பாஜ.வுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கும் திட்டம் பற்றி சரத் பவாருக்கு தெரியும்: அஜித் பவார் கூறியதாக தேவேந்திர பட்நவிஸ் தகவல்
2019-12-09@ 00:13:16

மும்பை: தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் தன்னை அணுகியபோது பாஜ.வுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கும் தனது திட்டம் பற்றி சரத் பவாருக்கு தெரியும் என்று கூறியதாக முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவாருடன் சேர்ந்து பாஜ அமைத்த அரசு மூன்று நாட்கள் மட்டுமே தாக்குப் பிடித்தது. அதன் பிறகு முதல்வர் பதவியை தேவேந்திர பட்நவிஸ் ராஜினாமா செய்து விட்டார். அஜித் பவாரும் துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் தேசியவாத காங்கிரசுக்கு திரும்பினார்.
இந்த நிலையில் டிவி சேனல் ஒன்றுக்கு தேவேந்திர பட்நவிஸ் அளித்துள்ள பேட்டி வருமாறு:அஜித் பவார் என்னிடம் வந்து, காங்கிரஸ் - சிவசேனாவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க தாங்கள் விரும்பவில்லை என்றும் அந்த அரசு நிலையானதாக இருக்காது என்றும் சொன்னார். மேலும் பாஜ.வுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கும் தனது திட்டத்தை கட்சியின் தலைவர் சரத் பவாரிடம் தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.இதுபற்றி பவாருக்கு தெரியுமா என்பதை நீங்கள் அவரிடம்தான் கேட்க வேண்டும். திரைமறைவில் பல வேலை நடந்துள்ளன. உரிய நேரத்தில் அதை வெளியிடுவேன் என்றார்.
மேலும் செய்திகள்
மேற்குவங்கம், கேரளா, அசாமில் ஆளுங்கட்சிக்கு மீண்டும் வாய்ப்பு தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடிக்கும்: ஐஏஎன்எஸ், சி-வோட்டர் கருத்துக்கணிப்பில் பரபரப்பு தகவல்
சிறுநீரக கோளாறு காரணமாக நடிகர் அமிதாப் பச்சன் மும்பையில் தனியார் மருத்துவமனையில் அனுமதி
மத்திய சுகாதாரத் துறை வழிகாட்டுதலின்படி நாளை முதல் 27 கோடி மூத்த குடிமக்களுக்கு தடுப்பூசி: தனியார் மருத்துவமனையில் ரூ.250 கட்டணம் வசூலிக்க அனுமதி
தமிழ் கற்பதில் தோல்வி அடைந்தேன் : மன்கிபாத்தில் பிரதமர் மோடி வருத்தம்
பிரிட்டிஷ் அரசை துரத்திய நமக்கு மோடி அரசை துரத்துவது கடினமான வேலை அல்ல: ராகுல்காந்தி எம்.பி. ஆவேசம்..!!
அமசோனியா-1 உள்ளிட்ட 19 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட்..!
28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
27-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!