தமிழக அரசியலில் கூட்டணி என்பது அவசியம்: ஜி.கே.வாசன் பேச்சு
2019-12-16@ 00:50:37

சென்னை: தமிழக அரசியலில் கூட்டணி என்பது அவசியம் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் முன்னிலையில் படைப்பாளிகள் முன்னேற்ற கட்சி நிறுவனர் ச.சரவணன், தனது கட்சியை தமாகாவுடன் இணைத்தார். அவருடன் அக்கட்சி நிர்வாகிகள் பலர் தமாகாவில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் மூத்த துணைத்தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன், தலைமை நிலைய செயலாளர்கள் ஜி.ஆர்.வெங்கடேஷ், டி.என்.அசோகன், மாவட்ட தலைவர்கள் கொட்டிவாக்கம் ஏ.முருகன், சைதை மனோகரன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் ஜி.கே.வாசன் பேசியதாவது: தமிழகத்தில் மக்கள் விரும்பும் கட்சியாக தமாகா செயல்பட்டு கொண்டிருக்கிறது. தேர்தலை மனதில் கொள்ளாமல் குறிக்கோள், கொள்கைக்காக இயங்கும் கட்சி நாங்கள் தான். தமிழக அரசியலில் கூட்டணி என்பது அவசியம். நல்ல கட்சிகளுடன் கூட்டணி வைத்து நியாயமான முறையில் களம் இறங்குவதை தான் மக்கள் விரும்புகிறார்கள். அப்படி உள்ள கட்சிகளுக்கு தான் மக்களின் அங்கீகாரம் நிச்சயம் இருக்கிறது. உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும். வரும் காலம் நமக்கு வசந்த காலம். எனவே கட்சி, மக்கள் நலன் காக்க பாடுபடுவோம். இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் செய்திகள்
நாடாளுமன்ற தேர்தலைப் போல் சட்டமன்ற தேர்தலிலும் மிகப்பெரிய வெற்றி : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி
அதிமுக. ஆட்சியை மாலுமி இல்லாத கப்பல் போலவும், அதிமுக. அமைச்சர்களை கடல் கொள்ளைககாரர்கள் போலவும், மக்கள் கருதுகிறார்கள் : மு.க.ஸ்டாலின் பேட்டி
திமுக தேர்தல் அறிக்கை குழு பொதுமக்களிடம் குறைகேட்பு கூட்டம்: டி.ஆர்.பாலு தலைமையில் நடந்தது
கொத்தவால்சாவடியில் ரேஷன் கடைக்கு பூமி பூஜை: தயாநிதி மாறன் எம்பி தொடங்கி வைத்தார்
ஆவடி மாநகராட்சியை கண்டித்து மதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
குடிமராமத்து பணிக்கு 20% கமிஷனை கண்டித்து திமுக ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்: பள்ளிப்பட்டில் பரபரப்பு
தமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..!!
3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்!!
19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
சிலியில் வேகமாக பரவும் காட்டுத்தீ!: புகைமூட்டத்துடன் செந்நிறமாக காட்சியளித்த வானம்...புகைப்படங்கள்
சீனாவில் தீவிரமாக பரவும் கொரோனா வைரஸ்!: 5 நாளில் கட்டப்பட்ட 1,500 அறை கொண்ட மருத்துவமனை..!!