மூணாறில் குளிர்கால திருவிழா சின்னம் வெளியீடு
2019-12-08@ 13:11:22

மூணாறு : மூணாறில் சுற்றுலாப்பயணிகளை வரவேற்கும் வகையில் குளிர்கால திருவிழாவின் சின்னம் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறில் குளிர்கால திருவிழா துவங்க உள்ளது. இடுக்கி மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் டிச.21ம் தேதி முதல் ஜன.5ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. கலைநிகழ்ச்சிகள், மலர் கண்காட்சி, உணவு கண்காட்சி, ஆகாய கண்காட்சி மற்றும் பல்வேறு விளையாட்டுகள் குளிர்கால திருவிழாவில் இடம்பெறுகிறது. இத்திருவிழாவிற்கான சின்னத்தை எர்ணாகுளத்தை சேர்ந்த நந்து வடிவமைத்துள்ளார். இந்த சின்னத்தை இடுக்கி மாவட்ட கலெக்டர் தினேஷன், தேவிகுளம் துணை கலெக்டர் பிரேம் கிருஷ்ணன் வெளியிட்டனர். சுற்றுலாத்துறை துணை இயக்குனர் தாமஸ் ஆண்டனி, மாவட்ட சுற்றுலாத்துறை இயக்குனர் விஜயன், தாசில்தார் குன்னப்பள்ளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
உலக அரங்கில் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி மாலை 5 மணியுடன் நிறைவு..!
வரும் 23ம் தேதி கோவை வருகை ‘மெகா ரோடு ஷோ’ ராகுல் காந்தி பங்கேற்பு தமிழகத்தில் 3 நாள் சுற்றுப்பயணம் செய்ய திட்டம்..!
தென் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை : வானிலை ஆய்வு மையம் தகவல்
முனியாண்டி கோயில் திருவிழா :100 கிடாய்கள் வெட்டி அன்னதானம்
மீண்டும் முதல்வர் எடப்பாடி தானாம் : கிளி ஜோசியம் பார்த்த அமைச்சர்
மாட்டுப்பொங்கலை முன்னிட்டு கட்டுமாவடி மீன் மார்க்கெட்டில் மீன் வாங்குவதற்கு குவிந்த மக்கள்: விலை உயர்வு
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்