மெக்ஸிகோவில் கடலுக்கடியில் 3,000 அடி ஆழத்தில் நடமாடும் மீன்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
2019-12-24@ 15:51:36

மெக்ஸிகோவில் ஆழ்கடலுக்குள் நடமாடும் மீனை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மெக்ஸிகோ வளைகுடா பகுதியில் கடலடி விஞ்ஞானிகள் ஆய்வில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆழ்கடலுக்குள் சுமார் 3 ஆயிரம் அடி ஆழத்தில் மணலிலும், பாறையிலும் நடந்து செல்லும் மீனைக் கண்டு ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். சேபர்ஸ் ஏஞ்சல் பிஷ் (Schaefer’s anglerfish) எனப்படும் அந்த மீன் மிகவும் அரியவகையைச் சேர்ந்தது.
ஏறத்தாழ 50 கிலோ எடை கொண்ட அந்த மீன் 5 அடி நீளம் வரை வளரும் தன்மை கொண்டது. சுமார் ஒரு ஆண்டு கால தேடுதல் வேட்டைக்குப் பிறகு இந்த மீன் கண்டுபிடிக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வகை மீனின் கால்கள் துடுப்பாகவும் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
புதிய செல்போன் தொலைத்தொடர்பு செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது சீனா.
சீனாவில் ஜீன் தெராபி மூலம் மனிதர்கள் வயதாவதை தடுக்க ஆராய்ச்சி!
ரஷ்யாவில் மீத்தேனில் இயங்கும் மறுபயன்பாட்டு ராக்கெட் எஞ்சின் தயாரிப்பு
எரிபொருளை விரைவாகத் தீர்த்து செத்து மடிந்து கொண்டிருக்கும் கேலக்சி : ஆராய்ச்சியாளர்கள் தகவல்
அடுத்ததாக விண்வெளிக்கு அனுப்ப உள்ள ராக்கெட்டின் எஞ்சினை இயக்கி சோதனை மேற்கொண்ட நாசா
இதயத்தின் அடைப்பை குணப்படுத்தும் கருவி: முதன்முறையாக இந்தியாவில் கண்டுபிடிப்பு
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்