16-இன்ச் மேக்புக் ப்ரோ
2019-12-12@ 17:43:21

ஆப்பிள் நிறுவனம் கடந்த மாதம் புதிய 16-இன்ச் மேக்புக் ப்ரோ லேப்டாப் மாடலை அறிமுகம் செய்தது, குறிப்பாக புதிய மேக்புக் ப்ரோ மாடலில் மேம்பட்ட வடிவமைப்பு கொண்ட கீபோர்டு வழங்கப்பட்டு, லேப்டாப்பின் செயல்திறன் ஒட்டுமொத்தமாக80சதவீதம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் 16-இன்ச் மேக்புக் ப்ரோ மாடலின் விற்பனை துவங்கியுள்ளது. குறிப்பாக ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் தளங்களில் இந்த சாதனம் விற்பனை செய்யப்படுகிறது. இந்த சாதனத்தின் விலை ரூ.1,99,900-முதல் துவங்குகிறது. புதிய ஆப்பிள் மேக்புக் ப்ரோ மாடல் 16-இன்ச் ரெடினா டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 3072 x 1920 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் மேக்புக் ப்ரோ மாடல் ஆக்டோ-கோர் இன்டெல் கோர் ஐ9 பிராசஸர் வசதிம்றும் 2.3ஜிகாஹெர்ட் ஃபேஸ் கிளாக் வேகம் ஆதரவுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்பொருள் அம்சங்களில் 8 ஜிபி விஆர்ஏஎம் மற்றும் ஜிடிடிஆர் 6 வீடியோ மெமரி கொண்ட புதிய ஏஎம்டி ரேடியான் புரோ 5000 எம் சீரிஸ் கிராபிக்ஸ் இவற்றுள் அடங்கும். மேலும், 64 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி / 1 டிபி எஸ்.எஸ்.டி வரை மெமரி ஆதரவு உள்ளது. குறிப்பாக சில்வர் மற்றும் கிரே நிறத்தில் இந்த ஆப்பிள் மேக்புக் ப்ரோ 16-இன்ச் சாதனம் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் டச் ஐடி மற்றும் டச் பார் அம்சங்களுடன் வெளிவந்துள்ளது ஆப்பிள் மேக்புக் ப்ரோ மாடல். பின்பு மேஜிக் கீபோர்டு மற்றும் ஆறு ஸ்பீக்கர் சிஸ்டத்துடன் வெளிந்துள்ளது இந்த ஆப்பிள் சாதனம். குறிப்பாக வூஃப்பர் அம்சம் இருப்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்றே கூறலாம். இந்த ஆப்பிள் மேக்புக் ப்ரோ 16-இன்ச் சாதனத்தில் புளூடூத் 5.0, எச்டி 720p வெப்கேம், 4 எக்ஸ் தண்டர்போல்ட் 3 யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், ஹெட்போன் ஜாக், டிஸ்பிளே போர்ட், வைஃபை போன்ற இணைப்பு ஆதரவுகள் உள்ளது. மேலும் 100வாட் பேட்டரி ஆதரவு கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
Tags:
மேக்புக் ப்ரோமேலும் செய்திகள்
ரியல்மி ஸ்மார்ட் வாட்ச்சுகள் விலை சுமார் ₹4,999 முதல்
கார்பன் மாஸ்க் (விலை சுமார் ₹799)
2கே டிஎஸ்பிளேயுடன் மி11 (விலை சுமார் ₹45,000 முதல்)
பியாஜியோ பிவர்லி 300 சிசி, 400சிசி ஸ்கூட்டர்கள்
பஜாஜ் பிளாட்டினா கிக் ஸ்டார்ட் (விலை சுமார் ரூ.51,667 முதல்)
விரைவில் வாட்ஸ்அப்பில் 7 புதிய வசதிகள்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்