இவர் தான் ஒரிஜினல் மோனலிசா!
2019-12-10@ 12:35:01

நன்றி குங்குமம் முத்தாரம்
உலகப் புகழ்பெற்ற ஓவியம் மோன லிசா. இன்று மீம்ஸ் கிரியேட்டர்களின் கையில் கிடைத்து அல்லோலகல்லோலப்படுகிறது. ஆனால், இந்த மோனலிசா ஓவியத்தை டாவின்சி வரைய யார் போஸ் கொடுத்திருப்பார் என்ற சந்தேகம் பலருக்கு இருக்கிறது. இந்தச் சந்தேகத்தை ஓரளவுக்குத் தீர்த்து வைக்கிறது இந்தச் சம்பவம்.
இத்தாலியில் உள்ள ஃப்ளோரன்ஸ் நகர சர்ச் ஒன்றிலிருந்து சில எலும்புத்துண்டுகள் கிடைத்திருக்கின்றன. ஒரு வேளை மோனலிசா ஓவியத்துக்கு போஸ் கொடுத்த பெண்ணாக இருக்கலாம் என்று சந்தேகிக்கிறார்கள் ஆய்வாளர்கள்.
தவிர, கெரார்தினி என்ற பெண்தான் மோனலிசா மாடல் என நம்பப்படுகிறது. காரணம், பெயர்ப் பொருத்தம். அதுமட்டுமில்லாமல், வசதி படைத்த பட்டு வியாபாரி ஒருவரின் மனைவி இவர். இவரை ஓவியர் டாவின்ஸி ஓவியமாக வரைந்தார் என்ற வரலாற்றுச் செய்தி 16ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜியார்ஜியோ வசாரி என்பவரால் பதிவு செய்யப்
பட்டிருக்கிறது.
ஆக, கெரார்தினியை டாவின்ஸி வரைந்த ஓவியம்தான் இந்த மோனலிசா என்கிறார்கள். இந்த மாடல், 1542ம் வருடம் தனது 63ம் வயதில் இறந்து போனதாகவும், அவர் ஃப்ளோரன்ஸ் நகரிலேயே புதைக்கப்பட்டதாகவும் குறிப்புகள் உள்ளன. அந்தக் குறிப்புகள் சொல்லும் இடத்தில் கிடைத்திருப்பவைதான் மேற் காணும் சில எலும்புகள்.
‘டி.என்.ஏ டெஸ்ட் எடுத்துப் பார்த்தாலும் இவர்தான் அவர் என்பதை உறுதி செய்ய அவரின் உறவினர்கள் எவருடைய டி.என்.ஏ சாம்பிளும் நம்மிடம் இல்லை. இருப்பினும் நாங்கள் இந்த எலும்புகள் மோனலிசாவினுடையதா என்பதை உறுதி செய்தே தீருவோம்' என்கிறார் இந்த எலும்புகளை ஆய்வு செய்யும் தலைமை ஆய்வாளர் சில்வனோ வின்சென்டி.
மோனலிசா மாடல் இவர் தான் என்று நிரூபித்தாலும் மோனலிசாவும் அவரும் ஒரு வரே என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மோனலிசாவைப் போலவே டாவின்ஸி கெரார்தினையை வேறொரு ஓவியமாகத் தீட்டியிருக்கலாம். அது காலத்தால் அழிந்து போயிருக்கலாம். ‘‘இதற்காக பெரும் பணம் செலவிடுவது வீண்...’’ என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
மேலும் செய்திகள்
7 தலைமுறைகள்... 260 வருடங்கள்... சென்ட் தயாரிப்பில் நம்பர் ஒன்!
ஃபாரின் பொங்கல்!
துள்ளட்டும் காங்கேயம் காளைகள்
இவங்க வேற மாதிரி அம்மா!
யானைகளுக்கு கஷ்ட காலம்!
கொரோனாவுக்குப் பிறகும் சினிமா வாழுமா?
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்