ரூ.4,180 விலையில் நோக்கியா சி1!
2019-12-12@ 17:43:52

எச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா சி1 ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆசிய பசிபிக் சந்தைகளில் விற்பனைக்கு வரும் என்றும், இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்படும் எனத் தகவல் வெளிவந்துள்ளது. நோக்கியா சி1 ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன் ஆனது 5.45-இன்ச் FWVGA+ டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, மேலும் 18:9 என்கிற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது
இந்த ஸ்மார்ட்போன் மாடலில் 1.3ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன் என்பதால் இயக்கத்திற்கு சுலபமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் இந்த ஸ்மார்ட்போனின் மென்பொருள் அமைப்பிற்கு இந்நிறுவனம் அதிகம் கவனம் செலுத்தவில்லை. நோக்கியா சி1 ஸ்மார்ட்போனில் எதிர்பார்த்தபடி 1ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் 65ஜிபி கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.
இந்த நோக்கியா சி1 ஸ்மார்ட்போனின் பின்புறம் 5எம்பி கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, அதேபோல் முன்புறமும் 5எம் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் எல்இடி பிளாஸ் உள்ளிட் பல்வேறு ஆதரவுகள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. நோக்கியா சி1 ஸ்மார்ட்போனின் இணைப்பு ஆதரவுகள் பற்றி பேசுகையில், 3ஜி, வைஃபை, ஜிபிஎஸ், மைக்ரோ யுஎஸ்பி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம். இந்த ஸ்;மார்ட்போனின் முக்கிய குறை என்னவென்றால் 4ஜி வசதி இல்லை. மேலும் இந்த சாதனத்தில் 2500எம்ஏஎச் பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜ் ஆதரவும் உள்ளது. மேலும் கூகுள் அசிஸ்டென்ட் பட்டன் வசதியைக் கொண்டுள்ளது இந்த சாதனம. மற்ற நிறுவனங்களின் ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போனை விட சற்று குறைவான அம்சங்களுடன் இந்த நோக்கியா சாதனம் வெளிவந்துள்ளது. நோக்கியா சி1 ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போனின் இந்திய விலை மதிப்பு ரூ.4,180-ஆக உள்ளது.
}
Tags:
நோக்கியா சி1மேலும் செய்திகள்
ரியல்மி ஸ்மார்ட் வாட்ச்சுகள் விலை சுமார் ₹4,999 முதல்
கார்பன் மாஸ்க் (விலை சுமார் ₹799)
2கே டிஎஸ்பிளேயுடன் மி11 (விலை சுமார் ₹45,000 முதல்)
பியாஜியோ பிவர்லி 300 சிசி, 400சிசி ஸ்கூட்டர்கள்
பஜாஜ் பிளாட்டினா கிக் ஸ்டார்ட் (விலை சுமார் ரூ.51,667 முதல்)
விரைவில் வாட்ஸ்அப்பில் 7 புதிய வசதிகள்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்