தாம்பரம், பீர்க்கன்காரணையில் அடுத்தடுத்த வீடுகளை உடைத்து 66 சவரன், 1.7 லட்சம் கொள்ளை: ஆசாமிகளுக்கு வலை
2019-12-08@ 06:48:50

தாம்பரம்: மேற்கு தாம்பரம், கிருஷ்ணா நகர், 6வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் முருகன் (40). பெருங்குடியில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பிரசவத்திற்காக சொந்த ஊரான கோவைக்கு சென்றுள்ளார்.
முருகன் தனது மனைவியை பார்க்க கடந்த வாரம் வீட்டை பூட்டி விட்டு கோவைக்கு சென்றார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு முருகன் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்த பக்கத்து வீட்டை சேர்ந்த சரோஜா என்பவர், இதுகுறித்து முருகனுக்கு செல்போனில் தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில், நேற்று காலை முருகன் தனது வீட்டிற்கு வந்து பார்த்தபோது, பீரோவில் இருந்த 60 சவரன் நகை, 20 ஆயிரம் கொள்ளை போனது தெரியவந்தது.
அதே வளாகத்தில் உள்ள மற்றொரு அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் சந்தோஷ் (25). என்பவர் வீட்டின் பூட்டும் உடைக்கப்பட்டு பீரேவில் இருந்த 30 ஆயிரம் மதிப்புடைய வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாசரிக்கின்றனர். மற்றொரு சம்பவம்: பீர்க்கன்காரணை ஸ்ரீநிவாசா நகர் சூரத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (31). சமையல் வேலை செய்துவருகிறார். இவர், கடந்த 4ம் தேதி வெளியூர் சென்றார். அவரது மனைவி வீட்டை பூட்டி விட்டு தாயார் வீட்டிற்கு சென்றார்.
இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 6 சவரன் நகை, ₹1.5 லட்சம் கொள்ளை போனது தெரியவந்தது. சம்பவம் குறித்து பீர்க்கன்காரணை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
சூதாட்டம், மது விற்பனை கோவையில் பாஜ பிரமுகர்கள் உள்பட 86 பேர் கைது
துபாய் விமானத்தில் தங்கம் கடத்தல்
மாங்காடு அருகே பரிதாபம்: கால்களை உடைத்து நாய் கொடூர கொலை: 3 பேருக்கு வலை
பொங்கல் விழாவை தடுத்த ரவுடியை வெட்டி கொல்ல முயற்சி: கும்பலுக்கு வலை
மூதாட்டியை தாக்கி 10 சவரன், பணம் கொள்ளை
கஞ்சா கடத்தியவர் கைது
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்