தேசப்பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கடந்த ஆண்டில் 9,811 இந்தியர்கள் கைது...அமெரிக்க குடிவரவு தணிக்கைத் துறை அறிக்கை
2019-12-12@ 10:15:40

வாஷிங்டன்: அமெரிக்காவில் தேசப்பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்ததாகக் கூறி 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாடு தெரிவித்துள்ளது. அமெரிக்காவில், ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் பயங்கரவாதிகளுக்கு எதிராக புதிய கொள்கை ஒன்றை கடந்த வருடம் வகுத்தது. பயங்கரவாதிகளுக்கும், அவர்களை ஆதரிப்போருக்கும் கடும் எச்சரிக்கை விடும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ள இந்த கொள்கையை டிரம்ப் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் பேசுகையில், 'பயங்கரவாத எதிர்ப்பு தேசிய கொள்கை வழிகாட்டுதலின்படி, எங்கள் பெரிய தேசத்தை பாதுகாப்பதற்கு அமெரிக்க வல்லரசின் அனைத்து கருவிகளையும் நாங்கள் பயன்படுத்துவோம்.
அந்தவகையில் அமெரிக்கா, தனது எதிரிகளை முழு பலத்துடன் தோற்கடிக்கும்' என்று தெரிவித்தார். தேசத்துக்கு எதிராக அதிகரித்து வரும் பயங்கரவாத அச்சுறுத்தலையும், 2011-ம் ஆண்டு முதல் நாடு மேற்கொண்டு வரும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளையும் இந்த புதிய பயங்கரவாத எதிர்ப்பு கொள்கை கோடிட்டு காட்டுவதாக கூறிய டிரம்ப், அனைத்து பயங்கரவாத அச்சுறுத்தல்களில் இருந்தும் அமெரிக்காவை பாதுகாக்கவும், அச்சுறுத்தல்களுக்கு பதிலடி கொடுக்கவும் இந்த கொள்கை வழிகாட்டும் என்றும் குறிப்பிட்டார்.
இதற்கிடையே, அமெரிக்க பாதுப்பு தொடர்பாக அந்நாட்டு குடிவரவு தணிக்கைத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க குடியேற்ற மற்றும் சுங்கத்துறை அதிகாரிகளால் கடந்த 2015 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் தேசப் பாதுகாப்பு காரணங்களுக்காக கைது செய்யப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி, கடந்த 2015-ம் ஆண்டில் 3,532 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,811 ஆக உயர்ந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இவர்களில் 831 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளதாகவும், மேலும் பலர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
பிரேசிலில் ஒரே நாளில் 2,070 பேர் பலி: உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30.84 லட்சத்தை தாண்டியது!!
இதுவரை இல்லாத வரலாற்று சாதனை அமெரிக்க துணை அட்டர்னி ஜெனரலாக வனிதா நியமனம்
ஜப்பானில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பு!: தனது இந்திய பயணத்தை ரத்து செய்தார் பிரதமர் யோஷிஹைட் சுகா..!!
கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித்தவிக்கும் உலக மக்கள்...14.44 கோடி பேர் பாதிப்பு....30.70 லட்சம் பேர் பலி!!
தடுப்பூசி போட்டு கொண்ட 3 பேர் ரத்தம் உறைந்து பலி: இலங்கை அரசு அதிர்ச்சி
பாகிஸ்தானில் இருந்து ஊடுருவியதா? போலீஸ் காவலில் புறா! வழக்கு பதிய பஞ்சாப்பில் ஆலோசனை
23-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆக்சிஜன் வாயு கசிந்து விபத்து: நாசிக் மருத்துவமனையில் மூச்சுத்திணறி 24 நோயாளிகள் பரிதாப மரணம்..!!
ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு படையெடுக்கும் மக்கள்; இரவு, பகலாக நீண்ட வரிசையில் காத்திருப்பு; இந்தியாவில் அவலநிலை!!
குவியல் குவியலாக கொரோனா சடலங்கள் எரிப்பு.. ஆம்புலன்சில் காத்து கிடைக்கும் நோயாளிகள்.. கண்ணீர் ததும்ப வைக்கும் படங்கள்!!
அமெரிக்காவில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கருப்பின சிறுமி பலி!: வெடித்தது பெரும் போராட்டம்..!!