இறங்குமுகத்தில் தங்கத்தின் விலை: சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.88 குறைந்து 28,752-க்கு விற்பனை
2019-12-10@ 11:51:16

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.11 குறைந்து ரூ.3,596க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு 88 குறைந்து ரூ.28,752க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.46.40க்கு விற்பனையாகிறது.
தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம்
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது. இதன் எதிரொலியாக உள்ளூரிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் உண்டாகிறது. கடந்த ஜனவரி மாதம் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு சவரன் தங்கம் விலை 25 ஆயிரம் ரூபாயைத் தாண்டி விற்பனை ஆனது. பின் ஜூன் மாதம் 26 ஆயிரம் ரூபாயை தாண்டி, ஆகஸ்ட் மாதம் 27 ஆயிரம், 28 ஆயிரம், 29 ஆயிரம் என அடுத்தடுத்த மைல்கல்களை எட்டியது. செப்டம்பரில் 30 ஆயிரத்தைத் தாண்டியும் குறைந்தும் மாற்றம் நிலவி வந்தது. அக்டோபர் ,நவம்பர் மாதங்களில் தங்கத்தின் விலை தொடர்ந்து 29 ஆயிரத்தை தாண்டியும் குறைந்தும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. டிசம்பர் மாதத்திலும் தங்கத்தின் விலையில் ஏற்ற இரக்கமே நீடித்து வருகிறது.
இறங்குமுகத்தில் தங்கத்தின் விலை..
சென்னையில் இன்று (டிசம்பர் 10) ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை (22 கேரட்) கிராமிற்கு 11 ரூபாய் குறைந்து 3,596 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, நேற்று 28,840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.88 குறைந்து இன்று 28,752 ரூபாயாக விற்பனையாகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி வரலாற்றில் ரூ. 29 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை 3 மாதங்களுக்கு பிறகு கடந்த நவம்பர் 13ம் தேதி அதற்கு கீழே இறங்கியது. இதனால் நகை வாங்குவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஒரு கிராம் வெள்ளி ரூ.46.40க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் செய்திகள்
இனி தங்க வேட்டை தான்... ஆபரணத் தங்கத்தின் விலை செம குறைவு... சவரனுக்கு ரூ.384 குறைந்து ரூ.36,864க்கு விற்பனை!!
செம தள்ளுபடியில் தங்கம் விலை.. நகை வாங்குவோருக்கு ஜாக்பாட் தான்.. 6வது நாளாக விலை சரிவு... சவரன் ரூ.37.416க்கு விற்பனை!!
செம சரிவில் தங்கம் விலை... தொடர்ச்சியாக 5 நாட்களில் சவரன் ரூ.1,664 அளவுக்கு குறைந்து ரூ.37,440க்கு விற்பனை!!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில் சதம் அடித்த முருங்கைக்காய்: உச்சமடையும் கத்தரிக்காய் விலை
பண்டிகை காலத்தில் நகை பிரியர்களுக்கு ஜாக்பாட்: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்து ரூ.37,296-க்கு விற்பனை..!
கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி; 1 கோடி முட்டை நாமக்கல்லில் தேக்கம்: 4 நாட்களில் 50 காசு விலை குறைப்பு
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்