SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடந்த ஓராண்டில் 20 அத்தியாவசிய உணவு பொருட்கள் விலை உயர்வு: ஒப்புக் கொண்டது மத்திய அரசு

2019-12-12@ 00:54:41

புதுடெல்லி: கடந்த ஓராண்டில் வெங்காயம் உள்ளிட்ட 20 அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலை உயர்ந்துள்ளதாக மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது. மக்களவையில் நேற்று மத்திய நுகர்வோர், உணவு மற்றும் பொது வினியோகத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் பதிலளித்து பேசியதாவது: மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் 22 அத்தியாவசிய உணவுப் பொருள்களில், 20 உணவுப் பொருள்களின் விலை கடந்த ஓராண்டில் படிப்படியாக உயர்ந்துள்ளது. விலை உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. தேவை, வானிலை மற்றும் பருவநிலை காரணமாக உற்பத்தி பற்றாக்குறை, போக்குவரத்து செலவு அதிகரிப்பு, பதுக்கல், கருப்பு சந்தை போன்றவற்றால் உருவாக்கப்பட்ட செயற்கை பற்றாக்குறையால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. வெங்காயம் மட்டுமின்றி அரிசி, கோதுமை, கடலை, உளுந்து மற்றும் பாசிப் பருப்பு, எண்ணெய், தேயிலை, சர்க்கரை, பால், உருளைக் கிழங்கு, தக்காளி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலை உயர்ந்துள்ளது. வெங்காயத்தின் விலை கடந்த மார்ச் மாதத்துக்கு பின்னர் 400 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஒட்டு மொத்த விலை உயர்வு 15ல் இருந்து 20 சதவீதமும், நல்ல விளைச்சல் இருந்தும் அரிசி, கோதுமை ஆகியவற்றின் விலை 10 சதவீதமும், உருளைக் கிழங்கு விலை 40 சதவீதமும் உயர்ந்துள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருள் சட்டத்தின் கீழ் உணவுப் பொருள்களின் பற்றாக்குறை, விலை நிர்ணயம், போக்குவரத்து ஆகியவற்றை கட்டுப்படுத்த மாநிலங்களுக்கு மத்திய அரசு ஏற்கனவே அதிகாரம் அளித்துள்ளது. இவ்வாறு கூறினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News Advertisement
Like Us on Facebook Dinkaran Daily News
  • haryana28

    மதம் மாற மறுத்த இளம்பெண்..பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்டு கொலை!: குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி பல இடங்களில் ஆர்ப்பாட்டம்..!!

  • water28

    தென் அமெரிக்காவில் 2,000 ஆண்டுக்களுக்கு முந்தைய மக்களான மயன் நாகரிகத்தினர் பயன்படுத்திய நீர் சுத்திகரிப்பு மையம் கண்டுபிடிப்பு: ஆச்சர்யத்தில் ஆய்வாளர்கள்..!!

  • biharele28

    கொரோனா பாதிப்புகளுக்கு இடையே பீகார் சட்டசபை தேர்தல் 2020: முதல் கட்டமாக 71 தொகுதிகளில் வாக்கு பதிவு தொடக்கம்..!!

  • pakistanbomb27

    பாகிஸ்தானில் மத பாடசாலையில் பயங்கர குண்டு வெடிப்பு!: சிறுவர்கள் உள்பட 7 பேர் பலி...70க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!!

  • bee27

    6 லட்சத்துக்கும் அதிகமான தேனீக்களை உடலில் சுமந்து சீன இளைஞர் கின்னஸ் சாதனை!: பேஸ்புக்கில் கலக்கும் வித்தியாசமான சாதனை முயற்சி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்