SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பலாத்கார குற்றவாளிகளால் எரித்து கொல்லப்பட்ட உன்னாவ் இளம்பெண் இறுதிச்சடங்கு நடந்தது: குடும்பத்தினர் திடீர் போராட்டம்

2019-12-09@ 00:15:20

உன்னாவ்: உன்னாவில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டவர்களால் எரித்து கொல்லப்பட்ட இளம்பெண்ணின் இறுதிச் சடங்கு நேற்று நடந்தது. உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவில் கடந்தாண்டு இளம்பெண் ஒருவர் 5 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது குறித்து இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் 5 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இவர்களில் இரண்டு பேர் சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தனர். கடந்த வியாழன்று நீதிமன்றத்துக்கு செல்லும் வழியில் அந்த இளம்பெண்ணை கூட்டாளிகளுடன் சேர்த்து வழி மறித்த இவர்கள், அவரை தாக்கி தீ வைத்து எரித்தனர். ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அவர், டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பலன் அளிக்காமல் கடந்த வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தார். இதனால், நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இறந்த இளம்பெண்ணின் சடலம், உன்னாவில் உள்ள சொந்த ஊருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது. ஆனால், முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரில் வந்து தங்கள் மகளின் சாவுக்கு பதில் கூறினால் மட்டுமே இறுதி சடங்குக்கு அனுமதிப்போம் என குடும்பத்தினர் வலியுறுத்தினர்.

உயிரிழந்த இளம்பெண்ணின் சகோதரிக்கு அரசு வேலை வழங்க வேண்டும், குற்றவாளிகளுக்கு உடனடி தண்டனை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளையும் அவர்கள் முன்வைத்தனர். லக்னோ காவல்துறை ஆணையர் முகேஷ் மெஷ்ராம், இளம்பெண்ணின் குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, இறுதிச் சடங்கை நடத்த குடும்பத்தினர் ஒப்புக் கொண்டனர். பின்னர், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இறுதிச் சடங்கு நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்,
முன்னதாக, நேற்று முன்தினம் உத்தரப் பிரதேச அமைச்சர் சுவாமி பிரசாத் மவுரியா மற்றும் கமல் ரானி வருண்ஆகியோர் இளம்பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்கள். அப்போது, ₹25 லட்சத்துக்கான காசோலையை வழங்கினர். பிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு வழங்கப்படும் என்றும், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும் என்றும் உறுதி அளித்தனர்.

குற்றவாளிகளுடன் பாஜ.வுக்கு தொடர்பு
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, பலியான உன்னாவ் இளம்பெண்ணின் குடும்பத்தினரை நேற்று முன்தினம் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவர், ``உபி.யில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க மாநில அரசு தவறி விட்டது. உன்னாவ் பெண்ணுக்கு நீதி வழங்க முடியாமல் போனதற்கு நாம் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுடன் பாஜ தலைவர்களுக்கு தொடர்புள்ளது,’’ என்று குற்றம்சாட்டினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • corona-modi1

  கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்

 • myan-firing1

  மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!

 • itaklyyychha

  இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது

 • 01-03-2021

  01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 28-02-2021

  28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்