ஓசூர், சூளகிரியில் 65 யானைகள் அட்டகாசம் வீடுகளில் முடங்கிப்போன விவசாயிகள்: வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க கோரிக்கை
2019-12-16@ 00:14:25

ஓசூர்: ஓசூர் அருகே சானமாவு மற்றும் சூளகிரியில், யானைகள் முகாமிட்டுள்ளதால் விளைநிலங்களுக்கு செல்ல பயந்து விவசாயிகள் வீட்டில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள சானமாவு வனப்பகுதியில் 65க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. இதேபோல், சூளகிரி அருகே உள்ள பீர்ஜேப்பள்ளி வனப்பகுதியில் 3 குட்டிகளுடன் 12 யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள், வனப்பகுதியையொட்டியுள்ள 20 கிராமங்களுக்குள் புகுந்து, விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால், விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் அடைந்துள்ளனர். எனவே, முகாமிட்டுள்ள யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென, விவசாயிகள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சானமாவு வனப்பகுதியில் ஓசூர்-ராயக்கோட்டைக்கு செல்லும் மாநில தேசிய நெடுஞ்சாலை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் அமைந்துள்ளது. இந்த சாலையையொட்டி, இரண்டு பகுதிகளும் வனப்பகுதியாக உள்ளதால் யானைகள் பல குழுவாக பிரிந்து சுற்றி வருகின்றன. அவ்வப்போது, சாலையை கடந்து செல்வதால், வாகன ஓட்டிகள் ஒலி எழுப்பியவாறு மெதுவாக செல்ல வேண்டும் என்றும், அதிக எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்க வேண்டும் என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதேபோல் இரவு நேரங்களிலும், அதிகாலையிலும், விவசாயிகள் விளை நிலத்திற்கு செல்ல வேண்டாம். பீர்ஜேப்பள்ளி, சானமாவு, பென்னிக்கல் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கால்நடைகளை மேய்க்கவோ, விறகு எடுக்கவோ புளியந்தோப்பு, கோடூர் பள்ளம் பகுதிகளுக்கு செல்லவோ வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், பயந்துபோன விவசாயிகள், விளைநிலங்களுக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகள்
ஊழல் செய்பவர்களுக்கு தூக்குத்தண்டனை கோரி வழக்கு...! சட்ட திருத்தம் செய்யும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு இல்லை: ஐகோர்ட் கிளை உத்தரவு
பைக்கில் வேகமாக வந்ததை தட்டிக்கேட்ட வாலிபர் மீது கொலைவெறி தாக்குதல்: பாஜக பிரமுகர் மகன் உட்பட மூன்று பேர் கைது
செந்துறையில் அதிக வேகத்தில் சென்ற கனரக வாகனங்களை மறித்த இளைஞர்கள்
விருதுநகர் நகராட்சி மின்மயானம் பழுதால் திறந்த வெளியில் எரிக்கப்படும் சடலங்கள்-இறப்பு சான்றிதழ் பெறுவதில் சிக்கல்
காரியாபட்டி அருகே புதிய சாலையின் இருபுறமும் விபத்து ஏற்படுத்தும் பள்ளம்
குடியிருக்கும் வீட்டை காலி செய்ய கூறி அடித்து துன்புறுத்தும் மகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்-சப்.கலெக்டரிடம் முதியவர் கோரிக்கை
தமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..!!
3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்!!
19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
சிலியில் வேகமாக பரவும் காட்டுத்தீ!: புகைமூட்டத்துடன் செந்நிறமாக காட்சியளித்த வானம்...புகைப்படங்கள்
சீனாவில் தீவிரமாக பரவும் கொரோனா வைரஸ்!: 5 நாளில் கட்டப்பட்ட 1,500 அறை கொண்ட மருத்துவமனை..!!