சேது சமுத்திர திட்டம் நிறைவேற்ற சென்னையில் திமுக ஆர்ப்பாட்டம
2013-07-09@ 01:37:05

சென்னை : சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற கோரியும் திட்டம் தேவையில்லை என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெறக் கோரியும் திமுக சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தென்சென்னை மாவட்ட திமுக சார்பில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் எம்.பி. முன்னிலை வகித்தார்.
சுப. வீரபாண்டியன், தொ.மு.ச. பேரவை தலைவர் பேரூர் நடராசன், முன்னாள் அமைச்சர்கள் ரகுமான்கான், இந்திரகுமாரி, முன்னாள் எம்.எல்.ஏ. உசேன், வசந்தி ஸ்டான்லி எம்.பி., கு.க.செல்வம், பகுதி செயலாளர்கள் க.தனசேகரன், மகேஷ்குமார், ராமலிங்கம். அன்புதுரை, வி.எஸ்.ராஜ், த.வேலு, மதன்மோகன், காமராஜ், ஏழுமலை, ஏ.சேகர், கி.நடராசன், பிடிசி.பாலு, பூச்சி முருகன், அ.பாபு, சத்திய மூர்த்தி, பரமசிவம், தாயகம்கவி, களக்காடி மடுவை துரை, நாகேஷ், ஆறுமுகம், இளைஞர் அணி சிற்றரசு, பிரபாகர் ராஜா, நுங்கை சுரேஷ், சுலோசனா, மலர், இளங்கோவன், ரகமதுல்லா, செல்வம் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
வடசென்னையில்: வடசென்னை மாவட்ட திமுக சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட பொறுப் பாளர் ஆர்.டி.சேகர் தலைமை வகித்தார். மாநில சட்டத்துறை இணை செயலாளர் கிரிராஜன், தொழிலாளர் அணி செயலாளர் ரத்தினசபாபதி, முன்னாள் எம்எல்ஏக்கள் சேகர்பாபு, செங்கை சிவம், மதிவாணன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் எல்.பலராமன், நெடுமாறன், தேவராஜன், இளைய அருணா, மலர்விழி, கனிமொழி, பகுதி செயலாளர்கள் மணிவேலன், கட்பீஸ் பழனி, தமிழ்வேந்தன், சதீஷ்குமார், டன்லப் ரவி, ஐசிஎப் முரளி, ஜெயராமன், மகேஷ்குமார், லோகேஷ், மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் போஸ், தேவன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
மேலும் செய்திகள்
ஈரோடு கிழக்கு தொகுதியில் அனல் பறக்கும் பிரசாரம்; காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் என 4 முனை போட்டி: முற்றுகையிட்டு வரும் கட்சி தலைவர்களால் சூடுபிடித்த இடைத்தேர்தல்
அதானி பங்கு வீழ்ந்ததை போல் மோடியும் வீழ்வார்: மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தி பேச்சு
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அதிமுக நட்சத்திர பேச்சாளர் பட்டியல் வெளியீடு: ஓபிஎஸ் அணி பட்டியல் நிராகரிப்பு
கடந்த 3 ஆண்டுகால ஆட்சியில் 300 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்த சித்தூர் எம்எல்ஏ-தெலுங்குதேசம் கட்சி பொதுச்செயலாளர் குற்றச்சாட்டு
ஓபிஎஸ் தரப்பினர் பேட்டி இபிஎஸ் தரப்புக்கு சின்னம் போனதால் பின்னடைவு இல்லை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் எடப்பாடி அணி வேட்பாளருக்கு பாஜ முழு ஆதரவு அளிக்கும்: அண்ணாமலை அறிவிப்பு
சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!
நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!