SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உரிமைகள் உனக்கானது, யாரும் கொடுக்கவோ,பறிக்கவோ முடியாது..சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று!!

2019-12-10@ 10:45:41

1948-ம் ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி பாரீஸ் நகரில் அன்றைய ஐநா சபை தலைமையகம் இருந்தது. 58 நாடுகள் இணைந்த ஐநா சபையில் 48 நாடுகளின் ஒத்துழைப்பு வாக்குகளுடன் 'சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம்’ அறிவிக்கப்பட்டது.அதன் பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்துதான் டிசம்பர் 10-ம் தேதியை சர்வதேச மனித உரிமைகள் தினமாக ஐநா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

உலக நாடுகள் அனைத்திலும் மனித உரிமைகள் அனைத்து சூழ்நிலைகளிலும் மீட்கப்பட வேண்டும் என்பதே ஐநா-வின் குறிக்கோளாக இருந்தது. இதற்காக உலக நாடுகள் பலவற்றிலும் பிரச்சாரங்களும், விவாதங்களும், விழிப்பு உணர்வு பேரணிகளும் நடத்தப்பட்டன.மேலும் மனித உரிமைகள் மீதான விழிப்பு உணர்வுக்காக 1966-ம் ஆண்டு முதல் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை ’மனித உரிமைகள் களத்தில் சிறந்தோருக்கான ஐநா விருது’ அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தின் 71-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு புதிய தீம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #‘Youth Standing Up for Human Rights என்ற கொள்கையின் அடிப்படையில் இந்தாண்டுக்கான ஐநா மனித உரிமைகள் மையம் செயல்பட உள்ளது. இந்தாண்டுக்கான மனித உரிமைகள் தினம், சுதந்திரத்திற்காகவும், நீதிக்காகவும் அமைதியான முறையில் எழுச்சியாய் வரும் பெண்கள், ஆண்கள், இளைஞர்கள் உள்ளிட்டோரை வரவேற்று கொண்டாடுகிறது. அதுமட்டுமின்றி இந்தாண்டுக்கான நோக்கம் “அனைத்து தரப்பட்ட மக்களின் உள்நாட்டு மொழிகள் கலாச்சாரத்தை ஊக்குவித்தல் மற்றும் ஆழப்படுத்துதல்” ஆகும்.

மனித உரிமைகள் ஆணையம் சொல்வது மட்டுமின்றி உரிமைகள் என்பது நமக்கானது. இது யாரும் நமக்கு கொடுக்க மாட்டார்களா! அல்லது யாரும் நமது உரிமைகளை பறிப்பார்களா என்று எதிர்பார்க்கவோ… கவலைப்படவோ தேவையில்லை. நமக்கான உரிமையை நாமே நிலை நாட்டுவோம்.இந்த மனித உரிமைகள் தினத்தன்று மனிதம் மட்டுமின்றி உலகில் உள்ள அனைத்து உயிர்களின் உயிர்மையையும் போற்றுவோம்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-09-2020

    26-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-09-2020

    25-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-09-2020

    24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • mumbairain23

    விடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்!: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..!!

  • ele23

    தென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி!: ஆய்வாளர்கள் அதிர்ச்சி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்