SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

2020 முதல் பழைய மொபைல் போன்களில் வாட்ஸ்ஆப் இயங்காது

2019-12-11@ 17:37:49

வரும் பிப்ரவரி மாதத்தில் இருந்து கோடிக்கணக்கான மொபைல் போன்களில் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்த முடியாது என அறிவித்து அதன் உரிமையாளரான ஃபேஸ்புக் நிறுவனம் அதிர்ச்சி அளித்துள்ளது.

iOS8 அல்லது அதற்கு முந்தைய மென்பொருளில் இயங்கும் ஆப்பிள் போன்கள், 2.3.7 அல்லது அதைவிடவும் பழைமையான ஆன்டிராய்டு மென்பொருளில் இயங்கும் அனைத்து போன்களிலும் வாட்ஸ்ஆப் கிடைக்காது. அதே போன்று வின்டோஸ் போன்களில் வரும் 31 ஆம் தேதிக்குப் பிறகு வாட்ஸ்ஆப்பை பயன்படுத்த முடியாது.

இந்த வகை போன்களை வைத்துள்ளவர்களால் புதிய வாட்ஸ்ஆப் கணக்குகளை துவக்கவோ, பழைய கணக்குகளை புதுப்பிக்கவோ முடியாத வகையில் ஏற்கனவே தொழில்நுட்ப மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இதனிடையே அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்காவின் பல நாடுகளில் வாட்ஸ்ஆப் செயலி முடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.




மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-09-2020

    26-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-09-2020

    25-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-09-2020

    24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • mumbairain23

    விடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்!: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..!!

  • ele23

    தென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி!: ஆய்வாளர்கள் அதிர்ச்சி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்