3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட வீடுகளை கொண்ட உலகின் முதல் குடியிருப்பு பகுதி: மெக்சிகோவில் பயன்பாட்டிற்கு வந்தது
2019-12-13@ 16:56:32

மெக்சிகோ: மெக்சிகோவில் 3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட வீடுகளை கொண்ட உலகின் முதல் குடியிருப்பு பகுதி பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மெக்சிகோவில் தபஸ்கோ மாநிலத்தில் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள மக்கள் கையில் கிடைத்த பொருட்களை கொண்டு கட்டப்பட்ட வீடுகளில் வசிக்கின்றனர். வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் மிகவும் அவதிக்குள்ளாகும் இவர்களுக்கு உதவி செய்ய முடிவு செய்த நியூ ஸ்டோரி என்ற லாபநோக்கமற்ற நிறுவனம் ஐகான் என்ற கட்டுமான தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்துகிறது. அதன்படி 3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட வீடுகள் மெக்சிகோவில் தபஸ்கோ மாநிலத்தில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்படவுள்ளன. அமெரிக்காவை சேர்ந்த ஐகான் நிறுவனம் வடிவமைத்து தயாரித்துள்ள வல்கன் 2 என்ற 3டி பிரின்டரானது 3டி முறையில் பிரின்ட் செய்யப்பட்ட 500 சதுரடியில் அமைந்த 2 வீடுகளை முதற்கட்டமாக கட்டியுள்ளது.
இந்த 3டி பிரின்டரானது 9 அடி உயரம், 28 அடி அகலம் கொண்ட 2000 சதுர அடி வீடுகளை கட்டும் திறன் பெற்றது என ஐகான் நிறுவனம் தெரிவிக்கிறது. இந்த 33 அடி பிரின்டரானது அச்சு மையை பீழ்ச்சியடிப்பது போல கான்கிரீட் கலவையை வெளித்தள்ளுகிறது. இதையடுத்து, வழக்கமான முறையில் வீடு கட்டுவதை விட இருமடங்கு வேகத்தில் இந்த 3டி பிரின்டர் வீடுகளை கட்டுகிறது. தற்போது கட்டப்பட்டுள்ள இரண்டு வீடுகள் ஒரு சமையலறை, இரண்டு படுக்கை அறைகள், ஒரு கழிவறையை கொண்டது. வழக்கமான கான்கிரீட் கலவையை விட வலிமையான கான்கிரீட் கலவை பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும், நிலநடுக்கம் தாங்கும் வகையில் இந்த வீடுகள் கட்டப்படுவதாகவும் நியூ ஸ்டோரி தெரிவித்துள்ளது. 2020ம் ஆண்டுக்குள் 50 வீடுகளை கட்டித்தர நியூ ஸ்டோரி திட்டமிட்டுள்ளது.
மேலும் செய்திகள்
இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.2 அலகாக பதிவு, மருத்துவமனை இடிந்தது
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.35 கோடியைக் கடந்தது
கழுத்தில் சங்கிலியை மாட்டி கணவரை நாய் போல் இழுத்து சென்றவருக்கு ரூ.2 லட்சம் அபராதம்
டிரம்ப் பதவியை பறிக்க 25வது சட்டத்திருத்தம் துணை அதிபர் நடவடிக்கை எடுக்கக்கோரி அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம்
உலகிலேயே முதல்முறையாக… ஒரு அதிபரின் டிவிட்டர், ஃபேஸ்புக் கணக்குகளை தொடர்ந்து யூடியூப் சேனலுக்கும் தடை விதிப்பு!!
அமெரிக்காவில் 1 மணி நேரத்திற்கு 170 பேர் கொரோனாவால் மரணம் :உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 9.19 கோடியை தாண்டியது!!!
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்
பழையன கழிதலும் புதியன புகுதலும்!: தமிழகத்தில் போகி பண்டிகையை உற்சாகத்துடன் வரவேற்ற மக்கள்..!!
13-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனாவுக்கு குட்பாய் சொல்லும் நேரம் இது!: புனேவில் இருந்து 5.36 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தன..புகைப்படங்கள்