வியட்நாமில் இருந்து மொபைல் உதிரிபாகங்கள் இறக்குமதியால் ஆபத்து : உற்பத்தியாளர்கள் கவலை
2019-12-10@ 00:18:53

புதுடெல்லி: வியட்நாமில் இருந்து எலக்ட்ரானிக் பொருட்கள் இறக்குமதி அபரிமிதமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக மொபைல் போன் உதிரி பாகங்கள் அதிகமாக இறக்குமதி செய்யப்படுகிறது. நடப்பு நிதியாண்டில் முதல் அரையாண்டில் மட்டும் வியட்நாமில் இருந்து 100 கோடி டாலர் மதிப்பிலான மொபைல் போன் உதிரி பாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் அடிப்படையில் இவை மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுகுறித்து இந்திய மொபைல் போன் மற்றும் எலக்டரானிக் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கூறியதாவது: நடப்பு நிதியாண்டில் முதல் அரையாண்டிலேயே 100 கோடி டாலர் மதிப்பிலான மொபைல் போன் உதிரி பாகங்கள் வியட்நாமில் இருந்து இறக்குமதி ஆகியுள்ளன. ஆனால், 2017-18 நிதியாண்டில் இது 60 கோடி டாலராக மட்டுமே இருந்துள்ளது.
இதே நிலை தொடர்ந்தால், எலக்ட்ரானிக் மற்றும் தொழில்நுட்ப துறையினர் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். தற்போது அதிக வரி விதிப்புகள் உள்ளன. இவற்றை குறைக்க வேண்டும். மாறாக வரியை அதிகரித்தால் பாதிப்பு அதிகமாகிவிடும். மத்திய அரசு 12க்கும் மேற்பட்ட மொபைல் பாக இறக்குமதி மீது 15 சதவீதம் வரையிலும், மொபைல் போன்களாக இறக்குமதி செய்ய 20 சதவீதம் வரையிலும் வரி விதித்தது. அதோடு, வெளிநாட்டு மொபைல் நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்து வருகின்றன. ஆனால், வியட்நாமில் இருந்து தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தை பயன்படுத்தி முறைகேடாக இறக்குமதி செய்வதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன. இது மின்னணு தேசிய கொள்கையின்படி நிர்ணயிக்கப்பட்ட உள்நாட்டு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி இலக்கை அடைய தடையாக இருக்கும். எனவே அரசு இந்த விஷயத்தில் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது என்றனர்.
மேலும் செய்திகள்
இனி தங்க வேட்டை தான்... ஆபரணத் தங்கத்தின் விலை செம குறைவு... சவரனுக்கு ரூ.384 குறைந்து ரூ.36,864க்கு விற்பனை!!
செம தள்ளுபடியில் தங்கம் விலை.. நகை வாங்குவோருக்கு ஜாக்பாட் தான்.. 6வது நாளாக விலை சரிவு... சவரன் ரூ.37.416க்கு விற்பனை!!
செம சரிவில் தங்கம் விலை... தொடர்ச்சியாக 5 நாட்களில் சவரன் ரூ.1,664 அளவுக்கு குறைந்து ரூ.37,440க்கு விற்பனை!!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில் சதம் அடித்த முருங்கைக்காய்: உச்சமடையும் கத்தரிக்காய் விலை
பண்டிகை காலத்தில் நகை பிரியர்களுக்கு ஜாக்பாட்: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்து ரூ.37,296-க்கு விற்பனை..!
கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி; 1 கோடி முட்டை நாமக்கல்லில் தேக்கம்: 4 நாட்களில் 50 காசு விலை குறைப்பு
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்