SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொடைக்கானலில் கிறிஸ்துமஸை வரவேற்க பூத்துக்குலுங்கும் சிலுவை பூக்கள்

2019-12-08@ 13:05:37

*சுற்றுலாப்பயணிகள் உற்சாகம்

கொடைக்கானல் :  கொடைக்கானல் பிரயண்ட் பூங்கா மற்றும் தனியார் தோட்டங்களில் கிறிஸ்துமஸ், புத்தாண்டை வரவேற்கும்விதமாக சிலுவை பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன. ‘மலைகளின் இளவரசி’ என அழைக்கப்படும் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த 2 வாரங்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இரவில் குளிருடன் கூடிய சூழ்நிலை நிலவி வருகிறது. கொடைக்கானல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பிரயண்ட் பூங்காவில் நடவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

 எந்த ஒரு பூக்களும் இல்லாத நிலையில்  கண்ணாடி மாளிகை மற்றும் செட்டியார் பூங்காவிலும், தனியார் தோட்டங்களிலும்  கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்கும்விதமாக டிசம்பர் மாதத்தில் மட்டும் பூக்கும் சிலுவை பூக்கள் பூத்து குலுங்குகின்றன. ‘எபிடென்ரோபியம் ஜீசஸ் கிராஸ்’ என்ற தாவரவியல் பெயர் கொண்ட இந்த சிலுவை பூக்கள், குளிர் பிரதேசமான கொடைக்கானல் போன்ற இடங்களில் மட்டுமே பூக்கக்கூடியது.


குறிப்பாக, டிசம்பர் மாதத்தில் மட்டுமே இந்த வகை பூக்கள் பூக்கும். இந்த சிலுவை பூக்கள் சிகப்பு மற்றும் ஆரஞ்ச் நிறத்தில் சிலுவை வடிவில், கண்களுக்கு விருந்தளிக்கும் விதமாக பூத்து குலுங்குவதால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • tn-school19

    தமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..!!

  • jesee_chrrr1

    3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்!!

  • 19-01-2021

    19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • chile-wildfire18

    சிலியில் வேகமாக பரவும் காட்டுத்தீ!: புகைமூட்டத்துடன் செந்நிறமாக காட்சியளித்த வானம்...புகைப்படங்கள்

  • china-hospital18

    சீனாவில் தீவிரமாக பரவும் கொரோனா வைரஸ்!: 5 நாளில் கட்டப்பட்ட 1,500 அறை கொண்ட மருத்துவமனை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்