்கினார்
வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி கவர்னர் மாளிகை நோக்கி இன்று பேரணி: காங்கிரஸ் சார்பில் நடக்கிறது
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் முதல்வர் எடப்பாடி 20, 21ம் தேதி தேர்தல் பிரச்சாரம்: அதிமுக தலைமை அறிவிப்பு
புரட்சி பாரதம் கட்சியின் இளைஞர் அணி ஆலோசனை கூட்டம்
பாஜ 60 சீட் கேட்கும் நிலையில் தொகுதி பங்கீடு குறித்து அமித்ஷாவுடன் முதல்வர் எடப்பாடி இன்று பேச்சுவார்த்தை: பிரதமர் மோடியை நாளை சந்திக்கிறார்
ஐஐடியில் சமஸ்கிருத திணிப்பு பாஜ கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும்: கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்